இறைவர் திருப்பெயர்: ஜகதீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: ஜகந்நாயகி.
தல மரம்:
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்.
வழிபட்டோர்:அப்பர்.
Sthala Puranam
பேரையூர் என்ற பெயரில் பல ஊர்களிருப்பதால் மக்கள் இப்பதியை ஓகைப்பேரையூர் என்று வழங்குகின்றனர். வங்காரப்பேரையூர் என்ற பெயரும் வழங்குகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர் - 1. மறையு மோதுவர் மான்மறிக் (5.16);
Specialities
சோழ நாட்டின் தலைநகராகத் திருவாரூர் விளங்கியபோது அதைச் சார்ந்த கோட்டை இருந்தது என்றும்; அக்கோட்டையின் அருகே எழுந்த ஊர் 'பேரெயிலூர் ' என்று பெயர் பெற்றதென்றும் அப்பெயரே மருவி "பேரையூர் " என்றாயிற்று என்பது ஆய்வாளர் கருத்து.
இவ்வூரில் தோன்றிய பெண் புலவர் ஒருவர் - பேரெயில் முறுவலார் - பாடிய பாடல்கள் குறுந்தொகையிலும், புறநாநூற்றிலும் உள்ளன.
Contact Address