இறைவர் திருப்பெயர்: பாதாள வரதர், பாதாளேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: அலங்காரவல்லி
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், திருமால் முதலியோர்
Sthala Puranam
இத்தல இறைவன் முன்பு, திருமால் பன்றி வடிவம்கொண்டு பூமியைத் தோண்டி துவாரம் செய்தத் தலமாதலால், இப்பெயர் பெற்றது.
இஃது, வராக அவதாரமெத்த திருமாலின் கொம்பைப் பறித்து இறைவன் அணிந்து கொண்டத் திருத்தலமாகும்.
![]() |
![]() |
![]() |
திருமுறை பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. பைத்த பாம்போடு (3.30); பாடல்கள் : அப்பர் - வீழி மிழலை (6.70.7); சேக்கிழார் - பாடும் அரதைப் பெரும் பாழியே (12.28.403) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
மூலவருக்கு முன்னர் ஒரு பெரிய பள்ளம் இருப்பதை இன்றும் காணலாம்.
இக்கோவிலில், மூன்றாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டு ஒன்று மட்டும் உள்ளது.
முல்லைவனமாகிய திருக்கருகாவூரில் உஷக் காலத்திலும், பாதிரி வனமாகிய அவளிவ நல்லூரில் கால சந்தி காலத்திலும், வன்னி வனமாகிய ஹரித்துவார மங்கலத்தில் (அரதைப்பெரும் பாழியில் ) உச்சிக்காலத்திலும், பூளைவனமாகிய ஆலங்குடியில் (திரு இரும்பூளையில் ) சாயரக்ஷையிலும் , திருக்கொள்ளம்பூதூரில் அர்த்த ஜாம தரிசனமும் செய்வது மிகவும் சிறந்த பலன்களை அளிக்க வல்லது என்பார்கள். இவை ஐந்தையும் ஒரே நாளிலும் தரிசிப்பர்.
Contact Address