இறைவர் திருப்பெயர்: முக்தபுரீஸ்வரர், திருப்பயற்றுநாதர்.
இறைவியார் திருப்பெயர்: நேத்ராம்பிகை, காவியங்கண்ணி.
தல மரம்:
தீர்த்தம் : கருணா தீர்த்தம் (இதனை பிரம தீர்த்தம் என்றும் கூறுவர்).
வழிபட்டோர்: அப்பர்,பைரவ மகரிஷி.
Sthala Puranam
இன்று மக்களால் 'திருப்பயத்தங்குடி' என்று வழங்கப்படுகிறது.
சுங்கம் கொடுக்க அஞ்சிய வணிகன் ஒருவன், சுங்கமில்லாத பயறு மூட்டைகளாகத் தன் மிளகுப் பொதிகளை மாற்றித் தருமாறு வேண்ட, அவனுக்கு இறைவன் பயறு மூட்டைகளாக மாற்றித் தந்து அருளியதால் பயற்றுநாதர் என்று பெயர் பெற்றார் என்பது செவி வழிச் செய்தி.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர் - 1. உரித்திட்டார் ஆனை (4.32); பாடல்கள் : அப்பர் - செழுநீர்ப் புனற்கெடில (6.07.5).
Specialities
மூலவர் - ஆவுடையார் நாற்கோண வடிவம்; பழமையான திருமேனி.
இங்குள்ள கருணா தீர்த்தத்தில் மூழ்கி அம்பிகையை வழிபட்டால் கண்நோய் நீங்கும் என்றொரு செய்தி சாசனத்தின் மூலம் தெரிய வருகிறது.
(தலமரமாகிய சிலந்தி மரம் - இம்மரத்தின் மலர்கள் மஞ்சள் நிறத்தில் சிலந்தி பூச்சி வடிவில் இருக்கும். சித்திரை வைகாசியில் பூக்கும் - மணமுண்டு; இலை, புன்னையிலைபோல இருக்கும்.)
Contact Address