இறைவர் திருப்பெயர்: வடுகீஸ்வரர், வடுகநாதர், வடுகூர்நாதர்.
இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கண்ணி.
தீர்த்தம் : வாமதேவ தீர்த்தம். பெண்ணையாறு
வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், வடுக பைரவர்(சம்ஹார பைரவர்).
Sthala Puranam
வடுகூர் என்ற பெயர் பிற்கால வழக்கில் ஆண்டார்கோயில் என்றாகி இன்று மக்கள் வழக்கில் "திருவாண்டார்கோயில்" என்று வழங்குகிறது.
அஷ்டபைரவர்களுள் ஒருவராகிய வடுக பைரவர், முண்டகன் என்னும் அசுரனைக் கொன்ற பழிதீர வழிபட்ட தலமாதலின்; வடுகர் வழிபட்டது வடுகூர் என்று பெயர் பெற்றது.
ஆண்டவனார் கோயில் என்பது கோயிலுக்குப் பெயர்; கோயிற் பெயரே பிற்காலத்தில் ஊருக்குப் பெயராயிற்று - ஆண்டார் கோயில். 'திரு' என்னும் அடைமொழி சேர்ந்து 'திருஆண்டார் கோயில்' என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில் என்றாயிற்று.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. சுடுகூ ரெரிமாலை யணிவர் (1.87); சேக்கிழார் - கன்னி மாவனம் காப்பு (12.28.963) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
Contact Address