logo

|

Home >

hindu-hub >

temples

மயிலாடுதுறை

இறைவர் திருப்பெயர்: மயூரநாதர்.

இறைவியார் திருப்பெயர்: அபயாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : பிரம தீர்த்தம், காவிரி, ரிஷப தீர்த்தம்.

வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சேக்கிழார், இந்திரன், பிரமன், வியாழபகவான், அகத்தியர், சப்தமாதாக்கள், உமாதேவி, , அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு ஆகியோர்.

Sthala Puranam

 

Mayiladuturai temple

  • அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும்; மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று. அம்மை அவ்வாறு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும்; இதனால் இத்தலம் "கௌரி மாயூரம்" என்றும் பெயர் பெற்றது.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்   - 	 1. கரவின் றிநன்மா மலர் (1.38),
                                         2. ஏனவெயி றாடரவோ (3.70);

                      அப்பர்   -	 1. கொள்ளுங் காதன்மை பெய் (5.39); 

பாடல்கள்      :     அப்பர்   -        கயிலாய மலையுள்ளார் (6.51.1), 
                                        சடையேறு (6.59.4), 
                                        கயிலாயமலை (6.71.11), 
                                        மற்றாருந் (6.81.4), 

                   சேக்கிழார்  -        மேவு புனல் பொன்னி (12.21.190) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,
                                         மூவலூர் உறை முதல்வரைப் (12.28.437 & 438) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.     

 

Specialities

  • ஆயிரம் ஆனால் மாயூரம் ஆகுமா? (மாயூரம் - மயிலாடுதுறை) என்னும் முதுமொழி இதன் சிறப்பை விளக்கும்.

     

  • காசிக்குச் சமமான ஆறுதலங்களுள் இதுவுமொன்று.

     

  • சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாம்.

     

  • கோயில் உட்சுற்றில் இந்திரன், அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

     

  • இத்தலத்துக் காவிரித் துறையில் (ஐப்பசி) துலா நீராடுதல் மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது.

     

  • நாடொறும் ஆறு கால வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

     

  • கந்தபுராணத்தில் வழிநடைப் படலத்தில் இத்தலம் பற்றிய குறிப்பு வந்துள்ளது சிறப்புடையது.

     

  • மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் தலபுராணம், அபயாம்பிகை மாலையும், அபயாம்பிகை அந்தாதியும் பாடியுள்ளார்.

     

  • கல்வெட்டில் இத்தல இறைவன் "மயிலாடுதுறை உடையார் " என்று குறிக்கப் பெறுகின்றார்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னை - திருச்சி - இராமேஸ்வரம் மெயின்லைன் இருப்புப் பாதையில் உள்ள சந்திப்பு நிலையம். சென்னை, கடலூர், தஞ்சை, விழுப்புரம் முதலான பல ஊர்களிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் ஏராளமாகவுள்ளன. தொடர்புக்கு :-04364 - 222345.

Related Content