logo

|

Home >

hindu-hub >

temples

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)

இறைவர் திருப்பெயர்: பழமலைநாதர், விருத்தகிரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: பெரிய நாயகி, பாலாம்பிகை, விருத்தாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : மணிமுத்தாறு, அக்னி, குபேர, சக்கர தீர்த்தங்கள்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், பட்டினத்துப் பிள்ளையார்,சேக்கிழார், பிரமன், அகஸ்தியர் முதலியோர்

Sthala Puranam

thirumudukunram temple

  • சிவபெருமானால் முதலில் (ஆதியில்) படைக்கப்பெற்றது. எனவே,முதுகுன்றம் எனப்படுகிறது.

     

  • சம்பந்தரால், இத் தலத்தை அடையும்போதும், வலஞ் செய்தபோதும், வழிபட்டபோதும் தனித்தனிப் பதிகங்கள் பாடியருளப்பெற்ற பெருமையுடையது.

     

  • இங்கு இறப்பவர்களுக்கெல்லாம் உமாதேவியார் தமது ஆடையால் வீசி இளைப்பாற்ற, இறைவன் அவர்களுக்கு ஐந்தெழுத்தை உபதேசித்துத், தமது உருவமாக்கும்(சாரூப நிலை) திருப்பதி. ஆதலால், இது காசியினும் மேம்பட்டதாகும்.

     

  • சுந்தரர், இறைவனைப் பாடிப் பன்னீராயிரம் பொன்பெற்று அவற்றை மணிமுத்தாறு நதியிலிட்டு, திருவாரூர் கமலாயக் குளத்தில் பெற்றார்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்     -	1. மத்தாவரை நிறுவிக்கடல் (1.12),
                                        2. தேவராயும் அசுரராயும் (1.53),
                                        3. நின்று மலர்தூவி (1.93),
                                        4. மெய்த்தாறு சுவையும் (1.131),
                                        5. தேவா சிறியோம் பிழையை (2.64),
                                        6. வண்ணமா மலர்கொடு (3.34),
                                        7. முரசதிர்ந் தெழுதரு (3.99);

                      அப்பர்       -	1. கருமணியைக் கனகத்தின் (6.68);

                      சுந்தரர்      -	1. பொன்செய்த மேனியினீர் (7.25),
                                        2. நஞ்சி யிடையின்று நாளை (7.43),
                                        3. மெய்யை முற்றப்பொடி (7.63); 

பாடல்கள்      :    சம்பந்தர்      -      அண்ணாமலை (2.39); 

                      அப்பர்       -      மாவாய்ப் பிளந்துகந்த (6.82); 

                      சுந்தரர்      -       முந்தையூர் (7.31.1);  

        பட்டினத்துப் பிள்ளையார்  -       இறைத்தார் (11.30.59) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; 

                     சேக்கிழார்    -       தூங்கானை மாடத்துச் (12.21.154) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                            அங்கு நின்று (180.181 & 182) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                            கூடலை ஆற்றூர் (12.29.104,127,132.133) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், 
                                            உளத்தில் (12.47.9) ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்.

Specialities

  • இத்தல விநாயகர் , பாதாள விநாயகர் மிக்க சிறப்புவாய்ந்தவர்.

 

  • காசியில் இறந்தால் முத்தி என்பது போல இத்தலத்தில் இறந்தால் சாரூப பதமுத்தி கிடைக்கும் என்று கந்த புராணம் கூறுகிறது.

 

  • சோழர்கள், காடவர், பாண்டியர், விஜய நகரத்தார் மற்றும் குறுநில மன்னர்கள் ஆகியோரது கல்வெட்டுகள் மொத்தம் 74 உள்ளது.

மேலும் காண்க :

  • விருத்தாலபுராணம்

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, இன்று விருத்தாசலம் என்று வழங்கப்படுகிறது. விழுப்புரம் - திருச்சி இரயில் பாதையில் உள்ள முக்கிய இரயில்நிலையமாகும். நிலையத்திலிருந்து 2-கி. மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பஸ் வசதி உள்ளது. தொடர்பு : 04143 - 230203

Related Content