logo

|

Home >

glorious-mantras-of-lord-shiva >

thirumuraikalil-shiva-ashtothiram

திருமுறைகளில் சிவாஷ்டோத்திர நாமங்கள்  

நாம் நாள்தோறும் மலரிட்டு சிவபெருமானை வணங்குவதற்கு சிவ அஷ்டோத்தரங்களைப் பயன்படுத்துகிறோம். இதில் உள்ள அருச்சனைத் திருநாமங்கள் அழகு தமிழில் பன்னிரு திருமுறைகளில் பலவாறு விரவியிருப்பதைக் கண்டு நம் உள்ளம் பூரிப்படையும். திருமுறை அருளாளர்களால் போற்றப்படும் இந்த சிவ அஷ்டோத்திர திருநாமங்களை நாம் நமது வழிபாட்டில் தவறாது ஓதி உய்வுறுவோம்.

ஓம் சிவாய நம:
ஓம் மஹேச்வராய நம:
ஓம் சம்பவே நம:
ஓம் பினாகிநே நம:
ஓம் சசிசேகராய நம:
ஓம் வாம தேவாய நம:
ஓம் விரூபாட்சாய நம:
ஓம் கபர்தினே நம:
ஓம் நீலலோஹிதாய நம:
ஓம் சங்கராய நம:
ஓம் சூலபாணயே நம:
ஓம் கட்வாங்கிநே நம:
ஓம் விஷ்ணுவல்லபாய நம:
ஓம் சிபி விஷ்டாய நம:
ஓம் அம்பிகா நாதாய நம:
ஓம் ஸ்ரீ கண்டாய நம:
ஓம் பக்த வத்ஸலாய நம:
ஓம் பவாய நம:
ஓம் சர்வாய நம:
ஓம் திரிலோகேசாய நம:
ஓம் சிதிகண்டாய நம:
ஓம் சிவாப்ரியாய நம:
ஓம் உக்ராய நம:
ஓம் கபாலிநே நம:
ஓம் காமாரயே நம:
ஓம் அந்தகாஸுர ஸூதநாய நம:
ஓம் கங்காதராய நம:
ஓம் லலாடாட்சாய நம:
ஓம் காலகாலாய நம:
ஓம் க்ருபாநிதயே நம:
ஓம் பீமாய நம:
ஓம் பரசுஹஸ்தாய நம:
ஓம் ம்ருகபாணயே நம:
ஓம் ஜடாதராய நம:
ஓம் கைலாஸவாஸிநே நம:
ஓம் கவசிநே நம:
ஓம் கடோராய நம:
ஓம் திரிபுராந்தகாய நம:
ஓம் வ்ருஷாங்காய நம:
ஓம் வ்ருஷபாரூடாய நம:
ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நம:
ஓம் ஸாமப்ரியாய நம:
ஓம் ஸ்வரமயாய நம:
ஓம் த்ரயீமூர்த்தயே நம:
ஓம் அநீச்வராய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் பரமாத்மநே நம:
ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய நம:
ஓம் ஹவிஷே நம:
ஓம் யக்ஞமயாய நம:
ஓம் ஸோமாய நம:
ஓம் பஞ்சவக்த்ராய நம:
ஓம் ஸதாசிவாய நம:
ஓம் விச்வேச்வராய நம:
ஓம் வீரபத்ராய நம:
ஓம் கணநாதாய நம:
ஓம் ப்ரஜாபதயே நம:
ஓம் ஹிரண்ய ரேதஸே நம:
ஓம் துர்தர்ஷாய நம:
ஓம் கிரீசாய நம:
ஓம் கிரிசாய நம:
ஓம் அநகாய நம:
ஓம் புஜங்கபூஷணாய நம:
ஓம் பர்காய நம:
ஓம் கிரிதன்வநே நம:
ஓம் கிரிப்ரியாய நம:
ஓம் க்ருத்தி வாஸஸே
ஓம் புராராதயே நம:
ஓம் பகவதே நம:
ஓம் ப்ரமதாதிபாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் ஸூக்ஷ்மதனவே நம:
ஓம் ஜகத் வ்யாபினே நம:
ஓம் ஜகத் குரவே நம:
ஓம் வ்யோமகேசாய நம:
ஓம் மஹா ஸேந ஜநகயா நம:
ஓம் சாருவிக்ரமாய நம:
ஓம் ருத்ராய நம:
ஓம் பூதபூதயே நம:
ஓம் ஸ்தாணவே நம:
ஓம் அஹிர்புத்ன்யாய நம:
ஓம் திகம்பராய நம:
ஓம் அஷ்டமூர்த்தயே நம:
ஓம் அநேகாத்மநே நம:
ஓம் ஸாத்விகாய நம:
ஓம் சுத்த விக்ரஹாய நம:
ஓம் சாச்வதாய நம:
ஓம் கண்டபரசவே நம:
ஓம் அஜாய நம:
ஓம் பாசவிமோசகாய நம:
ஓம் ம்ருடாய நம:
ஓம் பசுபதயே நம:
ஓம் தேவாய நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் அவ்யயாயே நம:
ஓம் ஹரயே நம:
ஓம் பூஷதந்தபிதே நம:
ஓம் அவ்யக்ராய நம:
ஓம் பகநேத்ரபிதே நம:
ஓம் தக்ஷõத்வரஹராய நம:
ஓம் ஹராய நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷõய நம:
ஓம் ஸஹஸ்ரபதே நம:
ஓம் அபவர்கப்ரதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் தாரகாய நம:
ஓம் பரமேச்வராய நம:


ஓம் சிவாய நம:

ஆயாதன சமயம்பல 
    அறியாதவ னெறியின்
தாயானவன் உயிர்கட்குமுன் 
    தலையானவன் மறைமுத்
தீயானவன் சிவனெம்மிறை 
    செல்வத்திரு ஆரூர்
மேயானவன் உறையும் 
    மிடம்வீழிம் மிழலையே.  1.11.5
    
மாலி னோடரு மாமறை
  வல்லமு னிவனும்
கோலி னார்குறு கச்சிவன்
  சேவடி கோலியும்
சீலந் தாமறி யார்திகழ்
  சிக்கல்வெண் ணெய்ப்பிரான்
பாலும் பன்மலர் தூவப்
  பறையும்நம் பாவமே.    2.8.9
  
செவ்வழ லாய்நில னாகிநின்
  றசிவ மூர்த்தியும்
முவ்வழல் நான்மறை யைந்துமா
  யமுனி கேள்வனுங்
கவ்வழல் வாய்க்கத நாகமார்த்
  தான்கட வூர்தனுள்
வெவ்வழ லேந்துகை வீரட்டா
  னத்தர னல்லனே.   3.8.7
  
சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற் 
  றிருநின்ற செம்மை யுளதே
அவனுமோ ரையமுண்ணி யதளாடை யாவ 
  ததன்மேலொ ராட லரவங்
கவணள வுள்ளஉண்கு கரிகாடு கோயில் 
  கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றிகண்டு மவனீர்மை கண்டு 
  மகநேர்வர் தேவ ரவரே.   4.8.1
  
தீர்த்த னைச்சிவ
  னைச்சிவ லோகனை
மூர்த்தி யைமுத
  லாய ஒருவனைப்
பார்த்த னுக்கருள்
  செய்த சிற்றம்பலக்
கூத்த னைக்கொடி
  யேன்மறந் துய்வனோ.   5.2.2
  
எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
    எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி 
    கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
    கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
    வீரட்டங் காதல் விமலா போற்றி.    6.5.1
    
பெற்றிமையொன் றறியாத தக்கனது வேள்விப்
  பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கண்பீ டழியச்
செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலாற் றேய்வித்
  தருள்பெருகு சிவபெருமான் சேர்தருமூர் வினவில்
தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமுந்
  திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்றென் கரைமேல் 
கற்றின(ம்)நன் கரும்பின்முளை கறிகற்கக் கறவை
  கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே.   7.16.6
  
பவன்எம் பிரான்பனி மாமதிக் 
    கண்ணிவிண் ணோர்பெருமான்
சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண்டான் 
    என் சிறுமைகண்டும்
அவன்எம் பிரான்என்ன நான்அடி 
    யேன்என்ன இப்பரிசே
புவன்எம் பிரான்தெரி யும்பரி 
    சாவ தியம்புகவே.   8.1.5.9
    
கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரங் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கப் பணைமுலைக்கே
தேம்பற் றுடியிடை மான்மட நோக்கிதில் லைச்சிவன்றாள்
ஆம்பொற் றடமலர் சூடுமென் னாற்ற லகற்றியதே.  8.2.2.3

தனதன்நல் தோழா சங்கரா ! சூல
  பாணியே! தாணுவே சிவனே !
கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே
  கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !
அனகனே குமர விநாயக சனக
  அம்பலத்து அமரசே கரனே !
நுனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
  தொண்டனேன் நுகருமா நுகரே.    9.1.7
  
எந்தை எந்தாய் சுற்றம் முற்றும் 
  எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன்சீர் 
  அடியார் அடிநாய் செப்புறை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் 
  எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே 
  என்று பல்லாண்டு கூறுதுமே   9.29.13
  
சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.  10.1.1.5

மதிமலி புரிசை 
  மாடக் கூடற்
பதிமிசை நிலவு 
  பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் 
  ஆல வாயில்
மன்னிய சிவன்யான் 
  மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் 
  படியெனப் பாவலர்க் 
குரிமையின் உரிமையின் 
  உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை 
  குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்குஞ் 
  சேரலன் காண்க
பண்பா லியாழ்பயில் 
  பாண பத்திரன்
தன்போல் என்பால் 
  அன்பன் தன்பால் 
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து 
  வரவிடுப் பதுவே.  11.1  
  
அன்ன தன்திருத் தாழ்வரையின் இடத்து 
இன்ன தன்மையன் என்றறியாச் சிவன் 
தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் 
உன்னாரும் சீர் உபமன் னிய முனி.  12.1.1.13

(சிவ என்ற திருநாமம் திருமுறைகளில் மிக அதிகமாக வருவதால் இங்கு விரிவஞ்சி ஒரு திருமுறைக்கு ஒன்றே கொடுக்கப்பட்டுள்ளது )

ஓம் மஹேச்வராய நம:

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே.   10.1.3.6

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே.    10.3.9.23

மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.    10.8.7.4

ஓம் சம்பவே நம:

முதிருநீர்ச் சடைமுடி
  முதல்வநீ முழங்கழல்
அதிரவீசி யாடுவாய்
  அழகன்நீ புயங்கன்நீ
மதுரன்நீ மணாளன்நீ
  மதுரையால வாயிலாய்
சதுரன்நீ சதுர்முகன்
  கபாலமேந்து சம்புவே.   3.52.4
  
விரித்தானை நான்மறையோ டங்க மாறும்
    வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி
நெரித்தானை நின்மலனை அம்மான் றன்னை
    நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை
தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத்
    தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய் வேவச்
சிரித்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
    செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.   6.80.10
  
செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்
  கரிய கண்டனை மால்அயன் காணாச்
சம்பு வைத்தழல் அங்கையி னானைச்
  சாம வேதனைத் தன்னொப்பி லானைக்
கும்ப மாகரி யின்னுரி யானைக்
  கோவின் மேல்வருங் கோவினை எங்கள்
நம்ப னைநள் ளாறனை அமுதை
  நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.   7.68.1
  
நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்    
  நாயினேன் தன்னையாட் கொண்ட    
சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்    
  தடங்கடல் நஞ்சுண்ட கண்டா    
செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்    
  தேடியான் திரிதர்வேன் கண்ட    
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்    
  பாசுப தாபரஞ் சுடரே.     7.69.8

செம்பொனே ! பவளக் குன்றமே ! நின்ற
     திசைமுகன் மால்முதற் கூட்டத்து
அன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே !
    அத்தனே பித்தனே னுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே !
    சங்கரா சாட்டியக் குடியார்க்(கு)
இன்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ்
    இருக்கையில் இருந்தவா(று) இயம்பே    9.15.7
    
தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும்
தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும்
தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.      10.8.22.4

"சம்புவின் அடித் தாமரைப் போதலால் 
எம்பிரான் இறைஞ்சாயிஃதென்" எனத் 
"தம்பிரானைத் தன் உள்ளம் தழீயவன் 
நம்பி ஆரூரன் நாம்தொழும் தன்மையான்".    12.2.19

அங்குரைக்கென்ன அளவப் பதியிலார் 
தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின் 
பங்கினாள் திருச் சேடி பரவையாம் 
மங்கையார் அவதாரஞ் செய் மாளிகை.    12.4.5

தாவரிய அன்பினால் சம்பு வினை எவ்விடத்தும்      
 யாவர்களும் அர்ச்சிக்கும் படி கண்டால் இனிது உவந்து   
 பாவனையால் நோக்கினால் பலர் காணப் பயன் பெறுவார்         
 மேவரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார்    12.64.2
 
ஓம் சசிசேகராய நம:

தழல்சேர்தரு திருமேனியர் 
    சசிசேர்சடை முடியர்
மழமால்விடை மிகவேறிய 
    மறையோனுறை கோயில்
விழவோடொலி மிகுமங்கையர் 
    தகுமாடக சாலை
முழவோடிசை நடமுன்செயும் 
    முதுகுன்றடை வோமே.    1.12.7
    
விடையவன் விண்ணுமண்ணுந்
  தொழநின்றவன் வெண்மழுவாட்
படையவன் பாய்புலித்தோல்
  உடைகோவணம் பல்கரந்தைச்
சடையவன் சாமவேதன்
  சசிதங்கிய சங்கவெண்தோ
டுடையவன் ஊனமில்லி
  யுறையும்மிடம் ஒற்றியூரே.     3.57.1
  
தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
  சசிகுலா மவுலியைத் தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
  எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
  மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக்(கு) அடிமை புக்கினிப் போக
  விடுவனோ பூண்டுகொண் டேனே.    9.5.4
  
தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கிரத்திலே.      10.2.6.4

சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானை சங்கரனை சசி கண்ட மவுலியானை 
 விடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற 
 படையானைப் பங்கயத்து மேவினானும் பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம் 
 உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்ளிழையார் உள் மெலிவு என்று எடுத்துப் பாட   12.34.482
 
ஓம் வாம தேவாய நம:
சாம வேதமொர் கீதம்
  ஓதிஅத் தசமுகன் பரவும்
நாம தேயம துடையார்
  நன்குணர்ந் தடிகளென் றேத்தக்
காம தேவனை வேவக்
  கனலெரி கொளுவிய கண்ணார்
வாம தேவர்தண் புகலூர்
  வர்த்தமா னீச்சரத் தாரே.    2.92.8
  
பிறையணி முடியி னானே 
  பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார் 
  கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமர ரேத்தும் 
  அணியணா மலையு ளானே
இறைவனே உன்னை யல்லா 
  லியாதுநான் நினைவி லேனே.    4.63.5
  
வாம தேவன்
  வளநகர் வைகலுங்
காம மொன்றில
  ராய்க்கை விளக்கொடு
தாமந் தூபமுந்
  தண்ணறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை
  வாரெதிர் செல்லலே.     5.92.6
  
ஓம் சங்கராய நம:

தாயுநீயே தந்தைநீயே 
  சங்கரனே யடியேன்
ஆயுநின்பால் அன்புசெய்வான் 
  ஆதரிக்கின் றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னுள் 
  ஐவர்நின்றொன் றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன் 
  வலிவலமே யவனே.     1.50.7

தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்திக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே.    1.58.2
  
தேரரக்கன் மால்வரையைத் 
  தெற்றி யெடுக்கஅவன்
தாரரக்குந் திண்முடிகள் 
  ஊன்றிய சங்கரனூர் 
காரரக்குங் கடல்கிளர்ந்த 
  காலமெ லாமுணரப்  
பாரரக்கம் பயில்புகாரிற் 
  பல்லவ னீச்சரமே.       1.65.8
  
அங்க மாறும் வேதநான்கும் 
  ஓதும் அயன்நெடுமால்  
தங்க ணாலும் நேடநின்ற 
  சங்கரன் தங்குமிடம் 
வங்க மாரு முத்தம்இப்பி 
  வார்கட லூடலைப்பப்  
பங்கமில்லார் பயில்புகாரிற் 
  பல்லவ னீச்சரமே.      1.65.9

அருந்திறல் அவுணர்கள் அரணழியச்
சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவணி சிரபுரமே.      1.109.5

ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின் 
  பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் 
  தழலுருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி 
  மந்திபாய் மடுக்கள்தோறுந்
தேன்பாய மீன்பாய செழுங்கமல 
  மொட்டலருந் திருவையாறே.    1.130.4
  
வரந்திகழு மவுணர் மாநகர்மூன் 
  றுடன்மாய்ந் தவியச்
சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் 
  சங்கரன் மேயவிடம்
குருந்தம் மல்லிகை கோங்குமா 
  தவிநல்ல குராமரவந்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் 
  சேர விடர்கெடுமே.     1.33.2
  
எங்கேனும் யாதாகிப்
  பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும்
  எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக்
  குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச்
  சங்கரன்றன் தன்மைகளே.    2.40.6

நீடல் கோடல் அலரவெண் முல்லை    
  நீர்ம லர்நிறைத் தாத ளஞ்செயப்    
பாடல்வண் டறையும் புறவார் பனங்காட்டூர்த்    
தோடி லங்கிய லாத யல்மின்    
  துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்    
ஆடுஞ்சங் கரனே அடைந்தார்க் கருளாயே.   2.53.2

தக்கனார் தலையரிந்த
  சங்கரன் றனதரை
அக்கினோ டரவசைத்த
  அந்திவண்ணர் காழியை
ஒக்கஞான சம்பந்தன்
  உரைத்தபாடல் வல்லவர்
மிக்கஇன்ப மெய்திவீற்
  றிருந்துவாழ்தல் மெய்ம்மையே.   2.97.11
  
கோல மாகரி உரித்தவர்
  அரவொடும் ஏனக்கொம் பிளஆமை
சாலப் பூண்டுதண் மதியது
  சூடிய சங்கர னார்தம்மைப்
போலத் தம்மடி யார்க்குமின்
  பளிப்பவர் பொருகடல் விடமுண்ட
நீலத் தார்மிடற் றண்ணலார்
  சிரபுரந் தொழவினை நில்லாவே.    2.102.2
  
பங்க யம்மலர்ச் சீறடிப் பஞ்சுறு            
  மெல்விர லரவல்குல்            
மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென            
  மிழற்றிய மொழியார்மென்            
கொங்கை யார்குழாங் குணலைசெய்             
  கோட் டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்            
சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு            
  அருள்பெறல் எளிதாமே.      2.109.2
  
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
  இதுவோஎமை யாளுமா  றீவதொன் றெமக்கில்லையேல்
  அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.   3.4.6
  
மலையுடன் எடுத்தவல்
  லரக்கன் நீள்முடி    
தலையுடன் நெரித்தருள்
  செய்த சங்கரர்    
விலையுடை நீற்றர்வெண்
  காடு மேவிய    
அலையுடைப் புனல்வைத்த
  அடிக ளல்லரே.    3.15.8
  
இலங்கை மன்னன்
  எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால்விரல்
  சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி
  செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம்
  நமச்சி வாயவே.    3.49.8
  
முதுசினவில் அவுணர்புரம் மூன்றுமொரு
  நொடிவரையின் மூளவெரிசெய்
சதுரர்மதி பொதிசடையர் சங்கரர்
  விரும்புமலை தன்னைவினவில்
எதிரெதிர வெதிர்பிணைய எழுபொறிகள்
  சிதறஎழி லேனமுழுத
கதிர்மணியின் வளரொளிகள் இருளகல
  நிலவுகா ளத்திமலையே.    3.69.2

வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு
  சங்கரன்ம கிழ்ந்தமருமூர்
சாரின்முரல் தெண்கடல்வி சும்புறமு
  ழங்கொலிகொள் சண்பைநகர்மேற்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ்
  ஞானசம் பந்தனுரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர்
  சேர்வர்சிவ லோகநெறியே.    3.75.11

நாமமெ னப்பல வும்முடையான்
  நலன்ஓங்கு நாரையூர்    
தாமொம் மெனப்பறை யாழ்குழறா
  ளார்க ழல்பயில    
ஈமவி ளக்கெரி சூழ்சுடலை
  யியம்பும் மிடுகாட்டிற்    
சாமம் உரைக்கநின் றாடுவானுந்
  தழலாய சங்கரனே.   3.102.8

அடையலர் தொல்நகர்
  மூன்றெரித் தன்ன    
நடைமட மங்கையொர்
  பாகம் நயந்து    
விடையுகந் தேறுதிர்
  வெள்ளடை மேவிய    
சடையமர் வெண்பிறைச்
  சங்கர னீரே.    3.124.3
  
தேனோக்குங் கிளிமழலை
  உமைகேள்வன் செழும்பவளந்
தானோக்குந் திருமேனி
  தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர்
  சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை
  என்மனத்தே வைத்தேனே.    4.7.2
  
சலமிலன் சங்கரன்
  சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு
  நல்கு வான்நலன்
குலமில ராகிலுங்
  குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது
  நமச்சி வாயவே.     4.11.6

அங்கங்க ளாறு நான்கும் 
  அந்தணர்க் கருளிச் செய்து
சங்கங்கள் பாட ஆடுஞ் 
  சங்கரன் மலைஎ டுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர 
  அலறிட அடர்த்து நின்றுஞ்
செங்கண்வெள் ளேற தேறுந் 
  திருச்செம்பொன் பள்ளி யாரே.   4.29.11
  
வானவர் வணங்கி யேத்தி 
  வைகலும் மலர்கள் தூவத்
தானவர்க் கருள்கள் செய்யும் 
  சங்கரன் செங்கண் ஏற்றன்
தேனமர் பொழில்கள் சூழத் 
  திகழுநெய்த் தானம் மேய
கூனிள மதியி னானைக் 
  கூடுமா றறிகி லேனே.    4.37.6

சந்திரற் சடையில் வைத்த 
  சங்கரன் சாம வேதி
அந்தரத் தமரர் பெம்மான் 
  ஆன்நல்வெள் ளூர்தி யான்றன்
மந்திரம் நமச்சி வாய 
  ஆகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும் 
  வெவ்வழல் விறகிட் டன்றே.   4.77.4
  
தூமென் மலர்க்கணை கோத்துத்தீ 
  வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த 
  கடல்நாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவா 
  யவென்னும் அஞ்செழுத்துஞ்
சாமன் றுரைக்கத் தருதிகண் 
  டாயெங்கள் சங்கரனே.    4.103.3

உன்மத் தகமலர் சூடி 
  உலகந் தொழச்சுடலைப்
பன்மத் தகங்கொண்டு பல்கடை 
  தோறும் பலிதிரிவான்
என்மத் தகத்தே இரவும் 
  பகலும் பிரிவரியான்
தன்மத் தகத்தொர் இளம்பிறை 
  சூடிய சங்கரனே.   4.113.6
  
போது தாதொடு
  கொண்டு புனைந்துடன்
தாத விழ்சடைச்
  சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்கவென்
  றேத்திப் பராய்த்துறைச்
சோதி யானைத்
  தொழுதெழுந் துய்ம்மினே.   5.30.5
  
நீதி யைக்கெட
  நின்றம ணேயுணுஞ்
சாதி யைக்கெடு
  மாசெய்த சங்கரன்
ஆதி யைப்பழை
  யாறை வடதளிச்
சோதி யைத்தொழு
  வார்துயர் தீருமே.    5.58.6
  
சாற்றி னேன்சடை
  நீண்முடிச் சங்கரன்
சீற்றங் காமன்கண்
  வைத்தவன் சேவடி
ஆற்ற வுங்களிப்
  பட்ட மனத்தராய்ப்
போற்றி யென்றுரைப்
  பார்புடை போகலே.    5.92.4
  
தாயி னும்நல்ல
  சங்கர னுக்கன்பர் 
ஆய வுள்ளத்
  தமுதருந் தப்பெறார் 
பேயர் பேய்முலை
  யுண்டுயிர் போக்கிய 
மாயன் மாயத்துப்
  பட்ட மனத்தரே.   5.100.9  
  
சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்
    சங்கரனைக் கண்டீரோ கண்டோ மிந்நாள்
பந்தித்த வெள்விடையைப் பாய வேறிப்
    படுதலையி லென்கொலோ ஏந்திக் கொண்டு
வந்திங்கென் வெள்வளையுந் தாமு மெல்லாம்
    மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்
பொன்தீ மணிவிளக்குப் பூதம் பற்றப்
    புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.   6.2.9  
  
முந்திய வல்வினைகள் தீர்ப்பான் றன்னை
    மூவாத மேனிமுக் கண்ணி னானைச்
சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச்
    சங்கரனைச் சங்கக் குழையான் றன்னை
மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை
    மறுமையு மிம்மையு மானான் றன்னை
அந்திரனை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.    6.29.4  
  
சங்கரன்காண் சக்கரமாற் கருள்செய் தான்காண்
    தருணேந்து சேகரன்காண் தலைவன் றான்காண்
அங்கமலத் தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை 
    அறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண்
எங்கள்பெரு மான்காணென் னிடர்கள் போக 
    அருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ்
செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரிற்
    றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.     6.30.6

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா 
    நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப்
    பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
    சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும்
    ஆரூரா வென்றென்றே அலறா நில்லே.     6.31.3

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
    சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
    புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா 
    அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
    திருமூலட் டானனே போற்றி போற்றி.    6.32.6
    
எனக்கென்றும் இனியானை யெம்மான் தன்னை
    யெழிலாரும் ஏகம்பம் மேயான் தன்னை
மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில்
    நில்லானை நின்றியூர் மேயான் தன்னைத்
தனக்கென்றும் அடியானை யாளாக் கொண்ட
    சங்கரனைச் சங்கவார் குழையான் தன்னைப்
புனக்கொன்றைத் தாரணிந்த புனிதன் தன்னைப்
    பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.    6.43.3

தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
    தோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்ற
தாயானைச் சக்கரமாற் கீந்தான் தன்னைச்
    சங்கரனைச் சந்தோக சாமம் ஒதும்
வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை
    வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்
சேயானைத் திருவீழி மிழலை யானைச்
    சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.    6.50.4
    
பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்
    பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்
கேதிசர மேவினார் கேதா ரத்தார்
    கெடில வடவதிகை வீரட் டத்தார்
மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்
    மழபாடி மேய மழுவா ளனார்
வேதி குடியுளார் மீயச் சூரார்
             வீழி மிழலையே மேவி னாரே.   6.51.2

சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் றன்னைச்
    சங்கரனைத் தழலுறுதாள் மழுவாள் தாங்கும்
அங்கையனை அங்கமணி ஆகத் தானை
    ஆகத்தோர் பாகத்தே அமர வைத்த
மங்கையனை மதியொடுமா சுணமுந் தம்மின் 
    மருவவிரி சடைமுடிமேல் வைத்த வானீர்க்
கங்கையனைக் கற்குடியில் விழுமி யானைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.   6.60.5

ஆராத இன்னமுதை அம்மான் றன்னை
    அயனொடுமா லறியாத ஆதி யானைத்
தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் றன்னைச்
    சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை
நீரானைக் காற்றானைத் தீயா னானை
    நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த
பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப்
    பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.   6.69.1

சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய்
    சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய்
தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்
    சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்
மண்டுபுனற் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
    மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற்
    கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.   6.73.6
    
காம்பாடு தோளுமையாள் காண நட்டங்
    கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்ய
பாம்பாடப் படுதலையிற் பலிகொள் வோன்காண்
    பவளத்தின் பருவரைபோற் படிமத் தான்காண்
தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட
    சங்கரன்காண் பொங்கரவக் கச்சை யோன்காண்
சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத் தூரில்
    திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.   6.76.6

கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் றன்னைக்
    காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் றன்னை
அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை
    ஐயாறு மேயானை ஆரூ ரானைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் றன்னைப்
    பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச்
சங்கரனைத் தலையாலங் காடன் றன்னைச்
    சாராதே சாலநாள் போக்கி னேனே.   6.79.5

விரித்தானை நான்மறையோ டங்க மாறும்
    வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி
நெரித்தானை நின்மலனை அம்மான் றன்னை
    நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை
தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத்
    தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய் வேவச்
சிரித்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
    செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.    6.80.10

வருமிக்க மதயானை யுரித்தான் றன்னை
    வானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத்
தருமிக்க குழலுமையாள் பாகன் றன்னைச்
    சங்கரனெம் பெருமானைத் தரணி தன்மேல்
உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி
    உத்தமர்வாழ் தருமோமாம் புலியூர் மன்னுந்
திருமிக்க வடதளியெஞ் செல்வன் றன்னைச்
    சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.    6.88.3

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.   6.98.1

சங்கை யவர்புணர் தற்கரி யான்றள
  வேனகை யாள்தவி ராமிகுசீர்
மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை
  நட்டம்நின் றாடிய சங்கரனெம்
அங்கையி னல்லனல் ஏந்து மவன்கனல்
  சேரொளி யன்னதோர் பேரகலத்
தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்
  கச்சி அனேகதங் காவதமே.    7.10.9

மின்னனை யாள்திரு
  மேனிவி ளங்கவொர்    
தன்னமர் பாகம
  தாகிய சங்கரன்    
முன்னினை யார்புரம்
  மூன்றெரி யூட்டிய    
பொன்னனை யான்உறை
  பூவணம் ஈதோ.     7.11.6

மலமெலாமறும் இம்மையேமறு
  மைக்கும்வல்வினை சார்கிலா
சலமெலாமொழி நெஞ்சமேயெங்கள்
  சங்கரன்வந்து தங்குமூர்
கலமெலாங்கடல் மண்டுகாவிரி
  நங்கையாடிய கங்கைநீர்
புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும்
  புறம்பயந்தொழப் போதுமே.    7.35.8

விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை
 வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்
அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய
 சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்
உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக்
 குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேற்
கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக்
 கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.   7.40.6

தயங்கு தோலை உடுத்த சங்கரா
  சாம வேத மோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
  மார்க்க மொன்றறி யீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன்
  பூண்டி மாநகர் வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
  எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.   7.49.5

தரிக்கிலேன் காய வாழ்க்கை
    சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள்
    விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர் 
    தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள்
    நின்மலா போற்றி போற்றி.   8.1.5.61
    
கடவுளே போற்றி என்னைக் 
    கண்டுகொண் டருளு போற்றி
விடவுளே உருக்கி என்னை 
    ஆண்டிட வேண்டும் போற்றி
உடலிது களைந்திட் டொல்லை 
    உம்பர்தந் தருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த
    சங்கரா போற்றி போற்றி.  8.1.5.64
    
சங்கரா போற்றி மற்றோர் 
    சரணிலேன் போற்றி கோலப்
பொங்கரா அல்குற் செவ்வாய் 
    வெண்ணகைக்    கரியவாட் கண்
மங்கையோர் பங்க போற்றி 
    மால்விடை யூர்தி போற்றி
இங்கிவ்வாழ் வாற்ற கில்லேன் 
    எம்பிரான் இழித்திட் டேனே.   8.1.5.65

சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம்
சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ.    8.1.10.7

பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறு
எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ.    8.1.15.10

தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச்
  சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
  யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
  திருப்பெருந்துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
  யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே.    8.1.22.10
  
புலைய னேனையும் பொருளென நினைந்துன்
  அருள்புரிந்தனை புரிதலுங் களித்துத்
தலையினால் நடந்தேன் விடைப்பாகா
  சங்கரா எண்ணில் வானவர்க்கெல்லாம்
நிலையனே அலைநீர்விடமுண்ட நித்தனே
  அடையார்புர மெரித்த
சிலையனே யெனைச் செத்திடப் பணியாய்
  திருப்பெருந்துறை மேவிய சிவனே.    8.1.23.3

உரியேன் அல்லேன் உனக் கடிமை 
  உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும்
தரியேன் நாயேன் இன்னதென்று 
  அறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் 
  பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும் 
  பொய்யோ எங்கள் பெருமானே.     8.1.44.2

அகிலின் புகைவிம்மி ஆய்மலர் வேய்ந்தஞ் சனமெழுதத்
தகிலுந் தனிவடம் பூட்டத் தகாள்சங் கரன்புலியூர்
இகலு மவரிற் றளருமித் தேம்ப லிடைஞெமியப்
புகலு மிகஇங்ங னேயிறு மாக்கும் புணர்முலையே. 8.2.14.18

என்கடைக் கண்ணினும் யான்பிற வேத்தா வகையிரங்கித்
தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச் சங்கரன் தாழ்கயிலைக்
கொன்கடைக் கண்தரும் யானை கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
முன்கடைக் கண்ணிது காண்வந்து தோன்றும் முழுநிதியே.    8.2.18.33

தனதன்நல் தோழா சங்கரா ! சூல
  பாணியே! தாணுவே சிவனே !
கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே
  கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !
அனகனே குமர விநாயக சனக
  அம்பலத்து அமரசே கரனே !
நுனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
  தொண்டனேன் நுகருமா நுகரே.    9.1.7

செம்பொனே ! பவளக் குன்றமே ! நின்ற
    திசைமுகன் மால்முதற் கூட்டத்து
அன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே !
   அத்தனே பித்தனே னுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே !
    சங்கரா சாட்டியக் குடியார்க்(கு)
இன்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ்
     இருக்கையில் இருந்தவா(று) இயம்பே.   9.15.7

சேயிழை யார்க்கினி வாழ்வரிது
   திருச்சிற்றம் பலத்தெங்கள் செல்வ னேநீ
தாயினும் மிகநல்லை என்றடைந்தேன்
   தனிமையை நினைகிலை சங்க ராவுன்
பாயிரும் புலியதள் இன்னுடையும்
   பையமேல் எடுத்தபொற் பாத மும்கண்
டேயிவள் இழந்தது சங்கம் ஆவா
   எங்களை ஆளுடை ஈசனேயோ.   9.26.8

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரியயற் காமே.    10.1.9.1

சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.    10.1.9.4

புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே    10.4.12.4

அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்
தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே.   10.10.8.3.4

பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன்
செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன்
அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி
பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே.   10.10.22.18

இனிவார் சடையினிற் கங்கையென் 
  பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என் 
  செய்திகை யிற்சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந் 
  தன்றுசெந் தீயில்முழ்கத்
தனிவார் கணைஒன்றி னால்மிகக் 
  கோத்தஎஞ் சங்கரனே.    11.4.5
  
சங்கரனைத் தாழ்ந்த 
  சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த 
  புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாவென் றாழாமைக் 
  காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை.  11.4.6

தனக்குன்றம் மாவையம் சங்கரன் 
  தன்னருள் அன்றிப்பெற்றால்
மனக்கென்றும் நஞ்சிற் கடையா 
  நினைவன் மதுவிரியும்
புனக்கொன்றை யான்அரு 
  ளால்புழுவாகிப் பிறந்திடினும்
எனக்கென்றும் வானவர் பொன்னுல 
  கோடொக்க எண்ணுவனே.   11.7.43
  
எண்ணம் இறையே பிழைக்குங் 
  கொலாம்இமை யோர்இறைஞ்சும்
தண்ணம் பிறைச்சடைச் சங்கரன் 
  சங்கக் குழையன்வந்தென்
உள்நன் குறைவ தறிந்தும் 
  ஒளிமா நிறங்கவர்வான்
கண்ணும் உறங்கா திராப்பகல் 
  எய்கின்ற காமனுக்கே.    11.7.44
  
வலந்தான் கழல்இடம் பாடகம் 
  பாம்பு வலம்இடமே
கலந்தான் வலம்நீ றிடம்சாந் 
  தெரிவலம் பந்திடமென்
பலந்தார் வலம்இடம் ஆடகம் 
  வேல்வலம் ஆழிஇடம்
சலந்தாழ் சடைவலம் தண்ணங் 
  குழல்இடம் சங்கரற்கே.   11.7.65

சங்கரன் சங்கக் குழையன் 
  சரணார விந்தந்தன்னை
அங்கரங் கூப்பித் தொழுதாட் 
  படுமின்தொண் டீர்நமனார்
கிங்கரர் தாம்செய்யும் கீழா 
  யினமிறை கேட்டலுமே
இங்கரம் ஆயிரம் ஈரஎன் 
  நெஞ்சம் எரிகின்றதே.   11.7.66

தடப்பாற் புனற்சடைச் சங்கரன் 
  தண்மதி போல்முகத்து
மடப்பால் மடந்தை மலரணைச் 
  சேக்கையிற் பாசம்பிரீஇ
இடப்பால் திரியில் வெருவும் 
  இருஞ்சுரஞ் சென்றனளால்
படப்பா லனவல்ல வால்தமி 
  யேன்தையல் பட்டனவே.      11.8.15
  
குரவங் கமழ்கோதை 
  கோதைவே லோன்பின்
விரவுங் கடுங்கானம் 
  வெவ்வாய் - அரவம்
சடைக்கணிந்த சங்கரன் 
  தார்மதனன் தன்னைக்
கடைக்கணித்த தீயிற் கடிது.    11.8.17

தாழ்ந்து கிடந்த சடைமுடிச் 
  சங்கரன் தாள்பணியா
தாழ்ந்து கிடந்துநை வார்கிளை 
  போலயர் வேற் கிரங்கிச்
சூழ்ந்து கிடந்த கரைமேல் 
  திரையென்னும் கையெறிந்து
வீழ்ந்து கிடந்தல றித்துயி 
  லாதிவ் விரிகடலே.     11.8.30
  
...................
ஈசனே எந்தாய் 
  இறைபோற்றி - தூயசீர்ச்
சங்கரனே போற்றி 
  சடாமகுடத் தாய்போற்றி
...................     11.9.53

நடமாடுஞ் சங்கரன்தாள் 
  நான்முகனுங் காணான்
படமாடு பாம்பணையான் 
  காணான் - விடமேவும்
காரேறு கண்டன் கயிலாயன் 
  தன் உருவை
யாரே அறிவார் இசைந்து.     11.10.89

................
வேங்கை வென்று 
  வாகை சூடிய
சங்கரன் தன்னினத் 
  தலைவன் ஓங்கிய
..............     11.20.13

தாமரைக் கோவும்நன் மாலும் 
  வணங்கத் தலையிடத்துத்
தாமரைக் கோவணத் தோடிரந் 
  துண்ணினும் சார்ந்தவர்க்குத்
தாமரைக் கோமளத் தோடுல 
  காளத் தருவர் கண்டீர்
தாமரைக் கோமளக் கைத்தவ 
  ளப்பொடிச் சங்கரரே.        11.22.6

ஆழும் இவளையும் 
  கையகல ஆற்றேனென்
றாழும் இவளை 
  அயராதே - ஆழும்
சலமுடியாய் சங்கரனே 
  சங்கக் குழையாய்
சலமுடியா தின்றருளும் தார்.   11.23.22

என்னே இவளுற்ற  மாலென்கொல் இன்கொன்றை
என்னே இவளொற்றி யூரென்னும் - என்னே
தவளப் பொடியணிந்த சங்கரனே என்னும்
தவளப் பொடியானைச் சார்ந்து.   11.24.6

சாராவார் தாமுளரேல் சங்கரன்தன் மேனிமேல்
சாராவார் கங்கை உமைநங்கை - சார்வாய்
அரவமது செஞ்சடைமேல் 
  அக்கொன்றை ஒற்றி
அரவமது செஞ்சடையின் மேல்.   11.24.24

வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால்
வாய்த்த அடிமுடி யுங்காணார் - வாய்த்த
சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ
சலந்தரனாய் நின்றவா தாம்.     11.24.33 

தாரான் எனினுஞ் சடைமுடியான் சங்கரனந்
தாரான் தசமுகனைத் தோள்நெரித்துத் - தாராய
நாளுங் கொடுத்தந்த வானவர்கள் தம்முன்னே
வாளுங் கொடுத்தான் மதித்து.     11.24.37

தாமேய ஆறு சமய முதற்பரமும்
தாமேய வாறு தழைக்கின்றார் - தாமேல்
தழலுருவர் சங்கரவர் பொங்கரவம் பூண்ட
தழலுருவர் சங்கரர்என் பார்.    11.24.52

இவளப் பனிமால் இமையத் 
  தணங்குகற் றைச்சடைமேல்
அவளப்புத் தேளிர் உலகிற் 
  கரசி அதுகொண்டென்னை
எவளுக்கு நீநல்ல தியாரைமுன் 
  எய்திற்றெற் றேயிதுகாண்
தவளப் பொடிச்செக்கர் மேனிமுக் 
  கண்ணுடைச் சங்கரனே.     11.25.9

.......
பூமகள் உறையு ளாமென விளங்கும்
பெரும்புகழ்க் காழி விரும்புசங் கரனே
......              11.28.29

மாலயற்கு அரிய நாதன் வடிவு 
  ஒரு சோதி ஆகச்
சாலவே மயங்குவார்க்குச் 
  சங்கரன் தான் மகிழ்ந்தே
ஏலவார் குழலாள் தன்னோடு 
  இடப வாகனனாய் தோன்றிச்
சீலமார் பூசை செய்த திருத் 
  தொண்டர் தம்மை நோக்கி.    12.10.25
  
கலையனார் அதனைக் கேளாக் கை 
  தொழுது இறைஞ்சிக் கங்கை
அலைபுனல் சென்னியார் தம் அருள் 
  மறுத்து இருக்க அஞ்சித்
தலை மிசைப் பணிமேற் கொண்டு 
  சங்கரன் கோயில் நின்று
மலை நிகர் மாட வீதி மருங்கு 
  தம் மனையைச் சார்ந்தார்.    12.17.18
  
அந் நாள் இரவின் கண் 
  அமண் புகல் சார்ந்து வாழும்
மன் ஆகிய போர் 
  வடுகக் கருநாடர் மன்னன்
தன்னாளும் முடிந்தது சங்கரன் 
  சார்பு இலோர்க்கு
மின்னாம் என நீடிய 
  மெய்ந் நிலையாமை வெல்ல.    12.21.24

பொன் ஆர்ந்த திருவடிக்கு என் 
  விண்ணப்பம் என்று எடுத்து 
முன் ஆகி எப் 
  பொருட்கும் முடிவாகி நின்றானைத் 
தன் ஆகத்து உமை 
  பாகம் கொண்டானைச் சங்கரனை 
நல் நாமத் திருவிருத்தம் 
  நலம் சிறக்கப் பாடுதலும்.   12.27.151

வரை வளர் மா மயில் 
  என்ன மாடமிசை மஞ்சாடும் 
தரை வளர் சீர்த் திருமயிலைச் 
  சங்கரனார் தாள் வணங்கி 
உரை வளர் மாலைகள் 
  அணிவித்து உழவாரப் படை ஆளி 
திரை வளர் வேலைக் கரை 
  போய் திரு ஒற்றியூர் சேர்ந்தார்.    12.27.332

தேவர் தொழும் தனி 
  முதலைத் திரு இராமேச்சுரத்து 
மேவிய சங்கரனை எதிர் 
  நின்று விருப்புறு மொழியால் 
பாவு திரு நேர் இசைகள் 
  முதலான தமிழ் பாடி 
நாவரசர் திருத் தொண்டு நலம் 
  பெருகச் செய்து அமர்ந்தார்.    12.27.409

குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்
அறிவு சங்கரற்கு அன்பர் எனப்பெறில்
செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையார்.   12.28.4

தலையினால் நடந்து சென்று 
  சங்கரன் இருந்த வெள்ளி
மலையின் மேல் ஏறும் போது 
  மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலை இளம் திங்கள் கண்ணிக் 
  கண் நுதல் ஒரு பாகத்துச்
சிலை நுதல் இமய வல்லி 
  திருக் கண் நோக்குற்றது அன்றே.    12.30.56

பாசம் மற்றிலர் ஆயினும் பார் மிசை 
ஆசை சங்கரர்கு ஆயின தன்மையால் 
தேசு மிக்க திருவுரு ஆனவர் 
ஈசனைத் தொழுதே தொழுது ஏகினார்.    12.34.189

மொய் தரும் சோலை சூழ் 
  முளரி முள்ளடவி போய் 
மெய் தரும் பரிவிலான் 
  வேள்வியைப் பாழ்படச் 
செய்த சங்கரர் 
  திருச்சக்கரப் பள்ளி முன்பு 
எய்த வந்தருளினார் இயல் 
  இசைத் தலைவனார்.    12.34.361

சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானை சங்கரனை 
  சசி கண்ட மவுலியானை 
விடையானை வேதியனை வெண் நீற்றானை 
  விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற 
படையானைப் பங்கயத்து மேவினானும் பாம்பு 
  அணையில் துயின்றானும் பரவும் கோலம் 
உடையானை உடையானே தகுமோ இந்த 
  ஒள்ளிழையாள் உள் மெலிவு என்று எடுத்துப் பாட.    12.34.482
  
தேவியார் தம்மை நோக்கித் 
  தென்னவன் கூறுகின்றான் 
காவிநீள் கண்ணினாய் கேள் 
  காவிரி நாட்டில் மன்னும் 
தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் 
  அருள் பெற்று இங்கு 
மேவினான் அடிகள் மாரை 
  வாதினில் வெல்ல என்று.    12.34.691

அந்தணர் தேவர் ஆன் 
  இனங்கள் வாழ்க என்று 
இந்த மெய்ம் மொழிப் 
  பயன் உலகம் இன்புறச் 
சந்த வேள்விகள் முதல் 
  சங்கரர்க்கு முன் 
வந்த அர்ச்சனை 
  வழிபாடும் அன்னவாம்.   12.34.821

மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மைதான் 
தன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன் 
இன்ன தன்மையை ஏது எடுத்துக் காட்டு 
அன்ன ஆற்றால் அளப்பு இலன் என்றதாம்.   12.34.834

தம்மை உள்ளவாறு அறிந்த 
  பின் சங்கரற்கு அடிமை 
மெய்ம்மையே செயும் விருப்புடன் 
  மிக்கதோர் அன்பால் 
பொய்ம்மை நீக்கிமெய்ப் பொருள் இது 
  எனக் கொளும் உள்ளச் 
செம்மையே புரி மனத்தினார் 
  சிவநேசர் என்பார்.    12.34.1035

சங்கரனார் திரு அருள் போல் 
  தண்ணீரின் சுவை ஆர்ந்து
பொங்கி வரும் ஆதரவால் அவர் 
  நாமம் புகழ்ந்து ஏத்தி
அங்கு அயர்வால் பள்ளி அமர்ந்துஅருகு 
  அணைந்தார் களும் துயிலக்
கங்கை சடைக் கரந்தார் அப் 
  பந்தரொடும் தாம் கரந்தார்.   12.35.162
  
சங்கரர் தாள் பணிந்து இருந்து 
  தமிழ் வேந்தர் மொழிகின்றார்
மங்கை அவள் தனைப் பிரியா 
  வகை சபதம் செய்வதனுக்(கு)
அங்கு அவளோடு யான் வந்தால் 
  அப்பொழுது கோயில் விடத்
தங்கும் இடம் திரு மகிழ்க் கீழ்க் 
  கொள வேண்டும் எனத்தாழ்ந்தார்.   12.35.248

மன்னு திருக் கேதாரம் 
  வழிபட்டு மாமுனிவர்
பன்னு புகழ்ப் பசுபதி 
  நேபாளத்தைப் பணிந்து ஏத்தித்
துன்னு சடைச் சங்கரனார் 
  ஏற்ற தூ நீர்க் கங்கை
அன்ன மலி அகன் துறை 
  நீர் அருங்கரையின் மருங்கு அணைந்தார்.   12.36.3

எந்நிலையில் நின்றாலும் 
  எக்கோலம் கொண்டாலும்
மன்னிய சீர்ச் சங்கரன் தாள் 
  மறவாமை பொருள் என்றே
துன்னிய வேடம் தன்னைத் 
  துறவாதே தூய சிவம்
தன்னை மிகும் அன்பினால் 
  மறவாமை தலை நிற்பார்.    12.40.6

கோத்திட்டை என்று எடுத்துக் 
  கோதில் திருப்பதிக இசை
மூர்த்தியார் தமை வணங்கி 
  முக்கோக்கள் உடன் முன்பே
ஏத்திய வண் தமிழ் மாலை 
  இன் இசைப் பாடிப் பரவி
சாத்தினார் சங்கரனார் 
  தங்கு திருப்பரங்குன்றில்.    12.43.103

அங்கு அவர் தாம் மகிழும் 
  வகை அடுத்தவுரை நயம் ஆக்கி
கொங்கலர்தார் மன்னவர் பால் பெற்ற 
  நிதிக் குவை கொண்டு
வெம் கண் அராவொடு கிடந்து 
  விளங்கும் இளம் பிறைச் சென்னிச்
சங்கரனார் இனிது அமரும் 
  தானங்கள் பல சமைத்தார்.   12.55.2

சங்கரன் தன் அடியாருக்கு அமுது 
  அளிக்கும் தவம் உடையார்
அங்கு ஒருவர் அடியவருக்கு அமுது 
  ஒரு நாள் ஆக்க உடன்
எங்கும் ஒரு செயல் காணாது 
  எய்திய செய்தொழில் முட்டப்
பொங்கி எழும் பெரு விருப்பால் 
  புரியும் வினை தெரியாது.   12.60.6

சங்கரன் தன் அருளால் ஓர் 
  துயில் வந்து தமை அடைய
அங்கணனும் களவின்கண் அருள் 
  புரிவான் அருந்தும் உணவு
மங்கிய நாள் கழிவளவும் வைப்பது 
  நித்தமும் ஒரு காசு
இங்கு உனக்கு நாம் என்ன 
  இடர் நீங்கி எழுந்திருந்தார்.    12.62.4

சங்கரனைச் சார்ந்த கதை 
  தான் கேட்கும் தன்மையராய்
அங்கணனை மிக விரும்பி 
  அயல் அறியா அன்பினால்
கங்கை நதி மதி 
  இதழி காதலிக்கும் திருமுடியார்
செங்கமல மலர்ப் பாதம் 
  சேர்வதனுக்கு உரியார்கள்.    12.64.5

சங்கரனுக்காளான தவம் காட்டித் 
  தாம் அதனால்
பங்கமறப் பயன் துய்யார் 
  படி விளக்கும் பெருமையினார்
அங்கணனைத் திருவாரூர் 
  ஆள்வானை அடிவணங்கிப்
பொங்கி எழும் சித்தம் உடன் 
  பத்தராய்ப் போற்றுவார்.    12.64.8


ஓம் சூலபாணயே நம:

நீல நெய்தல் தண்சுனை சூழ்ந்த நீள்சோலைக்
கோல மஞ்ஞை பேடையொ டாடுங் குற்றாலம்
காலன்தன்னைக் காலாற் காய்ந்த கடவுள்ளெம்
சூல பாணி நன்னகர் போலுந் தொழுவீர்காள்.    1.99.7

மூல மாகிய
  மூவர்க்கு மூர்த்தியைக்
கால னாகிய
  காலற்குங் காலனைக்
கோல மாம்பொழில்
  சூழ்திருக் கோளிலிச்
சூல பாணிதன்
  பாதந் தொழுமினே.      5.57.5

சூல பாணியை 
  சுடர்தரு வடிவனை
..............   11.14.1

வட திசைத் தேசம் எல்லாம் 
  மனத்தினும் கடிது சென்று
தொடை அவிழ் இதழி மாலைச் 
  சூல பாணியனார் மேவும்
படர் ஒளிக் கைலை வெற்பின் 
  பாங்கு அணைந்து ஆங்குக் காலின்
நடையினைத் தவிர்த்து பார் மேல் 
  தலையினால் நடந்து சென்றார்.    12.30.55

மாலை வெண் குடை 
  வளவர் சோணாட்டு வண்புகலிச் 
சூல பாணிபால் ஞானம் 
  பெற்றான் என்று சுருதிப் 
பாலன் அன்பர்தம் குழாத்தொடும் 
  பனி முத்தின் சிவிகை 
மேல் அணைந்தனன் எங்களை 
  வாதினில் வெல்ல.       12.34.685

ஓம் கட்வாங்கிநே நம:

மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ் சதுவுண்ட
தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்திக்
கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர் காதலாற்
சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பை நகராரே.   1.66.4

கறையார் மணிமிடற்றான்
  காபாலி கட்டங்கன்
பிறையார் வளர்சடையான்
  பெண்பாகன் நண்பாய
நறையார் பொழில்புடைசூழ்
  நாலூர் மயானத்தெம்
இறையானென் றேத்துவார்க்
  கெய்துமாம் இன்பமே.  2.46.5

கலையிலங் கும்மழு கட்டங்கம்
  கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர்
  வீழிமி ழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ்
  சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க்
  கும்மடி யார்க்குமே.   3.9.4
  
உட்டங்கு சிந்தை வைத்தார் 
  உள்குவார்க் குள்ளம் வைத்தார்
விட்டங்கு வேள்வி வைத்தார் 
  வெந்துயர் தீர வைத்தார்
நட்டங்கு நடமும் வைத்தார் 
  ஞானமு நவில வைத்தார்
கட்டங்கந் தோண்மேல் வைத்தார் 
  கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.  4.30.6
  
மட்டு வார்குழ
  லாளொடு மால்விடை
இட்ட மாவுகந்
  தேறும் இறைவனார்
கட்டு வாங்கங்
  கனல்மழு மான்றனோ
டட்ட மாம்புய
  மாகும்ஆ ரூரரே.      5.6.7
    
கைகொள் சூலத்தர்
  கட்டுவாங் கத்தினர்
மைகொள் கண்டத்த
  ராகி இருசுடர்
செய்ய மேனிவெண்
  ணீற்றர்செம் பொன்பள்ளி
ஐயர் கையதோர்
  ஐந்தலை நாகமே.     5.36.7

காதார் குழையினர் கட்டங் கத்தர்
    கயிலாய மாமலையார் காரோ ணத்தார்
மூதாயர் மூதாதை யில்லார் போலும்
    முதலு மிறுதியுந் தாமே போலும்
மாதாய மாதர் மகிழ வன்று
    வன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நாட்
போதார் சடைதாழப் பூதஞ் சூழப்
    புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.   6.2.6

பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்
    பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
சிட்டராய்த் தீயேந்திச் செல்வார் தம்மைத் 
    தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே 
    ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
கட்டங்கங் கையதே சென்று காணீர்
    கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே.    6.2.11
    
நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் றன்னை
    நெற்றிமேற் கண்ணொன் றுடையான் றன்னை
மறையானை மாசொன் றிலாதான் றன்னை
    வானவர்மேல் மலரடியை வைத்தான் றன்னைக்
கறையானைக் காதார் குழையான் றன்னைக்
    கட்டங்க மேந்திய கையி னானை
இறையானை எந்தை பெருமான் றன்னை
    ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.     6.3.9

செல்வப் புனற்கெடில வீரட்டமுஞ் 
    சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமுந்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலுந்
    தென்னானைக் காவுஞ் சிராப்பள்ளியும்
நல்லூருந் தேவன் குடிமருகலும்
    நல்லவர்கள் தொழுதேத்து நாரையூருங்
கல்லலகு நெடும்புருவக் கபாலமேந்திக் 
    கட்டங்கத் தோடுறைவார் காப்புக்களே.    6.7.1
    
கட்டங்கந் தாமொன்று கையி லேந்திக்
    கடிய விடையேறிக் காபா லியார்
இட்டங்கள் தாம்பேசி இல்லே புக்கு
    இடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர்
பட்டிமையும் படிறுமே பேசா நின்றார்
    பார்ப்பாரைப் பரிசழிப்பார் போல்கின் றார்தாம்
அட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.    6.9.3
    
தேசர் திறம்நினைவார் சிந்தை சேருஞ்
    செல்வர் திருவாரூ ரென்றும் உள்ளார்
வாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர்
    மருவுங் கரியுரியர் வஞ்சக் கள்வர்
நேசர் அடைந்தார்க் கடையா தார்க்கு 
    நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க் கென்றும்
ஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்த 
    இடைமருது மேவி யிடங்கொண் டாரே.   6.17.4

கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக்
    கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச்
சுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச்
    சுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப்
பட்டங்க மாலை நிறையச் சூடிப்
    பல்கணமுந் தாமும் பரந்த காட்டில்
நட்டங்க மாடியை நள்ளாற் றானை
    நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.    6.20.4
    
வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும்
    வஞ்சக் கருங்கடல்நஞ் சுண்டார் போலும்
பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும்
    பூங்கங்கை தோய்ந்த சடையார் போலுங்
கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலுங்
    கட்டங்க மேந்திய கையார் போலும்
அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.     6.21.4
    
பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும்
    பாசுபதம் பார்த்தற் களித்தார் போலுங்
கரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலுங்
    காபாலங் கட்டங்கக் கொடியார் போலும்
பெரியதோர் மலைவில்லா எய்தார் போலும்
    பேர்நந்தி யென்னும் பெயரார் போலும்
அரியதோர் அரணங்க ளட்டார் போலும்
    அணியாரூர்த் திருமூலட் டான னாரே.    6.28.2

பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண்
    பேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண்
கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண்
    கட்டங்கன் காண்கையிற் கபால மேந்திப்
பறையோடு பல்கீதம் பாடி னான்காண்
    ஆடினான் காண்பாணி யாக நின்று
மறையோடு மாகீதங் கேட்டான் றான்காண்
    மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.   6.49.6
    
மானேறு கரமுடைய வரதர் போலும்
    மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்
கானேறு கரிகதற வுரித்தார் போலுங்
    கட்டங்கங் கொடிதுடிகைக் கொண்டார் போலுந்
தேனேறு திருஇதழித் தாரார் போலுந்
    திருவீழி மிழலையமர் செல்வர் போலும்
ஆனேற தேறும் அழகர் போலும்
    அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.    6.53.1

பொய்யேது மில்லாத மெய்யன் றன்னைப்
    புண்ணியனை நண்ணாதார் புரநீ றாக
எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் றன்னை
    ஏறமரும் பெருமானை இடமா னேந்து
கையானைக் கங்காள வேடத் தானைக்
    கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்
செய்யானைத் திருவானைக் காவு ளானைச்
    செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.   6.63.5
    
காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக்
    காபாலி கட்டங்க மேந்தி னானைப்
பாரொளியை விண்ணொளியைப் பாதாளத் தானைப்
    பான்மதியஞ் சூடியோர் பண்பன் றன்னைப்
பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் றன்னைப்
    பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ்
சீரொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
    தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.   6.68.2
    
பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்
    பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்
    குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்
கட்டங்கக் கொடிதிண்டோ ளாடக் கண்டேன்
    கனமழுவாள் வலங்கையி லிலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்
    தேவனைக் கனவில்நான் கண்ட வாறே.   6.97.6

கையது கபாலங் காடுறை வாழ்க்கை
  கட்டங்கம் ஏந்திய கையர்
மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல்
  வெண்டிங்கள் சூடிய விகிர்தர்
பையர வல்குற் பாவைய ராடும்
  பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
மெய்யரே ஒத்தோர் பொய்செய்வ தாகில்
  இவரலா தில்லையோ பிரானார்.    7.14.7
  
விட்டி லங்கெரி யார்கையி னானை    
  வீடி லாதவி யன்புக ழானைக்    
கட்டு வாங்கந் தரித்தபி ரானைக்    
  காதி லார்கன கக்குழை யானை    
விட்டி லங்குபுரி நூலுடை யானை    
  வீந்த வர்தலை ஓடுகை யானைக்    
கட்டி யின்கரும் போங்கிய நீடூர்க்    
  கண்டு நாம்பணி யாவிட லாமே.      7.56.7


சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கஞ் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி யூரம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு மாந்த பயோதரத்தோர்
பித்திதற் பின்வர முன்வரு மோவொர் பெருந்தகையே.  8.2.16.49

பெண்ணீர்மை காமின் 
  பெருந்தோள் இணைகாமின்
உண்ணீர்மை மேகலையும் 
  உள்படுமின் - தெண்ணீரக்
காரேறு கொன்றையந்தார்க் 
  காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த துலா.    11.9.12

பரியானை ஊராது 
  பைங்கணே றூரும்
பரியானைப் பாவிக்க 
  லாகா - பரியானைக்
கட்டங்கம் ஏந்தியாக் 
  கண்டுவாழ் நன்னெஞ்சே
கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.    11.23.7

ஓம் ஸ்ரீ கண்டாய நம:

தாவிய மாயையில் தங்கும் பிரளயம்
மேவிய மற்றது உடம்பாய்மிக் குள்ளன
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட்டு உருத்திர ராமே.    10.9.7.5

ஓம் பவாய நம:

சிவனெனும் நாமந் தனக்கே 
  யுடையசெம் மேனியெம்மான்
அவனெனை ஆட்கொண் டளித்திடு 
  மாகில் அவன்றனையான்
பவனெனு நாமம் பிடித்துத் 
  திரிந்துபன் னாளழைத்தால்
இவனெனைப் பன்னாள் அழைப்பொழி 
  யானென் றெதிர்ப்படுமே.      4.112.9

அவனென்று நானுன்னை அஞ்சா தேனை 
    அல்ல லறுப்பானே யென்றேன் நானே
சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச்
    செல்வந் தருவானே யென்றேன் நானே
பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று 
    பண்டை வினையறுப்பா யென்றேன் நானே
அவனென்றே யாதியே ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.       6.37.8

சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்
    செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்
புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்
    பொன்னாகி மணியாகி முத்து மாகிப்
பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப்
    பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற
தவனாய தலையாலங் காடன் றன்னைச்
    சாராதே சாலநாள் போக்கி னேனே.    6.79.4

..................
பத்தா போற்றி பவனே போற்றி
.................       8.1.176

பவன்எம் பிரான்பனி மாமதிக் 
    கண்ணிவிண் ணோர்பெருமான்
சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண்டான் 
    என் சிறுமைகண்டும்
அவன்எம் பிரான்என்ன நான்அடி 
    யேன்என்ன இப்பரிசே
புவன்எம் பிரான்தெரி யும்பரி 
    சாவ தியம்புகவே.       8.1.5.9

சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற்
பவனவன் வைத்த பழிவழி நாடி
இவனவன் என்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள தாங்கட னாமே.    10.6.20.4

அவனிவன் ஈசனென் றன்புற நாடிச்
சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார்
பவனிவன் பல்வகை யாமிப் பிறவி
புவனிவன் போவது பொய்கண்ட போதே.    10.9.40.8

தவனே உலகுக்குத் தானே 
  முதல்தான் படைத்தவெல்லாம்
சிவனே முழுதும்என் பார்சிவ 
  லோகம் பெறுவர்செய்ய
அவனே அடல்விடை ஊர்தி 
  கடலிடை நஞ்சமுண்ட
பவனே எனச்சொல்லு வாரும் 
  பெறுவர்இப் பாரிடமே.       11.7.5

அக்காரம் ஆடரவம் 
  நாண்அறுவை தோல்பொடிசாந்
தக்காரம் தீர்ந்தேன் 
  அடியேற்கு -வக்காரம்
பண்டரங்கன் எந்தை 
  படுபிணஞ்சேர் வெங்காட்டுப்
பண்டரங்கன் எங்கள் பவன்.     11.23.54

பவனடிபார் விண்நீர் 
  பகலோன் மதிதீப்
பவனஞ்சேர் ஆரமுதம் 
  பெண்ஆண் -பவனஞ்சேர்
காலங்கள் ஊழி அவனே கரிகாட்டிற்
காலங்கை ஏந்தினான் காண்.      11.23.55

தவனைத் தவத்தவர்க் கன்பனைத் 
  தன்அடி எற்குதவும்
சிவனைச் சிவக்கத் திரிபுரத் 
  தைச்சிவந் தானைச் செய்ய
அவனைத் தவளத் திருநீ 
  றனைப்பெரு நீர்கரந்த
பவனைப் பணியுமின் நும்பண்டை 
  வல்வினை பற்றறவே.     11.33.66

ஓம் கபாலிநே நம:

குண்டு முற்றிக் கூறை யின்றியே
பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்
வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்
கண்டு தொழுமின் கபாலி வேடமே.    1.27.10

கரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி
புரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.    1.134.5

நலந்தா னவன்நான்
  முகன்றன் தலையைக்
கலந்தா னதுகொண்
  டகபா லியுந்தான்
புலந்தான் புகழா
  லெரிவிண் புகழும்
நிலந்தான் நெல்லிக்கா
  வுள்நிலா யவனே.     2.19.3
  
எம்பிரான் எனக்கமுத
  மாவானுந் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானுந்
  தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த
  காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம
  புரத்துறையும் வானவனே.  2.40.1

கைம்மாவின் தோல்போர்த்த
  காபாலி வானுலகில்
மும்மா மதிலெய்தான்
  முக்கணான் பேர்பாடி
அம்மா மலர்ச்சோலை
  ஆமாத்தூர் அம்மான்எம்
பெம்மானென் றேத்தாதார்
  பேயரிற் பேயரே.     2.44.2

கறையார் மணிமிடற்றான்
  காபாலி கட்டங்கன்
பிறையார் வளர்சடையான்
  பெண்பாகன் நண்பாய
நறையார் பொழில்புடைசூழ்
  நாலூர் மயானத்தெம்
இறையானென் றேத்துவார்க்
  கெய்துமாம் இன்பமே.     2.46.5

மட்டிட்ட புன்னையங்
  கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான்
  கபாலீச் சரம்அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின்
  உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே
  போதியோ பூம்பாவாய்.  2.47.1 

மைப்பயந்த ஒண்கண்
  மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான்
  கபாலீச் சரம்அமர்ந்தான்
ஐப்பசி ஓண
  விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே
  போதியோ பூம்பாவாய்.  2.47.2 

வளைக்கை மடநல்லார்
  மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்
  சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார்
  தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
  போதியோ பூம்பாவாய்.  2.47.3 

ஊர்திரை வேலை
  யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார்
  கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக்
  கபாலீச் சரம்அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே
  போதியோ பூம்பாவாய்.  2.47.4 

மைப்பூசும் ஒண்கண்
  மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான்
  கபாலீச் சரம்அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல்
  நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே
  போதியோ பூம்பாவாய்.  2.47.5 

மடலார்ந்த தெங்கின்
  மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான்
  கபாலீச் சரம்அமர்ந்தான்
அடல்ஆனே றூரும்
  அடிக ளடிபரவி
நடமாடல் காணாதே
  போதியோ பூம்பாவாய்.  2.47.6 

மலிவிழா வீதி
  மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான்
  கபாலீச் சரம்அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய்
  பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே
  போதியோ பூம்பாவாய்.  2.47.7 

தண்ணா அரக்கன்தோள்
  சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக்
  கபாலீச் சரம்அமர்ந்தான்
பண்ணார் பதினெண்
  கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே
  போதியோ பூம்பாவாய்.  2.47.8 

நற்றா மரைமலர்மேல்
  நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா
  மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங்
  கபாலீச் சரம்அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே
  போதியோ பூம்பாவாய்.  2.47.9 

உரிஞ்சாய வாழ்க்கை
  அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க
  ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த
  கபாலீச் சரம்அமர்ந்தான்
பெருஞ் சாந்தி காணாதே
  போதியோ பூம்பாவாய்.  2.47.10 

கானமர் சோலைக்
  கபாலீச் சரம்அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப்
  பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்தன்
  நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம் பந்தத்
  தவரோடும் வாழ்வாரே.     2.47.11

வண்டிரைக்கும் மலர்க்கொன்றை
  விரிசடைமேல் வரியரவங்
கண்டிரைக்கும் பிறைச்சென்னிக்
  காபாலி கனைகழல்கள்
தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத்
  துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளந்
தெண்டிரைக்கண் கொணர்ந்தெறியுந்
  திருவேட்டக் குடியாரே.      3.66.1
  
நிணந்தரும யானநில வானமதி
  யாததொரு சூலமொடுபேய்க்
கணந்தொழு கபாலிகழ லேத்திமிக
  வாய்த்ததொரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம்
  பந்தன்மயி லாடுதுறையைப்
புணர்ந்ததமிழ் பத்துமிசை யாலுரைசெய்
  வார்பெறுவர் பொன்னுலகமே.    3.70.11

மழைவளர் இளமதி மலரொடு
  தலைபுல்கு வார்சடைமேற்
கழைவளர் புனல்புகக் கண்டவெங்
  கண்ணுதற் கபாலியார்தாம்
இழைவளர் துகிலல்குல் அரிவையோ
  டொருபகல் அமர்ந்தபிரான்
விழைவளர் துருத்தியார் இரவிடத்
  துறைவர்வேள் விக்குடியே.    3.90.3
  
வளங்கிளர் மதியமும் பொன்மலர்க்
  கொன்றையும் வாளரவுங்
களங்கொளச் சடையிடை வைத்தஎங்
  கண்ணுதற் கபாலியார்தாந்
துளங்குநூல் மார்பினர் அரிவையோ
  டொருபகல் அமர்ந்தபிரான்
விளங்குநீர்த் துருத்தியார் இரவிடத்
  துறைவர்வேள் விக்குடியே.    3.90.5

மறையு மோதுவர்
  மான்மறிக் கையினர்
கறைகொள் கண்ட
  முடைய கபாலியார்
துறையும் போகுவர்
  தூயவெண் ணீற்றினர்
பிறையுஞ் சூடுவர்
  பேரெயி லாளரே.     5.16.1

வெண்ணித் தொன்னகர்
  மேயவெண் டிங்களார்
கண்ணித் தொத்த
  சடையர் கபாலியார்
எண்ணித் தம்மை
  நினைந்திருந் தேனுக்கு
அண்ணித் திட்டமு
  தூறுமென் நாவுக்கே.    5.17.2

புற்றில் வாளர
  வாட்டி உமையொடு
பெற்ற மேறுகந்
  தேறும் பெருமையான்
மற்றை யாரொடு
  வானவ ருந்தொழ
ஒற்றி யூருறை
  வானோர் கபாலியே.    5.24.5

கட்டி விட்ட
  சடையர் கபாலியர்
எட்டி நோக்கிவந்
  தில்புகுந் தவ்வவர்
இட்ட மாவறி
  யேனிவர் செய்வன
பட்ட நெற்றியர்
  பாசூ ரடிகளே.      5.25.7
  
வேத மோதிவந்
  தில்புகுந் தாரவர்
காதில் வெண்குழை
  வைத்த கபாலியார்
நீதி யொன்றறி
  யார்நிறை கொண்டனர்
பாதி வெண்பிறைப்
  பாசூ ரடிகளே.    5.25.8

இரங்கா வன்மனத்
  தார்கள் இயங்குமுப்
புரங்கா வல்லழி
  யப்பொடி யாக்கினான்
தரங்கா டுந்தட
  நீர்ப்பொன்னித் தென்கரைக்
குரங்கா டுதுறைக்
  கோலக் கபாலியே.     5.63.1

கயிலை நன்மலை
  யாளுங் கபாலியை
மயிலி யன்மலை
  மாதின் மணாளனைக்
குயில்ப யில்பொழிற்
  கோழம்ப மேயவென்
உயிரி னைநினைந்
  துள்ளம் உருகுமே.      5.64.2

கார ணத்தர்
  கருத்தர் கபாலியார்
வார ணத்துரி
  போர்த்த மணாளனார்
ஆர ணப்பொருள்
  அன்பிலா லந்துறை
நார ணற்கரி
  யானொரு நம்பியே.     5.80.2

ஆப்பி நீரோ
  டலகுகைக் கொண்டிலர்
பூப்பெய் கூடை
  புனைந்து சுமந்திலர்
காப்புக் கொள்ளி
  கபாலிதன் வேடத்தை
ஓப்பிக் காணலுற்
  றாரங் கிருவரே.      5.95.3

பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்
    பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
சிட்டராய்த் தீயேந்திச் செல்வார் தம்மைத் 
    தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே 
    ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
கட்டங்கங் கையதே சென்று காணீர்
    கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே.    6.2.11

மண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
    மால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி
விண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
    வேழத் துரிமூடும் விகிர்தா போற்றி
பண்டுளங்கப் பாடல் பயின்றாய் போற்றி 
    பார்முழுது மாய பரமா போற்றி
கண்டுளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி
    கார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி.      6.5.7

உரைமாலை யெல்லா முடையவடி
    உரையால் உணரப் படாதவடி
வரைமாதை வாடாமை வைக்கும்மடி
    வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி
அரைமாத் திரையில் லடங்கும்மடி
    அகலம் அளக்கிற்பார் இல்லாவடி
கரைமாங் கலிக்கெடில நாடன்னடி
    கமழ்வீரட் டானக் காபாலியடி.     6.6.7
    
தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்
    சீர்காழி வல்லந் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல்அம்பர்
    உறையூர் நறையூர் அரணநல்லூர்
விண்ணார் விடையான் விளமர்வெண்ணி
    மீயச்சூர் வீழி மிழலைமிக்க
கண்ணார் நுதலார் கரபுரமுங்
    காபாலி யாரவர்தங் காப்புக்களே.     6.7.7

எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்
    ஏகம்ப மேயான்காண் இமையோ ரேத்தப்
பொல்லாப் புலனைந்தும் போக்கி னான்காண்
    புரிசடைமேற் பாய்கங்கை பூரித் தான்காண்
நல்லவிடை மேற்கொண்டு நாகம் பூண்டு
    நளிர்சிரமொன் றேந்தியோர் நாணா யற்ற
கல்லாடை மேற்கொண்ட காபா லிகாண்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே.   6.8.6

கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்
    கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்
    எண்டிசையுந் தானாய குணத்தி னான்காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்
    தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்
கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே.     6.8.7

இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண்
    இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின் றான்காண்
வில்லாடி வேடனா யோடி னான்காண் 
    வெண்ணூ லுஞ்சேர்ந்த அகலத் தான்காண்
மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்
    மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்
கல்லாலின் கீழிருந்த காபா லிகான்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே.    6.8.8

இறையவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
    ஏழ்கடலுஞ் சூழ்மலையு மாயி னான்காண்
குறையுடையார் குற்றேவல் கொள்வான் றான்காண்
    குடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவி னான்காண்
மறையுடைய வானோர் பெருமான் றான்காண்
    மறைக்காட் டுறையும் மணிகண் டன்காண்
கறையுடைய கண்டத்தெங் காபா லிகாண்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே.    6.8.10

வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று 
    வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்
    கடியதோர் விடையேறிக் காபா லியார்
சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்
    தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.     6.9.1

கட்டங்கந் தாமொன்று கையி லேந்திக்
    கடிய விடையேறிக் காபா லியார்
இட்டங்கள் தாம்பேசி இல்லே புக்கு
    இடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர்
பட்டிமையும் படிறுமே பேசா நின்றார்
    பார்ப்பாரைப் பரிசழிப்பார் போல்கின் றார்தாம்
அட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.     6.9.3

கைகிளரும் வீணை வலவன் கண்டாய்
    காபாலி கண்டாய் திகழுஞ் சோதி
மெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்
    மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்
பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்
    பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்
வைகிளருங் கூர்வாட் படையான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.    6.23.2

பிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண்
    பிறப்பிலிகாண் பெண்ணோடா ணாயி னான்காண்
கறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண்
    கழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபா லிகாண்
இறையுருவக் கனவளையாள் இடப்பா கன்காண்
    இருநிலன்காண் இருநிலத்துக் கியல்பா னான்காண்
சிறையுருவக் களிவண்டார் செம்மை யான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.      6.24.6
    
பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண்
    பேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண்
கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண்
    கட்டங்கன் காண்கையிற் கபால மேந்திப்
பறையோடு பல்கீதம் பாடி னான்காண்
    ஆடினான் காண்பாணி யாக நின்று
மறையோடு மாகீதங் கேட்டான் றான்காண்
    மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.    6.49.6

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்
    வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்
    கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப் 
    பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோ ர்
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
    வீழி மிழலையே மேவி னாரே.      6.51.7

தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்
    சக்கரம் புட்பாகற் கருள்செய் தான்காண்
கண்ணுமொரு மூன்றுடைய காபா லிகாண்
    காமனுடல் வேவித்த கண்ணி னான்காண்
எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண்
    இருவர்க் கெரியா யருளி னான்காண்
விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்
    விண்ணிழிதண் வீழி மிழலை யானே.    6.52.3
    
கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக் 
    காலினாற் காய்ந்துகந்த காபா லியார்
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி
    முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச் 
    சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி
    வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.     6.58.6
    
காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக்
    காபாலி கட்டங்க மேந்தி னானைப்
பாரொளியை விண்ணொளியைப் பாதாளத் தானைப்
    பான்மதியஞ் சூடியோர் பண்பன் றன்னைப்
பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் றன்னைப்
    பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ்
சீரொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
    தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.   6.68.2

கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக்
    கமலத்தோன் றலையரிந்த காபா லியை
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை
    உணர்வெலா மானானை ஓசை யாகி
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை
    மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய
திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய
    திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.    6.86.1
    
பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப்
    பாய்புலித்தோ லுடையானைப் பகவன் றன்னைச்
சொல்லோடு பொருளனைத்து மானான் றன்னைச்
    சுடருருவில் என்பறாக் கோலத் தானை
அல்லாத காலனைமுன் னடர்த்தான் றன்னை
    ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்
கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.      6.92.2
    
ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார்
    அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்
தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார்
    தலையதனிற் பலிகொண்டார் நிறைவாந் தன்மை
வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார்
    மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார்
காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக்
    கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே.     6.96.1

சடசட விடுபெணை
  பழம்படும் இடவகை
படவட கத்தொடு
  பலிகலந் துலவிய
கடைகடை பலிதிரி
  கபாலிதன் இடமது
இடிகரை மணலடை
  இடம்வலம் புரமே.      7.72.9

கம்பமருங் கரியுரியன்
  கறைமிடற்றன் காபாலி
செம்பவளத் திருவுருவன்
  சேயிழையோ டுடனாகி
நம்பியிங்கே இருந்தீரே
  என்றுநான் கேட்டலுமே
உம்பர்தனித் துணையெனக்கு
  உளோம்போகீர் என்றானே.      7.89.4
  
பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான்
சீரார் திருவடி யென் தலைமேல் வைத்தபிரான்
காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி
போரார் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ.      8.1.13.10

அண்டஞ்சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே        10.4.13.12

நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த வுயிரது வுண்ணும் பொழுது
படர்ந்த வுடல்கொடு பந்தாட லாமே.      10.5.10.2

காணாய் கபாலி கதிர்முடிமேற் கங்கைதனைக்
காணாயக் காருருவிற்  சேருமையைக் - காணாய்
உடைதலைகொண் டூரூர் திரிவானை நச்சி
உடைதலைகொண் டூரூர் திரி.     11.24.12

மா பாவிக் கடை 
  அமணர் வாகீசத் திருவடியாம் 
கா பாலி அடியவர் பால் 
  கடக் களிற்றை விடுக என்னப் 
பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் 
  தொழிலோன் அவர் தம் மேல் 
கோ பாதி சயமான கொலைக் 
  களிற்றை விடச் சொன்னான்.     12.27.109

கங்கை வார் சடையார் 
  கபாலீச்சரத்து அணைந்து 
துங்க நீள் சுடர்க் 
  கோபுரம் தொழுது புக்கருளி 
மங்கை பங்கர்தம் கோயிலை 
  வலம் கொண்டு வணங்கிச் 
செங்கை சென்னி மேல் 
  குவிந்திடத் திருமுன்பு சேர்ந்தார்.  12.34.1077 


தேவ தேவனைத் திருக் 
  கபாலீச்சரத்து அமுதைப் 
பாவை பாகனைப் பரிவுறு 
  பண்பினால் பரவி 
மேவு காதலின் விரும்பிய 
  விரைவினால் விழுந்து 
நாவின் வாய்மையில் போற்றினார் 
  ஞான சம்பந்தர்.  12.34.1078 

மூடு பன் மணிச் 
  சிவிகை உள்பெய்து முன்போத 
மாடு சேடியர் இனம் புடை 
  சூழ்ந்து வந்து அணைய 
ஆடல் மேவினார் திருக் 
  கபாலீச்சரம் அணைந்து 
நீடு கோபுரத்து எதிர் 
  மணிச் சிவிகையை நீக்கி.  12.34.1082 

தேவர் பிரான் அமர்ந்து 
  அருளும் திருக் கபாலீச்சரத்து 
மேவிய ஞானத் தலைவர் 
  விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும் 
காவலனார் பெருங்கருணை கை 
  தந்த படி போற்றிப் 
பாவலர் செந்தமிழ் பாடிப் பன் 
  முறையும் பணிந்து எழுவார்.    12.34.1118

ஓம் காமாரயே நம:

இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள்
முருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்து
உருக்கொண்டு தொக்க உடல்ஒழி யாதே.    10.9.3.8

நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலந்துளங்கச் சப்பாணி  கொட்டும் -கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி.      11.26.2

ஓம் கங்காதராய நம:

தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்
கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே.     1.81.10

எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே.     1.113.1

விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற அடிகளே.      1.35.7

நச்சர வாட்டிலர் போலும் நஞ்ச
  மிடற்றிலர் போலும்
கச்சுத் தரித்திலர் போலும் கங்கை
  தரித்திலர் போலும்
மொய்ச்சவன் பேயிலர் போலும் முப்புரம்
  எய்திலர் போலும்
பிச்சை இரந்திலர் போலும் பிரம
  புரம்அமர்ந் தாரே.       2.65.4
  
ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை யொளிமருவு     
  காழி கொச்சை    
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த் தோணிபுரங்     
  கற்றோ ரேத்துஞ்    
சீர்மருவு பூந்தராய் சிரபுரம்மெய்ப் புறவம்அய    
  னூர்பூங் கற்பத்    
தார்மருவும் இந்திரனூர் புகலிவெங் குருக்கங்கை    
  தரித்தோ னூரே.       2.74.3
  
விரித்தபல் கதிர்கொள் சூலம் 
  வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல காலப் 
  பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு 
  ஒண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் 
  செந்நெறிச் செல்வ னாரே.      4.73.6

உடையர் கோவண
  மொன்றுங் குறைவிலர்
படைகொள் பாரிடஞ்
  சூழ்ந்தபைஞ் ஞீலியார்
சடையிற் கங்கை
  தரித்த சதுரரை
அடைய வல்லவர்க்
  கில்லை அவலமே.    5.41.1

தரித்த வன்கங்கை
  பாம்பு மதியுடன்
புரித்த புன்சடை
  யான்கய வர்புரம்
எரித்த வன்மறை
  நான்கினோ டாறங்கம்
விரித்த வன்னுறை
  வெண்கா டடைநெஞ்சே.     5.49.7

விடையின்மேல் வருவானை
  வேதத்தின் பொருளானை
அடையில்அன் புடையானை
  யாவர்க்கும் அறியொண்ணா
மடையில்வா ளைகள்பாயும்
  வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையிற்கங்கை தரித்தானைச்
  சாராதார் சார்பென்னே.     7.86.1

..........
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
.........      8.1.4.156

 

ஓம் காலகாலாய நம:

புரிசடையாய் புண்ணியனே 
  நண்ணலார்மூ வெயிலும்
எரியஎய்தாய் எம்பெருமான் 
  என்றிமையோர் பரவும்
கரியுரியாய் காலகாலா 
  நீலமணி மிடற்று
வரியரவா வந்துநல்காய் 
  வலிவலமே யவனே.       1.50.6
  
ஆல நீழலார், ஆல வாயிலார்
கால காலனார், பால தாமினே.   1.94.3

கால காலர்கரி கானிடை
  மாநட மாடுவர்
மேலர் வேலைவிட முண்டிருள்
  கின்றமி டற்றினர்
மாலை கோலமதி மாடமன்
  னுந்திரு வாஞ்சியம்
ஞாலம் வந்துபணி யப்பொலி
  கோயில் நயந்ததே.    2.7.2

புரிசடை முடியின் மேலோர் 
  பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக் 
  கருதிய கால காலா
அரிகுலம் மலிந்த அண்ணா 
  மலையுளாய் அலரின் மிக்க
வரிமிகு வண்டு பண்செய் 
  பாதநான் மறப்பி லேனே.   4.63.6
  
சூல மேந்துவர்
  தோலுடை ஆடையர்
ஆல முண்டமு
  தேமிகத் தேக்குவர்
கால காலர்
  கடவூர் மயானத்தார்
மாலை மார்பர்
  பெருமா னடிகளே.      5.38.3
  
மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக
    வழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதி யென்றும்
    அம்மானே ஆரூரெம் மையா வென்றுந்
துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச் 
    சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக்
கதிர்மதிசேர் சென்னியனே கால காலா
    கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.    6.31.8
    
விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
  மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர்
  கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த
  இறைவ ருமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப்
  பெரிய பெருமா னடிகளே.     7.53.2
  
ஆலந் தான்உகந் தமுதுசெய் தானை    
  ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்    
சீலந் தான்பெரி தும்முடை யானைச்    
  சிந்திப் பாரவர் சிந்தையு ளானை    
ஏல வார்குழ லாள்உமை நங்கை    
  என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற    
கால காலனைக் கம்பனெம் மானைக்    
  காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.   7.61.1
  
பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும்
  பலருங் கண்டழு தெழவுயிர் உடலைப்
பிரிந்து போமிது நிச்சயம் அறிந்தாற்
  பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து
கருந்த டங்கண்ணி பங்கனை உயிரைக்
  கால காலனைக் கடவுளை விரும்பிச்
செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட்
  சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.     7.68.8
  
கங்கை வார்சடை யாய்கண நாதா
  கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
  பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
  தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சலென் றருளாய்
  ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.      7.70.1
  
கோலமே மேலை வானவர் கோவே !
  குணங்குறி இறந்ததோர் குணமே !
காலமே கங்கை நாயகா எங்கள்
  காலகாலா! காம நாசா !
ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொற்
  கோயில்கொண்டு ஆடவல் லானே !
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
  தொண்டனேன் நணுகுமா நணுகே.    9.1.5
  
பாலும் அமுதமும் தேனுமாய்
    ஆனந்தம் தந்துள்ளே பாலிப்பான்
போலும்என் ஆருயிர்ப் போகமாம்
     புரகால காமபு ராந்தகன்
சேலும் கயலும் திளைக்குநீர்த்
    திருவா வடுதுறை வேந்தனோ(டு)
ஆலும் அதற்கே முதலுமாம்
    அறிந்தோம் அரிவைபொய் யாததே.    9.6.11

 

ஓம் பீமாய நம:

ஓமத் தோடயன் மாலறி யாவணம்

வீமப் பேரொளி யாய விழுப்பொருள்

காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்

சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே.   5.76.8

ஓம் ஜடாதராய நம:

சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன் வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன் அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள் சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே.   10.10.20.7

தாமமே தந்து சடாதாரி நல்கானேல் யாமமேல் எம்மை அடுமென்பார் -. 11.9.70

ஓம் திரிபுராந்தகாய நம:

செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமுந் திரிபுராந் தகந்தென்னார் தேவீச்சரங் கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக்காவுங் குடமூக்குங் கோகரணங் கோலக்காவும் பழிநீர்மை யில்லாப் பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையுங் கழுநீர் மதுவிரியுங் காளிங்கமுங் கணபதீச் சரத்தார்தங் காப்புக்களே.   6.7.5

ஓம் ஸதாசிவாய நம:

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி அங்கமலத் தயனோடு மாலுங் காணா அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி.  6.32.6

கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி கருமாலுக் கருள்செய்த கருணை யான்காண் விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண் வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண் தற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண் சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண் வெற்பரையன் பாவை விருப்பு ளான்காண் விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 6.52.7

அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய் அருமறைக ளாறங்க மானான் கண்டாய் தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் கண்டாய் மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் கொக்கமரும் வயற்புடைசூழ் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.  6.73.5

சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய் தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய் சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய் மண்டுபுனற் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய் கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.  6.73.6

நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத் தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மை யோடும் பொற்புடைய பேசக் கடவோம் பேயர் பேசுவன பேசுதுமோ பிழையற் றோமே. 6.98.7

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம் உவமா மகேசர் உருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே.  10.1.3.6

சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம் மிதாசனி யாதிருந் தேனின்ற காலம் இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி உதாசனி யாதுடனே உணர்ந் தோமால். 10.1.5.4

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின் நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன் நந்தி அருளால்மெய்ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நானிருந் தேனே.   10.1.5.20

தானொரு கூறு சதாசிவன் எம்மிறை வானொரு கூறு மருவியும் அங்குளான் கோனொரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற தானொரு கூறு சலமய னாமே.  10.1.9.10

மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித் தலங்கள்ஐந் தானற் சதாசிவ மான புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே.  10.2.1.6

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய் ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப் பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும் சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே.  10.3.9.4

ஆகாய மாதி சதாசிவ ராதியென் போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர் மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம் ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே.  10.3.9.20

அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில் அளியார் திரிபுரை யாமவள் தானே அளியார் சதாசிவ மாகி அமைவாள் அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.  10.3.9.21

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் படையவை எல்லாங் கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற் பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே . 10.4.11.45

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில் இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த் திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே .  10.4.11.57

காணலு மாகும் பிரமன் அரியென்று காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக் காணலு மாகுஞ் சதாசிவ சத்தியுங் காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே .  10.4.14.30

வாறே சதாசிவ மாறிலா ஆகமம் வாறே சிவகதி வண்டுறை பின்னையும் வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள் வாறே பொதுவாகும் மன்றின் அமலமே.  10.5.1.11

அவ்வுண்டு சவ்வுண்டு அனைத்தும் அங்கு உள்ளது கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வார்இல்லை கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வாளர்க்குச் சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே.  10.5.2.20

நம்முதல் ஓர்ஐந்தின் நாடுங் கருமங்கள் அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத் தம்முதல் ஆகும் சதாசிவந் தானே. 10.5.2.70

ஆமயன் மாலரன் ஈசன் சதாசிவன் தாமடி சூடிநின் றெய்தினர் தம்பதங் காமனுஞ் சாமன் இரவி கனலுடன் சோமனும் வந்தடி சூடநின் றாளே.    10.5.8.54

ஆமே சதாசிவ நாயகி யானவள் ஆமே அதோமுகத் துள்ளறி வானவள் ஆமே சுவையொளி யூறோசை கண்டவள் ஆமே யனைத்துயிர் தன்னுளு மாமே.  10.5.13.32

உண்டோர் அதோமுகம் உத்தம மானது கண்டஇச் சத்தி சதாசிவ நாயகி கொண்ட முகமைந்து கூறுங் கரங்களும் ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானதே.  10.5.13.84

தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே. . 10.6.3.6

உலகில் எடுத்தது சத்தி முதலா உலகில் எடுத்தது சத்தி வடிவாய் உலகில் எடுத்தது சத்தி குணமாய் உலகில் எடுத்த சதாசிவன் தானே.   10.8.2.2

போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம் ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம் ஆகம அத்துவா ஆறும் சிவமே.   10.8.2.3

தூய விமானமும் தூலமது ஆகுமால் ஆய சதாசிவம் ஆகுநற் சூக்குமம் ஆய பலிபீடம் பத்திர லிங்கமாம் ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே. . 10.8.2.7

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம் மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.    10.8.3.1

கூடிய பாதம் இரண்டும் படிமிசை பாடிய கையிரண்டு எட்டுப் பரந்தெழுந் தேடு முகம்ஐந்து செங்கையின் மூவைந்து நாடும் சதாசிவம் நல்லொளி முத்தே.  10.8.4.1

வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன் மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும் சாதா ரணமாம் சதாசிவந் தானே. 10.8.4.2

சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள சமயத்து எழுந்த இராசி ஈராறுள சமயத்து எழுந்த சரீரம்ஆ றெட்டுள சமயத்து எழுந்த சதாசிவந் தானே.  10.8.4.5

சத்தி தராதலம் அண்டம் சதாசிவம் சத்தி சிவமிக்க தாபர சங்கமம் சத்தி உருவம் அருவம் சதாசிவம் சத்தி சிவதத்துவ முப்பத் தாறே.  10.8.4.8

தத்துவ மாவது அருவம் சராசரம் தத்துவ மாவது உருவம் சுகோதயம் தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும் தத்துவம் ஆகும் சதாசிவம் தானே.    10.8.4.9

கூறுமின் ஊறு சதாசிவன் எம்இறை வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய்நிற்கும் ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடு மாறுசெய் வான் என் மனம்புகுந் தானே.    10.8.4.10

சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும் சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும் சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும் சத்தி உருவாம் சதாசிவன் தானே. .   10.8.4.16

தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும் தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும் தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாந் தன்மேனி தானாகும் தற்பரம் தானே.   10.8.4.21

சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம் சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம் சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம் சத்தி சிவமாகும் தாபரம் தானே.  10.8.5.3

சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும் சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம் சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே. 10.8.5.6

உருவும் அருவும் உருவோடு அருவும் மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும் குருவு மெனநிற்கும் கொள்கையன் ஆகும் தருவென நல்கும் சதாசிவன் தானே. .  10.8.6.1

தலையான நான்கும் தனதுஅரு வாகும் அலையா அருவுரு வாகும் சதாசிவம் நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும் துலையா இறைமுற்று மாய் அல்லது ஒன்றே.   10.8.9.19

பான்மொழி பாகன் பராபரன் தானாகும் ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே.  10.8.11.3

மனபவ னங்களை மூலத்தான் மாற்றி அனித உடல்பூத மாக்கி அகற்றிப் புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத் தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே. 10.8.12.8

தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும் ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால் ஏனைச் சிவமாம் சொரூபம் மறைந்திட்ட மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.  10.8.17.4

ஆணவ மாதி மலம்ஐந்து அலரோனுக்கு ஆணவ மாதிநான் காம்மாற்கு அரனுக்கு ஆணவ மாதிமூன்று ஈசர்க்கு இரண்டென்ப ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே.  10.9.4.17

ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம் ஏதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம் போதம் கலைகால நியதிமா மாயை நீதிஈ றாக நிறுத்தினன் என்னே.   10.9.6.4

தேசு திகழ்சிவம் சத்தி சதாசிவம் ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம் மாசகல் வித்தை நியதி மகாமாயை ஆசில் புருடாதி ஆன்மாஈ றாறே.   10.9.6.5

ஆனஅவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத் தான்உலகு உண்டு சதாசிவ மாசத்தி மேனிகள் ஐந்தும்போய் விட்டுச் சிவமாகி மோனம் அடைந்தொளி மூலத்த னாமே. .  10.9.6.32

சார்வாம் பரசிவஞ் சத்தி பரநாதம் மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப் பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதி தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே.  10.9.8.18

காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம் மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன் மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக் காலனும் இல்லை கருத்தில்லை தானே.    10.9.13.2

மேவும் பிரமனே விண்டு உருத்திரன் மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால் மேவும் பரவிந்து நாதம் விடாஆறாறு ஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள தாமே.  10.9.15.5

சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும் அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும் சிவமாம் சதாசிவன் செய்துஒன்றானானால் நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே.   10.9.15.24

தத்துவம் ஆகும் சகள அகளங்கள் தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம் தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம் தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.    10.9.15.27

சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன் சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர் முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச் சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே. .   10.9.30.15

அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால் உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல் கண்டம் கரியான் கருணை திருவுருக் கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே.   10.10.8.3.1

அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம் தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம் தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.  10.10.8.6.10

தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச் சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட வைத்த சராசரம் ஆட மறையாட அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.  10.10.8.6.28

நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னாந்தமும் தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து நாதப் பிரமம் சிவநட மாமே.  10.10.8.6.31

தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்ல நிட்களம் அல்ல சகள நிலையல்ல அற்புத மாகி அனுபோகக் காமம்போல் கற்பனை இன்றிக் கலந்துநின் றானே.  10.10.18.8

ஓம் வீரபத்ராய நம:

பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல் விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால் புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ.  8.1.13.4

ஓம் கணநாதாய நம:

சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர் சுடர்க்கமலப் போதகஞ்சேர் புண்ணியனார் பூத கணநாதர் மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில் விண்ணார்ந்த சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பை நகராரே.     1.66.2

விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண் வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால் மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண் மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப் பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண் பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற கற்றூண்காண் காளத்தி காணப் பட்ட கணநாதன் காணவனென் கண்ணு ளானே.    6.8.1

நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண் ஞானப் பெருங்கடற்கோர் நாவா யன்ன பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் றான்காண் புரிசடைமேற் புனலேற்ற புனிதன் றான்காண் சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் றான்காண் தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாங் காரணன்காண் காளத்தி காணப் பட்ட கணநாதன் காணவனென் கண்ணு ளானே.  6.8.3

செற்றான்காண் என்வினையைத் தீயா டிகாண் திருவொற்றி யூரான்காண் சிந்தை செய்வார்க் குற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண் உமையாள்நற் கொழுநன்காண் இமையோ ரேத்துஞ் சொற்றான்காண் சோற்றுத் துறையு ளான்காண் சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக் கற்றான்காண் காளத்தி காணப் பட்ட கணநாதன் காணவனென் கண்ணு ளானே.  6.8.4

மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும் வெண்கயிலை மேவினாய் நீயே யென்றும் பொன்னேர் சடைமுடியாய் நீயே யென்றும் பூத கணநாதன் நீயே யென்றும் என்னா விரதத்தாய் நீயெ யென்றும் ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும் தென்னூர்ப் பதியுளாய் நீயே யென்றும் நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. .  6.41.4

பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் றான்காண் பூதகண நாதன்காண் புலித்தோ லாடை தன்னிசைய வைத்தவெழி லரவி னான்காண் சங்கவெண் குழைக்காதிற் சதுரன் றான்காண் மின்னிசையும் வெள்ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்கவடி அடர்ப்பமீண் டவன்றன் வாயில் இன்னிசைகேட் டிலங்கொளிவாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. 6.65.10

செண்டா டும்விடையாய் சிவனேயென் செழுஞ்சுடரே வண்டாருங் குழலா ளுமைபாகம் மகிழ்ந்தவனே கண்டார் காதலிக்குங் கணநாதனெங் காளத்தியாய் அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.   7.26.1

படையார் வெண்மழுவா பகலோன்பல் லுகுத்தவனே விடையார் வேதியனே விளங்குங்குழைக் காதுடையாய் கடையார் மாளிகைசூழ் கணநாதனெங் காளத்தியாய் உடையாய் உன்னையல்லால் உகந்தேத்த மாட்டேனே.   7.26.3

காரா ரும்பொழில்சூழ் கணநாதனெங் காளத்தியுள் ஆரா வின்னமுதை அணிநாவலா ரூரன்சொன்ன சீரூர் செந்தமிழ்கள் செப்புவார்வினை யாயினபோய்ப் பேரா விண்ணுலகம் பெறுவார்பிழைப் பொன்றிலரே.  7.26.10

கங்கை வார்சடை யாய்கண நாதா கால காலனே காமனுக் கனலே பொங்கு மாகடல் விடமிடற் றானே பூத நாதனே புண்ணியா புனிதா செங்கண் மால்விடை யாய்தெளி தேனே தீர்த்த னேதிரு வாவடு துறையுள் அங்க ணாஎனை அஞ்சலென் றருளாய் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.  7.70.1

ஓம் ப்ரஜாபதயே நம:

தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன் நற்பத விராட்டன்பொன் கெற்பனவ் யாகிர்தன் பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன் பொற்புவி சாந்தன் பொருதபி மானியே.    10.9.32.1

ஓம் அநகாய நம:

கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும் உனகனா யரக்க னோடி யெடுத்தலு முமையா ளஞ்ச அனகனாய் நின்ற ஈச னூன்றலு மலறி வீழ்ந்தான் மனகனா யூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.   4.47.1

வேரி வளாய விரைமலர்க் கொன்றை புனைந்தனகன் சேரி வளாயவென் சிந்தை புகுந்தான் திருமுடிமேல் வாரி வளாய வருபுனற் கங்கை சடைமறிவாய் ஏரி வளாவிக் கிடந்தது போலும் இளம்பிறையே. .  4.113.9

தனதன்நல் தோழா சங்கரா ! சூல பாணியே! தாணுவே சிவனே ! கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே கண்கள்மூன் றுடையதோர் கரும்பே ! அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரசே கரனே ! நுனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத் தொண்டனேன் நுகருமா நுகரே. .   9.1.7

ஓம் புஜங்கபூஷணாய நம:

மயங்கும்மாயம் வல்லராகி வானினொடு நீரும் இயங்குவோருக் கிறைவனாய இராவணன்தோள் நெரித்த புயங்கராக மாநடத்தன் புணர்முலைமா துமையாள் முயங்குமார்பன் முனிவரேத்த மேயதுமு துகுன்றே.   1.53.8

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின் சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ டங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலைப் பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும் பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின் போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங் கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. . 1.126.3

முதிருநீர்ச் சடைமுடி முதல்வநீ முழங்கழல் அதிரவீசி யாடுவாய் அழகன்நீ புயங்கன்நீ மதுரன்நீ மணாளன்நீ மதுரையால வாயிலாய் சதுரன்நீ சதுர்முகன் கபாலமேந்து சம்புவே. .  3.52.4

........
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
,.......     8.1.4.223

போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன் போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை போற்றியோ நமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய் போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி.  8.1.5.62

அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்சல் என்னினல்லால் விரைசேர் முடியாய் விடுதிகண் டாய்வெண் ணகைக்கருங்கண் திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான்வந்து அடர்வனவே.    8.1.6.37

பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின் போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே.  8.1.45.1

புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள் நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே.  8.1.45.2

தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் யாமார் எமதார் பாசமார் என்ன மாயம் இவைபோகக் கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.  8.1.45.3

அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக் கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச் செடிசே ருடலைச் செலநீக்கிச் சிவலோ கத்தே நமைவைப்பான் பொடிசேர் மேனிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே.  8.1.45.4

விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின் அடைவோம் நாம்போய்ச் சிவபுரத் துள் அணியார் கதவ தடையாமே புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கன் ஆள்வான் புகழ்களையே.  8.1.45.5

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தாளே புந்திவைத்திட்டு இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம் நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே.  8.1.45.6

நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே.  8.1.45.7

பெருமான் பேரானந்தத்துப் பிரியா திருக்கப் பெற்றீர்காள் அருமா லுற்றுப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே திருமா மணிசேர் திருக்கதவம் திறந்த போதே சிவபுரத்துத் திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே.  8.1.45.8

சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின் போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம் ஆரப் பருகி ஆராத ஆர்வங் கூர அழுந்துவீர் போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே.  8.1.45.9

புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தா ளாகாதீர் மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர் தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன் அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே.  8.1.45.10

நாடும் நகரும் திரிந்துசென்று நன்னெறி நாடி நயந்தவரை மூடி முதுபிணத் திட்டமாடே முன்னிய பேய்க்கணம் சூழச்சூழக் காடுங் கடலும் மலையும் மண்ணும் விண்ணுஞ் சுழல அனல்கையேந்தி ஆடும் அரவப் புயங்கன்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே. .  11.2.8
    
ஓம் பகவதே நம:

உரமன்னுயர்கோட் டுலறுகூகை 
  யலறும் மயானத்தில்
இரவிற்பூதம் பாடஆடி 
  யெழிலா ரலர்மேலைப்
பிரமன்தலையின் நறவமேற்ற 
  பெம்மான் எமையாளும்
பரமன்பகவன் பரமேச்சுவரன் 
  பழன நகராரே.         1.67.4
  
நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே.     1.121.1

மகர வார்கடல் வந்தண 
  வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன் 
  எழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப் பரவுசொல் 
  மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை 
  யோடுட னாவரே.     2.1.11
  
நகுவான் மதியோ
  டரவும் புனலும்
தகுவார் சடையின்
  முடியாய் தளவம்
நகுவார் பொழில்நா
  கேச்சர நகருள்
பகவா எனவல்
  வினைபற் றறுமே.     2.24.4
  
பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர    
  னொடுதோழ மைக்கொள் பகவன்    
இனியன அல்லவற்றை யினிதாக நல்கும்    
  இறைவன் இடங்கொள் பதிதான்    
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம்    
  வளர்தூம மோடி யணவிக்    
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து    
  நிறைகின்ற கொச்சை வயமே.    2.93.5
  
குறைவதாய குளிர்திங்கள்
  சூடிக் குனித்தான்வினை
பறைவதாக்கும் பரமன்
  பகவன் பரந்தசடை
இறைவன்எங்கள் பெருமான்
  இடம்போல் இரும்பைதனுள்
மறைகள்வல்லார் வணங்கித்
  தொழுகின்ற மாகாளமே.     2.117.6
  
ஆகந்தோயணி கொன்றை யாய்அனல்    
  அங்கையாய்அம ரர்க்கம ராஉமை    
பாகந்தோய்பகவா பலியேற்றுழல் பண்டரங்கா    
  மாகந்தோய்பொழில் மல்குசிற் றம்பலம்    
மன்னினாய்மழு வாளி னாய் அழல்    
  நாகந்தோயரையாய் அடியாரை நண்ணாவினையே.     3.1.6
  
பகலொளிசெய் நகமணியை முகைமலரை                        
  நிகழ்சரண வகவுமுனிவர்க்                        
ககலமலி சகலகலை மிகவுரைசெய்                         
  முகமுடைய பகவனிடமாம்                        
பகைகளையும் வகையில்அறு முகஇறையை                         
  மிகஅருள நிகரிலிமையோர்                        
புகவுலகு புகழஎழில் திகழநிக                      
  ழலர்பெருகு புகலிநகரே.     3.67.3
  
பணங்கெழுவு பாடலினொ டாடல்பிரி
  யாதபர மேட்டிபகவன்
அணங்கெழுவு பாகமுடை ஆகமுடை
  யன்பர்பெரு மானதிடமாம்
இணங்கெழுவி யாடுகொடி மாடமதில்
  நீடுவிரை யார்புறவெலாந்
தணங்கெழுவி யேடலர்கொள் தாமரையில்
  அன்னம்வளர் சண்பைநகரே.     3.75.5
  
பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்
    பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
சிட்டராய்த் தீயேந்திச் செல்வார் தம்மைத் 
    தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே 
    ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
கட்டங்கங் கையதே சென்று காணீர்     6.2.11

அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்
    அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்
பணமணிமா நாக முடையான் கண்டாய்
    பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்
மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
    மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற்
    கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.    6.73.7
    
பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப்
    பாய்புலித்தோ லுடையானைப் பகவன் றன்னைச்
சொல்லோடு பொருளனைத்து மானான் றன்னைச்
    சுடருருவில் என்பறாக் கோலத் தானை
அல்லாத காலனைமுன் னடர்த்தான் றன்னை
    ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்
கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.     6.92.2
    
கருதிவா னவனாம் திருநெடு மாலாம்
  சுந்தர விசும்பின்இந் திரனாம்
பருதிவா னவனாம் படர்சடை முக்கண்
  பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம்
எருதுவா கனனாம் எயில்கள் மூன்(று) எரித்த
  ஏறுசே வகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை
  கொண்டசோ ளேச்சரத் தானே.      9.13.5
  
தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும்
பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு
உன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.    10.5.6.5

கன்னியுங் கன்னி அழிந்திலள்காதலி
துன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குள
என்னேஇம் மாயை இருளது தானே.    10.5.6.44

மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்
பாதிநல் லாளும் பகவனு மானது
சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.    10.4.8.3

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.    10.8.13.1

பகவற்குஏதா கிலும் பண்பில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி
அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தாரே     10.8.13.9

ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்பரம்
கூறா உபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.    10.9.20.3

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள்
செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே        10.8.31.7

..........
முத்திப் பகவ 
  முதல்வன் திருவடியை
..........    11.40.44

ஓம் ருத்ராய நம:

கங்குல்கொண்ட திங்களோடு
  கங்கைதங்கு செஞ்சடைச்
சங்கிலங்கு வெண்குழை
  சரிந்திலங்கு காதினாய்
பொங்கிலங்கு பூணநூல்
  உருத்திரா துருத்திபுக்
கெங்குநின் இடங்களா
  அடங்கிவாழ்வ தென்கொலோ.    2.98.3
  
நல்வி னைப்பயன்
  நான்மறை யின்பொருள்
கல்வி யாயக
  ருத்தன் உருத்திரன்
செல்வன் மேய
  திருமழ பாடியைப்
புல்கி யேத்தும்
  அதுபுக ழாகுமே.      3.48.5
  
நரக மேழ்புக
  நாடின ராயினும்
உரைசெய் வாயினர்
  ஆயின் உருத்திரர்
விரவி யேபுகு
  வித்திடு மென்பரால்
வரதன் நாமம்
  நமச்சி வாயவே.      3.49.7
  
பொருப்பமர் புயத்தர் போலும் 
  புனலணி சடையர் போலும்
மருப்பிள வாமை தாங்கு 
  மார்பில்வெண் ணூலர் போலும்
உருத்திர மூர்த்தி போலும் 
  உணர்விலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும் 
  இன்னம்பர் ஈச னாரே.     4.72.7
  
உம்ப ரானை
  உருத்திர மூர்த்தியை
அம்ப ரானை
  அமலனை ஆதியைக்
கம்பு நீர்க்கடு
  வாய்க்கரைத் தென்புத்தூர்
எம்பி ரானைக்கண்
  டின்பம தாயிற்றே.       5.62.7
  
கொள்ளி டக்கரைக்
  கோவந்த புத்தூரில்
வெள்வி டைக்கருள்
  செய்விச யமங்கை
உள்ளி டத்துறை
  கின்ற உருத்திரன்
கிள்ளி டத்தலை
  யற்ற தயனுக்கே.      5.71.3

உருத்திரனை உமாபதியை உலகா னானை
    உத்தமனை நித்திலத்தை ஒருவன் றன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்
    பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற
நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை
    நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.       6.90.5

கரையுங் கடலும் மலையுங்
  காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான்
  ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன்
  வானவர் தானவர்க் கெல்லாம்
அரையனி ருப்பதும் ஆரூர்அவர்
  எம்மையும் ஆள்வரோ கேளீர்.       7.73.1
  
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
  உருத்திர நாதனுக் குந்தீபற.      8.1.14.5

தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும்
  தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண்(டு) உருள ஒண்திருப் புருவம்
  நெறித்தரு ளியவுருத் திரனே !
அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட
  ஆடப்பொன் னம்பலத்து ஆடும்
சொக்கனே எவர்க்கும் தொடர்வரி யாயைத்
  தொண்டனேன் தொடருமா தொடரே.     9.1.9
  
ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி
சீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று
ஏருன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே     10.4.11.9

உடையவன் அங்கி உருத்திர சோதி
விடையவன் ஏறி விளங்கி இருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து
அடையது வாகிய சாதகர் தாமே.     10.5.7.16

ஓம் பூதபூதயே நம:

பூதபதி யாகிய புராணமுனி
  புண்ணியநன் மாதைமருவிப்
பேதமதி லாதவகை பாகமிக
  வைத்தபெரு மானதிடமாம்
மாதவர்கள் அன்னமறை யாளர்கள்
  வளர்த்தமலி வேள்வியதனால்
ஏதமதி லாதவகை இன்பம்அமர்
  கின்றஎழில் வீழிநகரே.        3.80.5
  
ஓம் ஸ்தாணவே நம:

நாணமுடை வேதியனும் 
  நாரணனும் நண்ணவொணாத்
தாணுஎனை யாளுடையான் 
  தன்னடியார்க் கன்புடைமை
பாணன்இசை பத்திமையாற் 
  பாடுதலும் பரிந்தளித்தான்
கோணல்இளம் பிறைச்சென்னிக் 
  கோளிலியெம் பெருமானே    1.62.9
  
காண உள்குவீர், வேணு நற்புரத்
தாணு வின்கழல், பேணி உய்ம்மினே.     1.90.2

காணுமா றரியபெரு மானாகிக் 
  காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்
பேணுமூன் றுருவாகிப் பேருலகம் 
  படைத்தளிக்கும் பெருமான்கோயில்
தாணுவாய் நின்றபர தத்துவனை 
  உத்தமனை இறைஞ்சீரென்று
வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப 
  போலோங்கு மிழலையாமே.       1.132.5
  
தாணுமிகு வாணிசைகொள் தாணுவியர்                         
  பேணுமது காணுமளவிற்                        
கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி                         
  மாணிமது நாணும்வகையே                        
ஏணுகரி பூணழிய வாணியல்கொள்                         
  மாணிபதி சேணமரர்கோன்                        
வேணுவினை யேணிநகர் காணிறிவி                         
  காணநடு வேணுபுரமே.      3.67.2
 
சேணு லாமதில் வேணு மண்ணுளோர் 
காண மன்றலார் வேணு நற்புரத்
தாணு வின்கழல் பேணு கின்றவ 
ராணி யொத்தவரே.     3.110.2

பயம்புன்மை சேர்தரு பாவந் 
  தவிர்ப்பன பார்ப்பதிதன்
குயம்பொன்மை மாமல ராகக் 
  குலாவின கூடவொண்ணாச்
சயம்புவென் றேதகு தாணுவென் 
  றேசதுர் வேதங்கள்நின்
றியம்புங் கழலின இன்னம்ப 
  ரான்றன் இணையடியே.      4.100.8
  
மாணி பால்கறந்
  தாட்டி வழிபட
நீணு லகெலாம்
  ஆளக் கொடுத்தவன்
ஆணி யைச்செம்பொன்
  அம்பலத் துள்நின்ற
தாணு வைத்தமி
  யேன்மறந் துய்வனோ.    5.2.4
  
காணும தொழிந்தேன் நின்திருப் பாதம் 
  கண்டு கண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றும தொழிந்தேன் 
  பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந் 
  தன்மைஎன் புன்மைகளால்
காணும தொழிந்தேன் நீயினி வரி னுங் 
  காணவும் நாணுவனே.     8.44.5

தனதன்நல் தோழா சங்கரா ! சூல
  பாணியே! தாணுவே சிவனே !
கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே
  கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !
அனகனே குமர விநாயக சனக
  அம்பலத்து அமரசே கரனே !
நுனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
  தொண்டனேன் நுகருமா நுகரே.    9.1.7
  
செம்பொனே ! பவளக் குன்றமே ! நின்ற
  திசைமுகன் மால்முதற் கூட்டத்து
அன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே !
  அத்தனே பித்தனே னுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே !
  சங்கரா சாட்டியக் குடியார்க்(கு)
இன்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ்
  இருக்கையில் இருந்தவா(று) இயம்பே.     9.15.7

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோரங்கித் திருவுரு வாய் அண்டத்
தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தாண்முழு தண்டமு மாகிநின் றானே.       10.3.8.3

சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்
துந்திச் சமாதி யுடையொளி யோகியே      10.4.11.65

இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.      10.5.6.39

பேதை யிவளுக்குப் பெண்மை அழகாகும்
தாதை யிவளுக்குத் தாணுவு மாய்நிற்கும்
மாதை யவளுக்கு மண்ணுந் திலகமாய்க்
கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே.     10.4.13.96

நாணுநல் ஈசானன நடுவுச்சி தானாகும்
தாணுவின் தன்முகம் தற்புருட மாகும்
காணும் அகோரம் இருதயம் குய்யமாம்
மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே.     10.8.4.13

ஆணவம் மாயையும் கன்மமு மாமலம்
காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.      10.9.6.6

மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு
மலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே.     10.9.6.27

வீணையும் தண்டும் விரவி இசைமுரல்
தாணுவும் மேவித் தகுதலைப் பெய்தது
வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே.      10.10.17.64

வாணுதற் கெண்ணம்நன் றன்று 
  வளர்சடை எந்தைவந்தால்
நாணுதற் கெண்ணாள் 
  பலிகொடுசென்று நகும்நயந்து
பேணுதற் கெண்ணும் பிரமன் 
  திருமால் அவர்க் கரிய
தாணுவுக் கென்னோ இராப்பகல் 
  நைந்திவள் தாழ்கின்றதே.      11.7.38

அயமே பலிஇங்கு மாடுள 
  தாணுவோர் குக்கிக்கிடப்
பயமே மொழியும் பசுபதி 
  ஏறெம்மைப் பாய்ந்திடுமால்
புயமேய் குழலியர் புண்ணியர் 
  போமின் இரத்தல்பொல்லா
நயமே மொழியினும் நக்காம் 
  அம் மாஉம்மை நாணுதுமே.      11.7.61

அயன்நெடிய மாலும்அவ 
  ரறிவரிய தாணுவரன்
அருளினொடு நீடவனி 
  இடர்முழுது போயகல
வயலணிதென் வீழிமிழ 
  லையின்நிலவு காசின்மலி
மழைபொழியு மானகுண 
  மதுரன்மதி தோய்கனக
செயநிலவு மாடமதில் 
  புடைதழுவு வாசமலி
செறிபொழில்சு லாவிவளர் 
  சிரபுரசு ரேசன்முதிர்
பயன்நிலவு ஞானதமிழ் 
  விரகன்மறை ஞானமுணர்
பரமகுரு நாதன்மிகு 
  பரசமய கோளரியே.      11.39.24
  
வேணு புரக்கோன் எழுந்து அருள 
  விடைகொண்டு இருந்த வாகீசர்
பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர் 
  தம்மைப் போற்றி இசைத்துப்
பேணி இருந்து அங்கு உறையும் 
  நாள் பெயர்வார் வீழிமிழலை அமர் 
தாணுவின் தன் செய்ய கழல் 
  மீண்டும் சார நினைக்கின்றார்.      12.27.290
  
சேண் நிலவு திருமலையில் 
  திருப்பணி ஆயின செய்து 
தாணுவினை அம்மலை மேல் 
  தாள் பணிந்த குறிப்பினால் 
பேணிதிருக் கயிலை மலை வீற்று 
  இருந்த பெருங் கோலம் 
காணுமது காதலித்தார் கலை 
  வாய்மைக் காவலனார்.      12.27.347
  
காணும் அப்பெருங் கோயிலும் 
  கயிலை மால் வரையாய்ப் 
பேணும் மால் அயன் 
  இந்திரன் முதல் பெருந்தேவர் 
பூணும் அன்போடு போற்றி இசைத்து 
  எழும் ஒலி பொங்கத் 
தாணு மா மறை யாவையும் 
  தனித் தனி முழங்க.     12.27.375
  
தாணுவினைத் தனிகண்டு தொடர்ந்தவர் 
  தம்மைப் போல்
காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன 
  கண்டு உள்ளார்
தோணி புரத்திறை தன் அருள் 
  ஆதல் துணிந்து ஆர்வம்
பேணும் மனத்தொடு முன்புகு 
  காதலர் பின் சென்றார்.      12.34.86
  
நீண் நிலைக் கோபுரம் அதனை இறைஞ்சி புக்கு 
  நிகர் இலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று 
வாணிலவு கோயிலினை வலம் கொண்டு எய்தி 
  மதிச் சடையார் திரு முன்பு வணங்கி நின்று 
தாணுவே  ஆற்றின் கண் ஓடம் உய்க்கும் 
  தன்மையால் அருள் தந்த தலைவா நாகப் 
பூணினாய் களிற்றுரிவை போர்த்த முக்கண் புனிதனே 
  எனப் பணிந்து போற்றிச் செய்தார்.     12.34.900
  
தேவர்கள் தேவர் தாமும் 
  திருவருள் புரிந்து நீயும் 
பூவை அன்னாளும் இங்கு உன் 
  புண்ணிய மணத்தின் வந்தார் 
யாவரும் எம்பால் சோதி இதனுள் 
  வந்து எய்தும் என்று 
மூவுலகு ஒளியால் விம்ம 
  முழுச் சுடர்த் தாணுவாகி.     12.34.1246
  
நீடு திருக்காளத்தி நிலவு 
  தாணுவை வணங்கி
ஆடு திரு அரங்கான 
  ஆலவனம் தொழுது ஏத்தித்
தேடும் இருவர்க்கு அரியார் 
  திரு ஏகாம்பரம் பணிந்து
மாடுயர் மாமதில் காஞ்சி வள 
  நகரின் வைகினார்.      12.36.5
  
ஓம் அஷ்டமூர்த்தயே நம:

நட்டத்தோடு நரியாடு
  கானத் தெரியாடுவான்
அட்டமூர்த்தி யழல்போ
  லுருவன் னழகாகவே
இட்டமாக இருக்கும்
  மிடம்போல் இரும்பைதனுள்
வட்டஞ்சூழ்ந்து பணிவார்
  பிணிதீர்க்கும் மாகாளமே.    2.117.8
  
சிட்ட னேதிரு
  ஆலவாய் மேவிய
அட்ட மூர்த்திய
  னேயஞ்ச லென்றருள்
துட்ட ராம்அம
  ணர்கொளு வுஞ்சுடர்
பட்டி மன்தென்னன்
  பாண்டியற் காகவே.       3.51.4
  
வெட்டன வுடைய னாகி 
  வீரத்தால் மலை யெடுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச் 
  சுவைப்படக் கீதங் கேட்ட
அட்டமா மூர்த்தி யாய 
  ஆதியை ஓதி நாளும்
எட்டனை எட்ட மாட்டேன் 
  என்செய்வான் தோன்றி னேனே.     4.78.10
  
பட்டி ஏறுகந்
  தேறிப் பலஇலம்
இட்ட மாக
  இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்திஅண்
  ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை
  கேடில்லை காண்மினே.     5.5.1
  
கட்டி யொக்குங்
  கரும்பி னிடைத்துணி
வெட்டி வீணைகள்
  பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்திஅண்
  ணாமலை மேவிய
நட்ட மாடியை
  நண்ணநன் காகுமே.     5.5.6
  
அட்ட மூர்த்திய
  தாகிய அப்பரோ
துட்டர் வான்புரஞ்
  சுட்ட சுவண்டரோ
பட்டங் கட்டிய
  சென்னிப் பரமரோ
சட்ட விக்கத
  வந்திறப் பிம்மினே.     5.10.3
  
இட்ட மாயின
  செய்வாளென் பெண்கொடி
கட்டம் பேசிய
  காரரக் கன்றனைத்
துட்ட டக்கிய
  தோணி புரத்துறை
அட்ட மூர்த்திக்கு
  அன்பது வாகியே.      5.45.10
  
பட்டம் இண்டை
  யவைகொடு பத்தர்கள்
சிட்டன் ஆதிஎன்
  றுசிந்தை செய்யவே
நட்ட மூர்த்திஞா
  னச்சுட ராய்நின்ற
அட்ட மூர்த்திதன்
  வெண்காடு அடைநெஞ்சே.     5.49.8
  
அட்ட புட்பம்
  அவைகொளு மாறுகொண்
டட்ட மூர்த்தி
  அனாதிதன் பாலணைந்
தட்டு மாறுசெய்
  கிற்ப அதிகைவீ
ரட்ட னாரடி
  சேரு மவர்களே.     5.54.10
  
சிட்ட னைச்சிவ
  னைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை
  ஆல நிழலமர்
பட்ட னைத்திருப்
  பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ
  நம்வினை நாசமே.      5.81.1
  
இட்ட திட்டதோ
  ரேறுகந் தேறியூர்
பட்டி துட்டங்க
  னாய்ப்பலி தேர்வதோர்
கட்ட வாழ்க்கைய
  னாகிலும் வானவர்
அட்ட மூர்த்தி
  யருளென் றடைவரே.      5.97.4
  
குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை
    குறட்பூதம் முன்பாடத் தானா டும்மே
கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து
    கனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே
எழிலாருந் தோள்வீசி நடமா டும்மே
    ஈமப் புறங்காட்டில் ஏமந் தோறும்
அழலாடு மேயட்ட மூர்த்தி யாமே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.      6.4.7
    
இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
    இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
    ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும்
    பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
    நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.     6.94.1
    
கட்ட மும்பிணி யுங்களை வானைக்    
  காலற் சீறிய காலுடை யானை    
விட்ட வேட்கைவெந் நோய்களை வானை    
  விரவி னால்விடு தற்கரி யானைப்    
பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை    
  வாரா மேதவி ரப்பணிப் பானை    
அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை    
  ஆரூரானை மறக்கலு மாமே.      7.59.2
  
அட்டமூர்த்தி அழகன்இன்னமு தாய 
  ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய்ச்சிவ லோகநாயகன் தென்பெ 
  ருந்துறைச் சேவகன்
மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் 
  வைத்த அழகன்தன்
வட்ட மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி 
  மன்னி மலருமே.      8.42.2
  
நிட்டையி லாவுடல் நீத்தென்னை 
  ஆண்ட நிகரிலா வண்ணங்களும் 
சிட்டன் சிவனடி யாரைச் 
  சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)
அட்ட மூர்த்திக்கென் அகம்நெக 
  ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்
பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் 
  தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.     9.29.3
  
அவனே இருசுடர்தீ 
  ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல்காற் 
  றாவான் - அவனே
இயமானனாய் அட்ட 
  மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து.    11.5.21

இட்ட ஏட்டினில் எழுதிய 
  செந்தமிழ்ப் பதிகம் 
மட்டுலாங்குழல் வனமுலை 
  மலைமகள் பாகத்து 
அட்ட மூர்த்தியைப் பொருள் 
  என உடைமையால் அமர்ந்து 
பட்ட தீயிடைப் பச்சையாய் 
  விளங்கியது அன்றே.    12.34.786
  
ஓம் ஸாத்விகாய நம:

ஐந்து பேர் அறிவும் கண்களே 
  கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் 
சிந்தையே ஆகக் குணம் ஒரு 
  மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக 
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த 
  எல்லையில் தனிப் பெருங் கூத்தின் 
வந்த பேரின்ப வெள்ளத் துள் 
  திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.    12.6.106

 

ஓம் பசுபதயே நம:
 

புண்ணியர் பூதியர் பூதநாதர் 
	புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்
கண்ணிய ரென்றென்று காதலாளர் 
	கைதொழு தேத்த இருந்தவூராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி 
	விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாட லறாதஆவூர்ப் 
	பசுபதி யீச்சரம் பாடுநாவே.  1.8.1 
முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார் 
	முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
அத்திய ரென்றென் றடியரேத்தும் 
	ஐயன் அணங்கொ டிருந்தவூராம்
தொத்திய லும்பொழில் மாடுவண்டு 
	துதைந்தெங்குந் தூமதுப் பாயக்கோயிற்
பத்திமைப் பாடல றாதஆவூர்ப்
	பசுபதி யீச்சரம் பாடுநாவே.   1.8.2 
பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார் 
	போம்வழி வந்திழி வேற்றமானார்
இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும் 
	இறையவ ரென்றுமி ருந்தவூராம்
தெங்குயர் சோலைசே ராலைசாலி 
	திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்பும்ஆவூர்ப்
	பசுபதி யீச்சரம் பாடுநாவே.  1.8.3 
தேவியோர் கூறின ரேறதேறுஞ் 
	செலவினர் நல்குர வென்னைநீக்கும்
ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும் 
	அப்பனா ரங்கே அமர்ந்தவூராம்
பூவிய லும்பொழில் வாசம்வீசப் 
	புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்
பாவியல் பாடல றாதஆவூர்ப்
	பசுபதி யீச்சரம் பாடுநாவே.  1.8.4 
இந்தணை யுஞ்சடை யார்விடையார் 
	இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்
வந்தணைந் தின்னிசை பாடுவார்பால் 
	மன்னினர் மன்னி யிருந்தவூராம்
கொந்தணை யுங்குழ லார்விழவிற்
	கூட்ட மிடையிடை சேரும்வீதிப்
பந்தணை யும்விர லார்தம்ஆவூர்ப்
	பசுபதி யீச்சரம் பாடுநாவே.  1.8.5 
குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார் 
	கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் 
	உறைபதி யாகுஞ் செறிகொள்மாடம்
சுற்றிய வாசலின் மாதர்விழாச் 
	சொற்கவி பாடநி தானம்நல்கப்
பற்றிய கையினர் வாழும்ஆவூர்ப்
	பசுபதி யீச்சரம் பாடுநாவே.  1.8.6 
நீறுடை யார்நெடு மால்வணங்கும் 
	நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
கூறுடை யாருடை கோவணத்தார் 
	குவலய மேத்தஇ ருந்தவூராம்
தாறுடை வாழையிற் கூழைமந்தி 
	தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலும்ஆவூர்ப்
	பசுபதி யீச்சரம் பாடுநாவே.  1.8.7 
வெண்டலை மாலை விரவிப்பூண்ட 
	மெய்யுடை யார்விறல் ஆரரக்கன்
வண்டமர் பூமுடி செற்றுகந்த 
	மைந்த ரிடம்வள மோங்கியெங்குங்
கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார் 
	கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்
பண்டலர் கொண்டு பயிலும்ஆவூர்ப்
	பசுபதி யீச்சரம் பாடுநாவே.  1.8.8 
மாலும் அயனும் வணங்கிநேட 
	மற்றவ ருக்கெரி யாகிநீண்ட
சீலம் அறிவரி தாகிநின்ற 
	செம்மையி னாரவர் சேருமூராம்
கோல விழாவி னரங்கதேறிக் 
	கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்
பாலென வேமொழிந் தேத்தும்ஆவூர்ப்
	பசுபதி யீச்சரம் பாடுநாவே.  1.8.9 
பின்னிய தாழ்சடை யார்பிதற்றும் 
	பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
தன்னிய லும்முரை கொள்ளகில்லாச் 
	சைவ ரிடந்தள வேறுசோலைத்
துன்னிய மாதரும் மைந்தர் தாமுஞ்
	சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்
பன்னிய பாடல் பயிலும்ஆவூர்ப்
	பசுபதி யீச்சரம் பாடுநாவே.  1.8.10 
எண்டிசை யாரும்வ ணங்கியேத்தும் 
	எம்பெரு மானை யெழில்கொளாவூர்ப்
பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும் 
	பசுபதி யீச்சரத் தாதிதன்மேல்
கண்டல்கண் மிண்டிய கானற்காழிக் 
	கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
கொண்டினி தாவிசை பாடியாடிக் 
	கூடு மவர்உடை யார்கள்வானே.  1.8.11

கதிமலி களிறது பிளிறிட வுரிசெய்த அதிகுண னுயர்பசு    
    பதியதன் மிசைவரு பசுபதி பலகலை யவைமுறை முறையுணர்    
    விதியறி தருநெறி யமர்முனி கணனொடு மிகுதவ முயல்தரும்    
    அதிநிபு ணர்கள்1வழி படவளர் மறைவனம் அமர்தரு பரமனே.    1.22.5

எண்ணார் தங்கள் மும்மதிள் வேவவே
 வலங் காட்டிய எந்தை
விண்ணோர்சாரத் தன்னருள் செய்த
 வித்தகர் வேத முதல்வர்
பண்ணார் பாடல் ஆடல் அறாத
 பசுபதி யீசனோர் பாகம்
பெண்ணாண் ஆய வார்சடை யண்ணல்
 பேணு பெருந்துறை யாரே.  1.42.6
பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம் 
 பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளும்
காலனாம் எனதுரை தனதுரை யாகக் 
 கனலெரி அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய 
 நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோங்கும்1
ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர்
 இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.  1.76.3
வண்டு சென்றணை மலர்மிசை
 நான்முகன் மாயனென் றிவரன்று
கண்டு கொள்ளவோர் ஏனமோ
 டன்னமாய்க் கிளறியும் பறந்துந்தாம்
பண்டு கண்டது காணவே
 நீண்டஎம் பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரந்
 தொழுதெழ வினையவை கூடாவே.   2.102.9
கண்ணிகழ் புண்டரி கத்தினனே 
 கலந்திரி புண்டரி கத்தினனே
மண்ணிக ழும்பரி சேனமதே 
 வானக மேய்வகை சேனமதே
நண்ணி யடிமுடி யெய்தலரே 
 நளிர்மலி சோலையில் எய்தலரே
பண்ணியல் கொச்சை பசுபதியே 
 பசுமிக வூர்வர் பசுபதியே.    3.113.11
இடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மதிலை             
 யிவைசொல்லி யுலகெழுந் தேத்தக்            
கடறினா ராவர் காற்றுளா ராவர்            
 காதலித் துறைதரு கோயில்            
கொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போய்க்            
 கோவணங் கொண்டுகூத் தாடும்            
படிறனார் போலும் பந்தணை நல்லூர்            
 நின்றஎம் பசுபதி யாரே.  3.121.1 
கழியுளா ரெனவுங் கடலுளா ரெனவுங்            
 காட்டுளார் நாட்டுளா ரெனவும்            
வழியுளா ரெனவும் மலையுளா ரெனவும்            
 மண்ணுளார் விண்ணுளா ரெனவும்            
சுழியுளா ரெனவுஞ் சுவடுதா மறியார்            
 தொண்டர்வாய் வந்தன சொல்லும்            
பழியுளார் போலும் பந்தணை நல்லூர்            
 நின்றஎம் பசுபதி யாரே.  3.121.2 
காட்டினா ரெனவும் நாட்டினா ரெனவுங்            
 கடுந்தொழிற் காலனைக் காலால்            
வீட்டினா ரெனவுஞ் சாந்தவெண் ணீறு            
 பூசியோர் வெண்மதி சடைமேல்            
சூட்டினா ரெனவுஞ் சுவடுதா மறியார்            
 சொல்லுள சொல்லுநால் வேதப்            
பாட்டினார் போலும் பந்தணை நல்லூர்            
 நின்றஎம் பசுபதி யாரே.  3.121.3 
முருகினார் பொழில்சூழ் உலகினா ரேத்த            
 மொய்த்தபல் கணங்களின் றுயர்கண்            
டுருகினா ராகி யுறுதிபோந் துள்ளம்            
 ஒண்மையால் ஒளிதிகழ் மேனி            
கருகினா ரெல்லாங் கைதொழு தேத்தக்            
 கடலுள்நஞ் சமுதமா வாங்கிப்            
பருகினார் போலும் பந்தணை நல்லூர்            
 நின்றஎம் பசுபதி யாரே.  3.121.4 
பொன்னினார் கொன்றை யிருவடங் கிடந்து            
 பொறிகிளர் பூணநூல் புரள            
மின்னினார் உருவின் மிளிர்வதோர் அரவம்            
 மேவுவெண் ணீறுமெய் பூசித்            
துன்னினார் நால்வர்க் கறம்அமர்ந் தருளித்            
 தொன்மையார் தோற்றமுங் கேடும்            
பன்னினார் போலும் பந்தணை நல்லூர்            
 நின்றஎம் பசுபதி யாரே.  3.121.5 
ஒண்பொனா ரனைய அண்ணல்வாழ் கெனவும்            
 உமையவள் கணவன்வாழ் கெனவும்            
அண்பினார் பிரியார் அல்லுநன் பகலும்            
 அடியவர் அடியிணை தொழவே            
நண்பினார் எல்லாம் நல்லரென் றேத்த            
 வல்லவர் தீயரென் றேத்தும்            
பண்பினார் போலும் பந்தணை நல்லூர்            
 நின்றஎம் பசுபதி யாரே.  3.121.6 
எற்றினார் ஏதும் இடைகொள்வா ரில்லை            
 இருநிலம் வானுல கெல்லை            
தெற்றினார் தங்கள் காரண மாகச்            
 செருமலைந் தடியிணை சேர்வான்            
முற்றினார் வாழும் மும்மதில் வேவ            
 மூவிலைச் சூலமும் மழுவும்            
பற்றினார் போலும் பந்தணை நல்லூர்            
 நின்றஎம் பசுபதி யாரே.  3.121.7 
ஒலிசெய்த குழலின் முழவம தியம்ப            
 வோசையால் ஆடலறாத            
கலிசெய்த பூதங் கையினா லிடவே            
 காலினாற் பாய்தலும் அரக்கன்            
வலிகொள்வர் புலியின் உரிகொள்வரேனை            
 வாழ்வுநன் றானுமோர் தலையில்            
பலிகொள்வர் போலும் பந்தணை நல்லூர்            
 நின்றஎம் பசுபதி யாரே.  3.121.8 
சேற்றினார் பொய்கைத் தாமரை யானுஞ்            
 செங்கண்மா லிவரிரு கூறாத்            
தோற்றினார் தோற்றத் தொன்மையை யறியார்            
 துணைமையும் பெருமையுந் தம்மில்            
சாற்றினார் சாற்றி யாற்றலோ மென்னச்            
 சரண்கொடுத் தவர்செய்த பாவம்            
பாற்றினார் போலும் பந்தணை நல்லூர்            
 நின்றஎம் பசுபதி யாரே.  3.121.9 
ஆகம்பத் தரவணையான்
 அயன்அறிதற் கரியானைப்
பாகம்பெண் ணாண்பாக
 மாய்நின்ற பசுபதியை
மாகம்ப மறையோதும்
 இறையானை மதிற்கச்சி
ஏகம்ப மேயானை
 என்மனத்தே வைத்தேனே.   4.7.9
மாலன மாயன் றன்னை 
 மகிழ்ந்தனர் விருத்த ராகும்
பாலனார் பசுப தியார் 
 பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலாற் செற்றார் 
 காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏலநற் கடம்பன் தாதை 
 இலங்குமேற் றளிய னாரே.   4.43.2
பழகநான் அடிமை செய்வேன் 
 பசுபதீ பாவ நாசா
மழகளி யானை யின்றோல் 
 மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே அரக்கன் திண்டோ ள் 
 அருவரை நெரிய வூன்றுங்
குழகனே கோல மார்பா 
 கோடிகா வுடைய கோவே.  4.51.10
சிந்தித் தெழுமன மேநினை 
 யாமுன் கழுமலத்தைப்
பந்தித்த வல்வினை தீர்க்க 
 வல்லானைப் பசுபதியைச்
சந்தித்த கால மறுத்துமென் 
 றெண்ணி யிருந்தவர்க்கு
முந்தித் தொழுகழல் நாடொறும் 
 நந்தம்மை ஆள்வனவே.    4.82.5
சாம்பலைப் பூசித் தரையிற் 
 புரண்டுநின் றாள்பரவி
ஏம்பலிப் பார்கட் கிரங்குகண் 
 டாயிருங் கங்கையென்னுங்
காம்பலைக் கும்பணைத் தோளி 
 கதிர்ப்பூண் வனமுலைமேற்
பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை 
 யாளும் பசுபதியே.  4.110.1 
உடம்பைத் தொலைவித்துன் பாதந் 
 தலைவைத்த உத்தமர்கள்
இடும்பைப் படாமல் இரங்குகண் 
 டாயிரு ளோடச்செந்தீ
அடும்பொத் தனைய அழன்மழு 
 வாவழ லேயுமிழும்
படம்பொத் தரவரை யாயெம்மை 
 யாளும் பசுபதியே.  4.110.2 
தாரித் திரந்தவி ராவடி 
 யார்தடு மாற்றமென்னும்
மூரித் திரைப்பௌவ நீக்குகண் 
 டாய்முன்னை நாளொருகால்
வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை 
 வேள்வெந்து வீழச்செந்தீப்
பாரித்த கண்ணுடை யாயெம்மை 
 யாளும் பசுபதியே.  4.110.3 
ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன் 
 பாத மிறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்விகண் 
 டாயண்ட மேயணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப் 
 பிளந்துவேய்த் தோளியஞ்சப்
பருவரைத் தோலுரித் தாயெம்மை 
 யாளும் பசுபதியே.  4.110.4 
இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன் 
 பாத மிறைஞ்சுகின்றார்க்
கடர்க்கின்ற நோயை விலக்குகண் 
 டாயண்டம் எண்டிசையுஞ்
சுடர்த்திங்கள் சூடிச் சுழற்கங்கை 
 யோடுஞ் சுரும்புதுன்றிப்
படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை 
 யாளும் பசுபதியே.  4.110.5 
அடலைக் கடல்கழி வான்நின் 
 னடியிணை யேயடைந்தார்
நடலைப் படாமை விலக்குகண் 
 டாய்நறுங் கொன்றை திங்கள்
சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ் 
 சூளா மணிகிடந்து
படரச் சுடர்மகு டாயெம்மை 
 யாளும் பசுபதியே.  4.110.6 
துறவித் தொழிலே புரிந்துன் 
 சுரும்படி யேதொழுவார்
மறவித் தொழிலது மாற்றுகண் 
 டாய்மதின் மூன்றுடைய
அறவைத் தொழில்புரிந் தந்தரத் 
 தேசெல்லு மந்திரத்தேர்ப்
பறவைப் புரமெரித் தாயெம்மை 
 யாளும் பசுபதியே.  4.110.7 
சித்தத் துருகிச் சிவனெம் 
 பிரானென்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின் 
 றார்பிணி தீர்த்தருளாய்
மத்தத் தரக்கன் இருபது 
 தோளு முடியுமெல்லாம்
பத்துற் றுறநெரித் தாயெம்மை 
 யாளும் பசுபதியே.  4.110.10 
விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த
	விரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகிப்
பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும் 
	பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார்
	கழிப்பாலை மேய கபாலப் பனார்
வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க 
	வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.   6.12.6
பழகிய வல்வினைகள் பாற்று வானைப்
	பசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்குங்
குழகனைக் கோளரவொன் றாட்டு வானைக்
	கொடுகொட்டி கொண்டதோர் கையான் றன்னை
விழவனை வீரட்ட மேவி னானை
	விண்ணவர்க ளேத்தி விரும்பு வானை
அழகனை ஆரூரி லம்மான் றன்னை
	அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.  6.29.6
பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே 
	பசுபதி பண்டரங்கா வென்றேன் நானே
கற்றார்கள் நாவினா யென்றேன் நானே
	கடுவிடையொன் றூர்தியா யென்றேன் நானே
பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே
	பார்த்தற் கருள்செய்தா யென்றேன் நானே
அற்றார்க் கருள்செய்யும் ஐயா றனே
	என்றென்றே நானரற்றி நைகின் றேனே.  6.37.6
விண்ணோர் தலைவனே யென்றேன் நானே
	விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே
	ஏகம்பம் மேயானே யென்றேன் நானே
பண்ணார் மறைபாடி யென்றேன் நானே
	பசுபதி பால்நீற்றா யென்றேன் நானே
அண்ணாஐ யாறனே யென்றேன் நானே
	என்றென்றே நானரற்றி நைகின் றேனே.   6.37.7
சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ் 
	சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்
இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் 
	என்றுணையே என்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்பரிய திருமாலும் அயனுங் காணாப் 
	பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த
வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே
	என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.40.7
ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை
	உதயத்தி னுச்சியை உருமா னானைப்
பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப்
	பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்
திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித்
	தீங்கரும்பி னின்சுவையைத் திகழுஞ் சோதி
அருமணியை ஆவடுதண் டுறையுள் மேய
	அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.  6.46.5
பரத்தானை யிப்பக்கம் பலவா னானைப்
	பசுபதியைப் பத்தர்க்கு முத்தி காட்டும்
வரத்தானை வணங்குவார் மனத்து ளானை
	மாருதமால் எரிமூன்றும் வாய்அம் பீர்க்காஞ்
சரத்தானைச் சரத்தையுந்தன் தாட்கீழ் வைத்த
	தபோதனனைச் சடாமகுடத் தணிந்த பைங்கட்
சிரத்தானைத் திருவீழி மிழலை யானைச்
	சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.  6.50.9
பளிங்கினிழ லுட்பதித்த சோதி யானைப்
	பசுபதியைப் பாசுபத வேடத் தானை
விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை
	வேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்
	அருமருந்தை ஆமா றறிந்தென் னுள்ளந்
தெளிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
	செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.   6.91.2
குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங்
 கொடுமழு வாட்படைக் குழகனே என்றும்
வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும்
 வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே
பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்
 பசுபதி பதிவின விப்பல நாளுங்
கண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவுங்
 கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.   7.58.5
கோதி லாவமு தேஅருள் பெருகு
 கோல மேஇமை யோர்தொழு கோவே
பாதி மாதொரு கூறுடை யானே
 பசுப தீபர மாபர மேட்டீ
தீதி லாமலை யேதிரு வருள்சேர்
 சேவ காதிரு வாவடு துறையுள்
ஆதி யேயெனை அஞ்சலென் றருளாய்
 ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.     7.70.8
எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
 எம்பெரு மானையே	
உற்றாய் என்றுன்னையே உள்குகின்
 றேன்உணர்ந் துள்ளத்தால்	
புற்றா டரவா புக்கொளி
 யூரவி நாசியே	
பற்றாக வாழ்வேன் பசுபதி
 யேபர மேட்டியே.    7.92.1
சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப்
படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை
விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான்
உடையானே உனையல்லா துறுதுணை மற் றறியேனே.  8.39.2
புவனநா யகனே ! அகவுயிர்க்(கு) அமுதே
 பூரணா ! ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே ! பணிசெய்வார்க்(கு) இரங்கும்
 பசுபதீ ! பன்னகா பரணா !
அவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன்
 அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
 தனியனேன் தனிமைநீங் குதற்கே.   9.11.1
முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்
சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தர் பரசும் பசுபதி தானென்றே.   10.8.41.1
புண்ணியன் புண்ணியல் வேலையன் 
 வேலைய நஞ்சன்அங்கக்
கண்ணியன் கண்ணியல் நெற்றியன் 
 காரணன் கார்இயங்கும்
விண்ணியன் விண்ணியல் பாணியன் 
 பாணி கொள உமையாள்
பண்ணியன் பண்ணியல் பாடலன் 
 ஆடற் பசுபதியே.   11.7.30
அயமே பலிஇங்கு மாடுள 
 தாணுவோர் குக்கிக்கிடப்
பயமே மொழியும் பசுபதி 
 ஏறெம்மைப் பாய்ந்திடுமால்
புயமேய் குழலியர் புண்ணியர் 
 போமின் இரத்தல்பொல்லா
நயமே மொழியினும் நக்காம் 
 அம் மாஉம்மை நாணுதுமே.   11.7.61
பற்றாவான் எவ்வுயிர்க்கும் 
 எந்தை பசுபதியே
முற்றாவெண் திங்கள் 
 முளைசூடி -வற்றாவாங்
கங்கைசேர் செஞ்சடையான் 
 காளத்தி யுள்நின்ற
மங்கைசேர் பாகத்து மன்.    11.10.50
பொடி ஆர்க்கும் திருமேனிப் 
 புனிதர்க்குப் புவனம்கள் 
முடிவாக்கும் துயர் நீங்க 
 முன்னை விடம் அமுதானால் 
படியார்க்கும் அறி அரிய 
 பசுபதியார் தம் உடைய 
அடியார்க்கு நஞ்சு அமுதம் 
 ஆவது தான் அற்புதமோ.  12.27.105
பணியும் அப்பதிப் பசுபதி 
 ஈச்சரத்தின் இனிது இருந்த 
மணியை உள் புக்கு 
 வழிபடும் விருப்பினால் வணங்கித் 
தணிவு இல் காதலினால் தண் 
 தமிழ் மாலைகள் சாத்தி 
அணி விளங்கிய திருநலூர் 
 மீண்டும் வந்து அணைந்தார்.  12.34.377
பண்டு நிகழ் பான்மையினால் 
 பசுபதி தன் அருளாலே
வண்டமர் பூங்குழலாரை மணம் 
 புணர்ந்த வன் தொண்டர்
புண்டரிகத்து அவள் வனப்பைப் 
 புறம் கண்ட தூநலத்தைக்
கண்டுகேட்டு உண்டு உயிர்த்துஉற்று 
 அமர்ந்து இருந்தார் காதலினால்.  12.35.267
மன்னு திருக் கேதாரம் 
 வழிபட்டு மாமுனிவர்
பன்னு புகழ்ப் பசுபதி 
 நேபாளத்தைப் பணிந்து ஏத்தித்
துன்னு சடைச் சங்கரனார் 
 ஏற்ற தூ நீர்க் கங்கை
அன்ன மலி அகன் துறை 
 நீர் அருங்கரையின் மருங்கு அணைந்தார்.  12.36.3
காவிரி நீர்ப் பெரும் தீர்த்தம் 
 கலந்து ஆடிக் கடந்து ஏறி
ஆவின் அரும் கன்று உறையும் 
 ஆவடு தண் துறை அணைந்து
சேவில் வரும் பசுபதியார் செழும் 
 கோயில் வலம் வந்து
மேவு பெரும் காதலினால் பணிந்து 
 அங்கு விருப்பு உறுவார்.  12.36.9
தொடங்கிய நாள் அருளிய 
 அத்தொழில் ஒழியா வழிதொடரும்
கடன் புரிவார் அது கண்டு 
 கல் எறிவார் துவராடைப்
படம் புனை வேடம் தவிரார் 
 பசுபதியார் தம் செயலே
அடங்கலும் என்பது தெளிந்தார் 
 ஆதலினால் மாதவர்தாம்.   12.40.12

ஓம் தேவாய நம:
 

திங்களுச்சி மேல்விளங்குந் 
 தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன் 
 என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் 
 தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் 
 மேயது நள்ளாறே.   1.49.6
விருத்தனாகிப் பாலனாகி 
 வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் 
 கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் 
 அடியிணையே பரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் 
 நெடுங்களம்மே யவனே.  1.52.6
கரிய மாலுஞ் செய்ய 
 பூமேல் அயனுங் கழறிப்போய்
அரிய அண்டந் தேடிப் 
 புக்கும் அளக்க வொண்கிலார்
தெரிய அரிய தேவர் 
 செல்வந் திகழுங் குடமூக்கில்
கரிய கண்டர் கால 
 காலர் காரோ ணத்தாரே.  1.72.9
ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டுத்
தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்ட
கோவே எருக்கத்தம் புலியூர் மிகுகோயில்
தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே.   1.89.8
தேவா அரனே சரணென் றிமையோர் திசைதோறுங்
காவா யென்று வந்தடை யக்கார் விடம்உண்டு
பாவார் மறையும் பயில்வோ ருறையும் பதிபோலும்
பூவார் கோலச் சோலைசுலாவும் புறவம்மே.  1.97.5
தெற்ற லாகிய தென்னிலங்
 கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு
 தோள்கள் நெரியவே
செற்ற தேவன்நஞ் சிக்கல்வெண்
 ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை வாய்வினை
 யாயின ஓயவே.    2.8.8
பூவி னானொடு
 மாலும் போற்றுறும்
தேவன் இந்திர
 நீலப் பர்ப்பதம்
பாவி யாதெழு
 வாரைத் தம்வினை
கோவி யாவருங்
 கொல்லுங் கூற்றமே.   2.27.9
தேவர் திங்களும்
 பாம்புஞ் சென்னியில்
மேவர் மும்மதி
 லெய்த வில்லியர்
காவ லர்கரு
 வூரு ளானிலை
மூவ ராகிய
 மொய்ம்ப ரல்லரே.   2.28.6
தேவா சிறியோம் பிழையைப்
 பொறுப்பாய் பெரியோனே
ஆவா வென்றங் கடியார்
 தங்கட் கருள்செய்வாய்
ஓவா உவரி கொள்ள
 உயர்ந்தா யென்றேத்தி
மூவா முனிவர் வணங்குங்
 கோயில் முதுகுன்றே   2.64.1
தீயினார்திகழ் மேனியாய்
 தேவர்தாந்தொழும் தேவன்நீ
ஆயினாய் கொன்றை யாய்அன
 லங்கையாய் அறை யணிநல்லூர்
மேயினார்தம தொல்வினை
 வீட்டினாய்வெய்ய காலனைப்
பாயினாயதிர் கழலினாய்
 பரமனேயடி பணிவனே.  2.77.5
நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்தன்	
 நெடுமா வுரித்த நிகரில்	
சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள்	
 திகழ்தேவன் மேவு பதிதான்	
வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை	
 விழவோசை வேத வொலியின்	
சாலநல் வேலையோசை தருமாட வீதி	
 கொடியாடு கொச்சை வயமே.  2.83.1
சங்குலாவு திங்கள்சூடி
 தன்னையுன்னு வார்மனத்
தங்குலாவி நின்றஎங்க
 ளாதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு
 தேனுலாவு செண்பகம்
அங்குலாவி யண்டநாறும்
 அந்தணாரூ ரென்பதே.  2.101.5
வேர்த்தமெய்யர் உருவத்துடை
 விட்டுழல் வார்களும்
போர்த்தகூறைப் போதிநீழ
 லாரும்புக லூர்தனுள்
தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த
 தேவன்திறங் கருதுங்கால்
ஓர்த்துமெய்யென் றுணராது
 பாதந்தொழு துய்ம்மினே.  2.115.10
சேடர்விண் ணோர்கட்குத் தேவர்நல்
 மூவிரு தொன்னூலர்
வீடர்முத் தீயர்நால் வேதத்தர்
 வீழிமி ழலையார்
காடரங் காவுமை காணஅண்
 டத்திமை யோர்தொழ
நாடக மாடியை யேத்தவல்
 லார்வினை நாசமே.  3.9.7
கஞ்சியுங் கவளமுண்
 கவணர் கட்டுரை
நஞ்சினுங் கொடியன
 நமர்கள் தேர்கிலார்
செஞ்சடை முடியுடைத்
 தேவன் நன்னகர்
விஞ்சையர் தொழுதெழு
 விசய மங்கையே.  3.17.10
கல்லால் நீழல், அல்லாத் தேவை
நல்லார் பேணார், அல்லோம் நாமே.  3.40.1
கொன்றை சூடி, நின்ற தேவை
அன்றி யொன்று, நன்றி லோமே.  3.40.2
தக்கன் வேள்விப், பொக்கந் தீர்த்த
மிக்க தேவர், பக்கத் தோமே.  3.40.6
கோலமாய நீள்மதிற்
 கூடல்ஆல வாயிலாய்
பாலனாய தொண்டுசெய்து
 பண்டுமின்றும் உன்னையே
நீலமாய கண்டனே
 நின்னையன்றி நித்தலுஞ்
சீலமாய சிந்தையில்
 தேர்வதில்லை தேவரே.   3.52.5
போயநீர் வளங்கொளும்
 பொருபுனற் புகலியான்
பாயகேள்வி ஞானசம்
 பந்தன்நல்ல பண்பினால்
ஆயசொல்லின் மாலைகொண்
 டாலவாயில் அண்ணலைத்
தீயதீர எண்ணுவார்கள்
 சிந்தையாவர் தேவரே.  3.52.11
பூவின்மிசை அந்தணனொ டாழிபொலி
 அங்கையனும் நேடஎரியாய்த்
தேவுமிவ ரல்லரினி யாவரென
 நின்றுதிகழ் கின்றவரிடம்
பாவலர்கள் ஓசையியல் கேள்வியத
 றாதகொடை யாளர்பயில்வாம்
மேவரிய செல்வநெடு மாடம்வளர்
 வீதிநிகழ் வேதிகுடியே.  3.78.9
தேடிக் கண்டுகொண்டேன் - திரு
 மாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே 
 தேடிக் கண்டுகொண்டேன்.  4.9.12
கருத்தனாய்க் கண்சி வந்து 
 கயிலைநன் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்த வாறே 
 ஏந்திழை அஞ்ச ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன் 
 திருவிர லூன்ற வீழ்ந்தான்
வருத்துவான் ஊன்றி னானேல் 
 மறித்துநோக் கில்லை யன்றே.  4.47.7
கோவாய் முடுகி யடுதிறற் 
 கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற் 
 பொறித்துவை போகவிடின்
மூவா முழுப்பழி மூடுங்கண் 
 டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத் 
 துறையுஞ் சிவக்கொழுந்தே.  4.96.1
ஆவா சிறுதொண்ட னென்நினைந் 
 தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன் 
 மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப் 
 பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுள் தூங்கானை 
 மாடத்தெம் புண்ணியனே.  4.109.2
மூவ னாய்முத
 லாயிவ் வுலகெலாங்
காவ னாய்க்கடுங்
 காலனைக் காய்ந்தவன்
பூவின் நாயகன்
 பூந்துருத் திந்நகர்த்
தேவன் சேவடிக்
 கீழ்நா மிருப்பதே.   5.32.4
நாவ லம்பெருந்
 தீவினில் வாழ்பவர்
மேவி வந்து
 வணங்கி வினையொடு
பாவ மாயின
 பற்றறு வித்திடுந்
தேவர் போல்திரு
 நாகேச் சரவரே.   5.52.2
யாவ ருமறி
 தற்கரி யான்றனை
மூவ ரின்முத
 லாகிய மூர்த்தியை
நாவின் நல்லுரை
 யாகிய நாதனைத்
தேவனைப் புத்தூர்
 சென்றுகண் டுய்ந்தெனே.  5.62.2
வாது செய்து
 மயங்கு மனத்தராய் 
ஏது சொல்லுவீ
 ராகிலும் ஏழைகாள் 
யாதோர் தேவ
 ரெனப்படு வார்க் கெல்லாம் 
மாதே வன்னலாற்
 றேவர்மற் றில்லையே.   5.100.4
பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம்
	பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங்
	கொண்ட சமயத்தார் தேவ னாகி
ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம் 
	ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று
காத்தானாங் காலன் அடையா வண்ணங் 
	கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.  6.15.3
இரவனாம் எல்லி நடமா டியாம்
	எண்டிசைக்குந் தேவனாம் என்னு ளானாம்
அரவனாம் அல்லல் அறுப்பா னுமாம்
	ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறுங்
குரவனாங் கூற்றை யுதைத்தான் றானாங்
	கூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங்
கரவனாங் காட்சிக் கெளியா னுமாங் 
	கண்ணாங் கருவூ ரெந்தை தானே.  6.15.4
மூவனை மூர்த்தியை மூவா மேனி 
	உடையானை மூவுலகுந் தானே யெங்கும்
பாவனைப் பாவ மறுப்பான் றன்னைப்
	படியெழுத லாகாத மங்கை யோடும்
மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு 
	விரிகடலின் நஞ்சுண் டமுத மீந்த
தேவனைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 
	சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.  6.19.6
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
	புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
	திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
	சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
	திருமூலட் டானனே போற்றி போற்றி.  6.32.9
ஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயே
	அளவில் பெருமை யுடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
	போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
	நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
தேவ ரறியாத தேவன் நீயே
	திருவையா றகலாத செம்பொற் சோதீ.   6.38.8
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
	வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கு முடலே போற்றி
	ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
	தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
	கயிலை மலையானே போற்றி போற்றி.   6.55.4
சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
	தேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
	போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
	பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
	கயிலை மலையானே போற்றி போற்றி.   6.55.6
அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட
	ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கை
செறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் றான்காண்
	திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையிற்
பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து 
	பொருகயிலை யெடுத்தவன்றன் முடிதோள் நாலஞ்
சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி 
	ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.   6.64.11
மூவாதி யாவர்க்கும் மூத்தான் றன்னை
	முடியாதே முதல்நடுவு முடிவா னானைத்
தேவாதி தேவர்கட்குந் தேவன் றன்னைத்
	திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் றன்னை
ஆவாத அடலேறொன் றுடையான் றன்னை
	அடியேற்கு நினைதோறும் அண்ணிக் கின்ற
நாவானை நாவினில்நல் லுரையா னானை
	நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.    6.74.3
வானத் திளமதியும் பாம்புந் தம்மில்
	வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலுந்
தேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந்
	தில்லை நடமாடுந் தேவர் போலும்
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்
	நன்மையுந் தீமையு மானார் போலுந்
தேனொத் தடியார்க் கினியார் போலுந்
	திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.    6.82.1
அல்ல லடியார்க் கறுப்பார் போலும்
	அமருலகந் தம்மடைந்தார்க் காட்சி போலும்
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்
	நள்ளாறு நாளும் பிரியார் போலும்
முல்லை முகைநகையாள் பாகர் போலும்
	முன்னமே தோன்றி முளைத்தார் போலுந்
தில்லை நடமாடுந் தேவர் போலுந்
	திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.   6.82.9
இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார்
	இடைமருதோ டேகம்பத் தென்றும் நீங்கார்
அணைவரியர் யாவர்க்கும் ஆதி தேவர்
	அருமந்த நன்மையெலாம் அடியார்க் கீவர்
தணல்முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித்
	தத்துவனைச் சாந்தகிலி னளறு தோய்ந்த
பணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேய
	பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.  6.83.7
மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்
	முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண்
காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண்
	கங்காளன் காண்கயிலை மலையி னான்காண்
ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண்
	ஆரழலாய் அயற்கரிக்கும் அறிய வொண்ணாத்
தேவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
	சிவலோகன் காணவனென் சிந்தை யானே.   6.85.4
பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்
	பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்
	குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்
கட்டங்கக் கொடிதிண்டோ ளாடக் கண்டேன்
	கனமழுவாள் வலங்கையி லிலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்
	தேவனைக் கனவில்நான் கண்ட வாறே.   6.97.6
தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச்
	சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே
மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய்
	மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் கென்றும்
அருளாகி ஆதியாய் வேத மாகி
	அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்
பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்
	பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.   6.99.4
தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்
	திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று
நாவார்ந்த மறைபாடி நட்ட மாடி
	நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்
	கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்
பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்
	பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  6.99.7
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர்
 வஞ்ச மனத்தீரே
யாவ ராலும் இகழப் பட்டிங்
 கல்ல லில்வீழாதே
மூவ ராயும் இருவ ராயும்
 முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள் பாடி
 என்ப தடைவோமே.   7.7.4
மாவாய்ப் பிளந்தானும்
 மலர்மிசை யானும்
ஆவா அவர்தேடித்
 திரிந்தல மந்தார்
பூவார்ந்தன பொய்கைகள்
 சூழும்துறையூர்த்
தேவா உனைவேண்டிக்
 கொள்வேன் தவநெறியே.   7.13.10
தட்டெனுந் தட்டெனுந் தொண்டர்
 காள்தடு மாற்றத்தை
ஒட்டெனும் ஒட்டெனும் மாநி
 லத்துயிர் கோறலைச்
சிட்டன் திரிபுரஞ் சுட்ட
 தேவர்கள் தேவனை
வெட்டெனப் பேசன்மின் தொண்டர்
 காளெம் பிரானையே.  7.44.3
மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை
 வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே
கண்ணி லேன்உடம் பில்லடு நோயாற்
 கருத்த ழிந்துனக் கேபொறை ஆனேன்
தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானே
 தேவ னேதிரு வாவடு துறையுள்
அண்ண லேயெனை அஞ்சலென் றருளாய்
 ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.   7.70.2
வான நாடனே வழித்துணை மருந்தே
 மாசி லாமணி யேமறைப் பொருளே
ஏன மாவெயி றாமையும் எலும்பும்
 ஈடு தாங்கிய மார்புடை யானே
தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே
 தேவ னேதிரு வாவடு துறையுள்
ஆனை யேயெனை அஞ்சலென் றருளாய்
 ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.   7.70.9
நாவின்மிசை அரையன்னொடு
 தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவன் அடியார்களுக்
 கடியானடித் தொண்டன்
தேவன்றிருக் கேதாரத்தை
 ஊரன்னுரை செய்த
பாவின்தமிழ் வல்லார்பர
 லோகத்திருப் பாரே.  7.78.10
மூவரென இருவரென
 முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில்
 மாதோட்டநன் னகரிற்
பாவம்வினை யறுப்பார்பயில்
 பாலாவியின் கரைமேல்
தேவன்னெனை ஆள்வான்றிருக்
 கேதீச்சரத் தானே.    7.80.9

...........

சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 

.........                8.1.1.15

விச்சுக் கேடு பொய்க் 
	காகா தென்றிங் கெனைவைத்தாய்
இச்சைக் கானா ரெல்லாரும் 
	வந்துன் தாள்சேர்ந்தார்
அச்சத் தாலே ஆழ்ந்திடு
	கின்றேன் ஆரூர்எம்
பிச்சைத் தேவா என்னான்
	செய்கேன் பேசாயே.   8.1.5.81
அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.  8.1.10.5
வைத்த நிதிபெண்டீர் மக்கள்குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.   8.1.10.6
கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.   8.1.10.14
அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதிரியும்
நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ
நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா 
எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ.    8.1.12.17
இன்பந் தருவன் குயிலே ஏழுல 
 கும்முழு தாளி
அன்பன் அமுதளித் தூறும் ஆனந்தன் 
 வான்வந்த தேவன்
நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி 
 மேல்வரு வானைக்
கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி 
 நாதனைக் கூவாய்.   8.1.18.6
கூவின பூங்குயில் கூவின கோழி
 குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து
 ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
 திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
 எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.   8.1.20.3
ஆட்டுத்தேவர் தம் விதியொழித் தன்பால்
 ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன்
நாட்டுத்தேவரும் நாடரும் பொருளே
 நாதனே உனைப் பிரிவுறா அருளைக் 
காட்டித்தேவநின் கழலிணை காட்டிக்
 காயமாயத்தைக் கழித்தருள் செய்யாய்
சேட்டைத்தேவர்தந் தேவர்பிரானே
 திருப்பெருந்துறை மேவிய சிவனே.   8.1.23.5
கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே
ஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்
சாவா ரெல்லாம் என்னளவோ தக்க வாறன் றென்னாரோ
தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே.  8.1.50.6

 

நீவாரா(து) ஒழிந்தாலும் 
 நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும் 
 குவளைமலர் சொரிந்தனவால்;
ஆவா !என்று அருள் புரியாய் 
 அமரர்கணம் தொழுதேத்தும்
தேவா !தென் பொழிற்கோடைத் 
 திரைலோக்கிய சுந்தரனே.    9.12.5
பாவார்ந்த தமிழ்மாலை 
 பத்தரடித் தொண்டனெடுத்(து)
ஓவாதே அழைக்கின்றான் 
 என்றருளின் நன்றுமிகத்
தேவேதென் திருத்தில்லைக் 
 கூத்தாடீ நாயடியேன்
சாவாயும் நினைக்காண்டல் 
 இனியுனக்குத் தடுப்பரிதே.   9.21.10
அல்லாய்ப் பகலாய் அருவாய் 
 உருவாய் ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை 
 மலையாய் காண அருளென்று
பல்லா யிரம்பேர் பதஞ்சலிகள் 
 பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதில் தில்லைக்(கு) 
 அருளித் தேவன் ஆடுமே   9.24.1
ஓமப் புகையும் அகிலின் 
 புகையும் உயர்ந்துமுகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர் 
 மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வாமத்(து) எழிலார் எடுத்த 
 பாதம் மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள் 
 சூடித் தேவன் ஆடுமே.   9.24.5
ஆவா ! இவர்தம் 
 திருவடிகொண்டு அந்தகன்தன்
மூவா உடலவியக் 
 கொன்றுகந்த முக்கண்ணர்
தேவா மறைபயிலும் 
 தில்லைச்சிற்றம் பலவர்
கோவா இனவளைகள் 
 கொள்வாரோ என்னையே.   9.27.7
வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்
ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே.   10.1.1.39
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.   10.1.4.5
சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே   10.4.9.13
தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றுந்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றுந்
தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றுந்
தேவர் உறைகின்ற தென்பொது வாமே.  10.5.1.3
அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.  10.6.12.3
திகைக்குரி யானொரு தேவனை நாடும்
வகைக்குரி யானொரு வாது இருக்கில்
பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.  10.7.14.1
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.  10.7.38.3
தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும்
ஏவனும் ஆம்விரி நீருலகு ஏழையும்
ஆவனு மாம் அமர்ந்து எங்கும் உலகினும்
நாவனும் ஆகி நவிற்றுகின் றானே.    10.10.22.7
ஆவன யாரே அழிக்கவல் 
 லார்அமை யாவுலகில்
போவன யாரே பொதியகிற் 
 பார்புரம் மூன்றெரித்த
தேவனைத் தில்லைச் சிவனைத் 
 திருந்தடி கைதொழுது
தீவினை யேன்இழந் தேன்கலை 
 யோடு செறிவளையே.  11.7.84
இவரே முதல்தேவர் 
 எல்லார்க்கும் மிக்கார்
இவரல்லர் என்றிருக்க 
 வேண்டா -கவராதே
காதலித்தின் றேத்துதிரேல் 
 காளத்தி ஆள்வார்நீர்
ஆதரித்த தெய்வமே ஆம்.   11.10.72

.........

மூவெயில் எரித்த சேவகத் தேவ

.........               11.28.10.8

வேதநான் முகன்மால் புரந்தரன் முதலாம்
 விண்ணவர் எண்ணி லார் மற்றும்
காதலால் மிடைந்த முதல்பெருந் தடையாம்
 கதிர் மணிக் கோபுரத் துள்ளான்
பூதவேதா ளப்பெரும் கணநாதர் போற்றிடப் 
 பொது வில் நின்று ஆடும்
நாதனார் ஆதி தேவனார் கோயில்
 நாயகன் நந்தி எம்பெரு மான்.   12.2.10
பூதநாயகர் புற்று இடம் கொண்டவர்
ஆதிதேவர் அமர்ந்த பூங் கோயிலிற்
சோதிமாமணி நீள்சுடர் முன்றில் சூழ்
மூதெயில் திரு வாயில் முன்னாயது.  12.5.1
நாணனே தோன்றும் குன்றில் 
 நண்ணுவோம் என்ன நாணன்
காண நீ போதின் நல்ல 
 காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக் காளத்தி மலை 
 மிசை எழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர் இருப்பர் 
 கும்பிடலாம் என்றான்.  12.16.96
ஆவதென் இதனைக் கண்டு இங்கு அணை 
 தொறும் என் மேல் பாரம்
போவது ஒன்று உளது போலும் 
 ஆசையும் பொங்கி மேல் மேல்
மேவிய நெஞ்சும் வேறோர் 
 விருப்புற விரையா நிற்கும்
தேவர் அங்கு இருப்பது எங்கே 
 போகென்றார் திண்ணனார் தாம்.  12.16.97
அங்கிவர் மலையில் தேவர் தம்மைக் 
 கண்டு அணைத்துக் கொண்டு 
வங்கினைப் பற்றிப் போதாவல்லுடும்பு 
 என்ன நீங்கான் 
இங்கும் அத் தேவர் தின்ன 
 இறைச்சி கொண்டு ஏகப் போந்தான் 
நம்குலத் தலைமை விட்டான் 
 நலப்பட்டான் தேவர்க்கு என்றான்.  12.16.116
பூதியாகிய புனித நீர் ஆடிப் பொங்கு 
 கங்கை தோய் முடிச் சடை புனைந்து
காதில் வெண் குழை கண்டிகை தாழக் 
 கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனாராயுமாதவஞ் செய் அவ் 
 வரங்கொலோ அகிலம் ஈன்று அளித்த
மாது மெய்ப் பயன் கொடுப்பவே கொண்டு 
 வளைத் தழும்புடன் முலைச் சுவடு அணிந்தார்.   12.25.66
நாதர் மருவும் திருமலைகள் நாடும் 
 பதிகள் பல மிகவும் 
காதல் கூரச் சென்று இறைஞ்சிக் கலந்த 
 இசை வண் தமிழ் பாடி 
மாதோர் பாகர் அருளாலே 
 வடபால் நோக்கி வாகீசர் 
ஆதி தேவர் அமர்ந்த 
 திரு அண்ணாமலையை நண்ணினார்.   12.27.311
ஆதி தேவர் தம் திரு அருள் 
 பெருமை யார் அறிந்தார் 
போத மாதவர் பனிமலர்ப் 
 பொய்கையில் மூழ்கி 
மாதோர் பாகனார் மகிழும் 
 ஐ ஆற்றில் ஓர் வாவி 
மீது தோன்றி வந்து 
 எழுந்தனர் உலகெலாம் வியப்ப.  12.27.371
பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து
ஆதி தேவர்தம் அஞ்செழுத்தாம் அவை
ஓது நாவணக் கத்தால் உரைப்பவர்
பாதம் நாளும் பரவிய பண்பினார்.   12.28.7
ஆதி தேவர் எழுந்து அருள 
 உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது
ஏதம் நினைந்தேன் என அஞ்சி 
 எழுந்த படியே வழிபட்டு
மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து 
 விடியல் விரைவோடு
நாதனார் தம் திருவாரூர் புகுத 
 எதிர் அந் நகர் காண்பார்.    12.33.28
தாழ்வில் யாழ்ப் பாணரொடும் 
 தாதையார் தம்மோடும் 
மேவிய சீர் அடியார்கன் புடை 
 வர வெம் குரு வேந்தர் 
பூவின் மேல் அயன் போற்றும் 
 புகலியினைக் கடந்து போய்த் 
தேவர்கள் தம் பெரும் தேவர் 
 திருத் தில்லை வழிச் செல்வார்.  12.34.144
வெங் கண் விடை மேல் வருவார் 
 வியலூர் அடிகளைப் போற்றித் 
தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப் 
 பதிகத் தொடை சாத்தி 
அங்கண் அமர்வார் தம் முன்னே 
 அருள் வேடம் காட்டத் தொழுது 
செங்கண் மாலுக்கு அரியார் தந்திருந்து 
 தேவன் குடி சேர்ந்தார்.   12.34.294
திருந்து தேவன் குடி மன்னும் 
 சிவ பெருமான் கோயில் எய்திப் 
பொருந்திய காதலில் புக்குப் 
 போற்றி வணங்கிப் புரிவார் 
மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் 
 இவர் வேடமாம் என்று 
அருந்தமிழ் மாலை புனைந்தார் அளவில் 
 ஞானத்து அமுது உண்டார்.  12.34.295
மூவர்க்கு அறிவரும் பொருள் 
 ஆகிய மூலத் 
தேவர் தம் திருவாவடு துறைத் 
 திருத் தொண்டர் 
பூ அலம்பு தண் பொரு புனல் 
 தடம் பணைப் புகலிக் 
காவலர்க்கு எதிர் கொள்ளும் 
 ஆதரவுடன் கலந்தார்.  12.34.418
ஆதி தேவர் அங்கு அமர்ந்த 
 வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே 
பூதம் பாட நின்று ஆடுவார் 
 திரு நடம் புலப்படும் படி காட்ட 
வேத பாலகர் பணிந்து மெய் 
 உணர்வுடன் உருகிய விருப்போடும் 
கோதிலா இசை குலவு குண்டைக்குறள் 
 பூதம் என்று எடுத்து ஏத்தி.  12.34.965
யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப 
 மொழிப் பயன் இயம்பித்
தேவர்க்கு முதல்தேவர் சீர் 
 அடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம் மிக 
 அளித்து விடையவர்தம்
காவுற்ற திருக்கயிலை 
 மறவாத கருத்தினராய்.  12.55.3

ஓம் மஹாதேவாய நம:
 

யாதே செய்துமி
 யாமலோநீ யென்னில்
ஆதே யேயும்
 அளவில் பெருமையான்
மாதே வாகிய
 வாய்மூர் மருவினார்
போதே என்றும்
 புகுந்ததும் பொய்கொலோ.  5.50.6
வாது செய்து
 மயங்கு மனத்தராய் 
ஏது சொல்லுவீ
 ராகிலும் ஏழைகாள் 
யாதோர் தேவ
 ரெனப்படு வார்க் கெல்லாம் 
மாதே வன்னலாற்
 றேவர்மற் றில்லையே.  5.100.4
நீரேறு சடைமுடியெந் நிமலன் றான்காண்
	நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தான்காண்
வாரேறு வனமுலையாள் பாகத் தான்காண் 
	வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண்
காரேறு முகிலனைய கண்டத் தான்காண்
	கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண்
சீரேறு மணிமாடத் திருவா ரூரிற்
	றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.  6.30.3
கண்டுஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்
	கண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண்
வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்
	வான்கங்கைச் சடைக்கரந்த மாதே வன்காண்
பண்டங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்
	பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்
வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்
	விண்ணிழிதண் வீழி மிழலை யானே.   6.52.6
பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்
	பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்
	வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்
அருந்தவத்தாள் ஆயிழையாள் உமையாள் பாகம் 
	அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த
இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி 
	ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.    6.65.5
மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்
	மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு
தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்
	சாய்க்காடு தெள்ளுபுனற் கொள்ளிக் காடு
பலர்பாடும் பழையனூர் ஆலங் காடு
	பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
	வெண்காடும் அடையவினை வேறா மன்றே.   6.71.6
கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்
	கல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
	பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
	மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற்
	கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.  6.73.1
விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்
	விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய்
தண்டா மரையானும் மாலுந் தேடத்
	தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்
	மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற்
	கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.  6.73.10
சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து
	தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
	மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
	ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
	அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே.  6.95.10
வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்
	மாதேவா மாதேவா என்று வாழ்த்தி
நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்
	நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோங்
காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்
	கன்மனமே நன்மனமாக் கரையப் பெற்றோம்
பாராண்டு பகடேறி வருவார் சொல்லும்
	பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே.  6.98.3
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
 சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
 மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
 போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
 ஈதேயெந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.    8.1.7.1
ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
ஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தினி னுள்ளே.   10.3.14.40
மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர்
நாதம தாக அறியப்படுநந்தி
பேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில்
ஆதியும் அந்நெறி யாகிநின் றானே.   10.6.18.13
ஏனோர் பெருமையன் ஆயினும் எம்மிறை
ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.   10.8.29.2
முலைநலஞ்சேர் கானப்பேர் 
 முக்கணான் என்னும்
முலைநலஞ்சேர் மொய்சடையான் 
 என்னும் -முலைநலஞ்சேர்
மாதேவா என்று 
 வளர்கொன்றை வாய்சோர
மாதேவா சோரல் வளை.   11.23.51

ஓம் ஹராய நம:

அரனை உள்குவீர், பிரம னூருளெம்
பரனை யேமனம், பரவி உய்ம்மினே.    1.90.1

ஓதி யாரண மாய நுண்பொருள்    
  அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி    
நீதியால நீழ லுரைக்கின்ற நீர்மையதென்    
சோதி யேசுட ரேசு ரும்பமர்    
  கொன்றை யாய்திரு நின்றி யூருறை    
ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே.      2.50.6

சடையுடை யானும்நெய் யாடலா
  னுஞ்சரி கோவண
உடையுடை யானுமை ஆர்ந்தவொண்
  கண்ணுமை கேள்வனுங்
கடையுடை நன்னெடு மாடமோங்
  குங்கட வூர்தனுள்
விடையுடை யண்ணலும் வீரட்டா
  னத்தர னல்லனே.       3.8.1

வாழ்க அந்தணர்
  வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல்
  வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்
  லாம்அரன் நாமமே
சூழ்க வையக
  முந்துயர் தீர்கவே.      3.54.1

ஆக்கை யாற்பயனென் - அரன் 
  கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் 
  வாக்கை யாற்பயனென்.    4.9.8
  
எந்த மாதவஞ்
  செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை
  யாய பராபரன்
அந்த மில்புகழ்
  ஆரூர் அரனெறி
சிந்தை யுள்ளுஞ்
  சிரத்துளுந் தங்கவே.      5.7.2
 
பொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப்
    பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக்
கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக்
    காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
இருங்கனக மதிலாரூர் மூலட் டானத் 
    தெழுந்தருளி யிருந்தானை இமையோ ரேத்தும்
அருந்தவனை அரநெறியி லப்பன் றன்னை
    அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.    6.33.1

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
  வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
  திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
  இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
  ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.      7.39.11

கோற்றேன்எனக் கென்கோகுரை கடல்வாய் அமுதென்கோ
ஆற்றேன்எங்கள் அரனே அருமருந்தே என தரசே
சேற்றார்வயல் புடைசூழ் தரு திருப்பெருந்துறை உறையும்
நீற்றார்தரு திருமேனிநின் மலனே உனையானே.      8.1.34.8

உள்ளப்படுவன வுள்ளி யுரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி யேலிது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க் கருளா அரன்தில்லை காணலர்போல்
கொள்ளப்படாது மறப்ப தறிவிலென் கூற்றுக்களே.    8.2.11.87

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது
  அயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட்(டு) ஓர்வரி யாயை
  மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்
  சிறுமையில் பொறுக்கும்அம் பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே ! உன்னைத்
  தொண்டனேன் நினையுமா நினையே.     9.1.11

அரகர என்ன அரியதொன்றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும் பிறப்பன்றே.     10.5.2.3

காண்பார்க்குங் காணலாந் 
  தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் 
  காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே 
  தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன்.    11.5.17

பஞ்சின் மெல் அடிப் 
  பாவையர் உள்ளமும் 
வஞ்ச மாக்கள் தம்வல் 
  வினையும் அரன் 
அஞ்சு எழுத்தும் உணரா 
  அறி விலோர் 
நெஞ்சும் என்ன இருண்டது 
  நீண்ட வான்.     12.6.159

(அர என்ற திருநாமம் திருமுறைகளில் மிக அதிகமாக வருவதால் இங்கு விரிவஞ்சி ஒரு திருமுறைக்கு ஒன்றே கொடுக்கப்பட்டுள்ளது )

ஓம் பரமேச்வராய நம:
 

உரமன்னுயர்கோட் டுலறுகூகை 
 யலறும் மயானத்தில்
இரவிற்பூதம் பாடஆடி 
 யெழிலா ரலர்மேலைப்
பிரமன்தலையின் நறவமேற்ற 
 பெம்மான் எமையாளும்
பரமன்பகவன் பரமேச்சுவரன் 
 பழன நகராரே.  1.67.4

.........

பாவ நாசனை 
 பரமேச் சுவரனை

.........       11.14.12

Related Content