logo

|

Om symbol5.083 - திருநாகைக்காரோணம் - பாணத் தால்மதில் மூன்றுOm symbol

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : ஐந்தாம்-திருமுறை

பண் : திருக்குறுந்தொகை

நாடு :சோழநாடு காவிரித் தென்கரை

தலம் : நாகைக்காரோணம்

Odhuvar

Odhuvar Song

Source language

பதம் பிரிக்க

Translation language

Click on the songs to view the meaning


திருச்சிற்றம்பலம்
பாணத் தால்மதில்
  மூன்று மெரித்தவன்
பூணத் தானர
  வாமை பொறுத்தவன்
காணத் தானினி
  யான்கடல் நாகைக்கா
ரோணத் தானென
  நம்வினை ஓயுமே.  1

வண்ட லம்பிய
  வார்சடை ஈசனை
விண்ட லம்பணிந்
  தேத்தும் விகிர்தனைக்
கண்ட லங்கமழ்
  நாகைக்கா ரோணனைக்
கண்ட லும்வினை
  யான கழலுமே.  2

புனையும் மாமலர்
  கொண்டு புரிசடை
நனையும் மாமலர்
  சூடிய நம்பனைக்
கனையும் வார்கடல்
  நாகைக்கா ரோணனை
நினைய வேவினை
  யாயின நீங்குமே.  3

கொல்லை மால்விடை
  யேறிய கோவினை
எல்லி மாநட
  மாடும் இறைவனைக்
கல்லி னார்மதில்
  நாகைக்கா ரோணனைச்
சொல்ல வேவினை
  யானவை சோருமே.  4

மெய்ய னைவிடை
  யூர்தியை வெண்மழுக்
கைய னைக்கடல்
  நாகைக்கா ரோணனை
மைய னுக்கிய
  கண்டனை வானவர்
ஐய னைத்தொழு
  வார்க்கல்ல லில்லையே.  5

அலங்கல் சேர்சடை
  ஆதி புராணனை
விலங்கல் மெல்லியல்
  பாகம் விருப்பனைக்
கலங்கள் சேர்கடல்
  நாகைக்கா ரோணனை
வலங்கொள் வார்வினை
  யாயின மாயுமே.  6

சினங்கொள் மால்கரி
  சீறிய ஏறினை
இனங்கொள் வானவ
  ரேத்திய ஈசனைக்
கனங்கொள் மாமதில்
  நாகைக்கா ரோணனை
மனங்கொள் வார்வினை
  யாயின மாயுமே.  7

அந்த மில்புகழ்
  ஆயிழை யார்பணிந்
தெந்தை யீசனென்
  றேத்தும் இறைவனைக்
கந்த வார்பொழில்
  நாகைக்கா ரோணனைச்
சிந்தை செய்யக்
  கெடுந்துயர் திண்ணமே.  8

கருவ னைக்கடல்
  நாகைக்கா ரோணனை
இருவ ருக்கறி
  வொண்ணா இறைவனை
ஒருவ னையுண
  ரார்புர மூன்றெய்த
செருவ னைத்தொழத்
  தீவினை தீருமே.  9

கடல்க ழிதழி
  நாகைக்கா ரோணன்றன்
வடவ ரையெடுத்
  தார்த்த அரக்கனை
அடர வூன்றிய
  பாதம் அணைதரத்
தொடர அஞ்சுந்
  துயக்கறுங் காலனே.  10

சுவாமி: காயாரோகணேஸ்வரர்
அம்பாள்: நீலாயதாக்ஷி
திருச்சிற்றம்பலம்

சுவாமி: காயாரோகணேஸ்வரர்

அம்பாள்: நீலாயதாக்ஷி

Translation

பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன் Civaṉ burnt all the three forts with one arrow. பூணத்(தான்) அரவு ஆமை பொறுத்தவன் bore a cobra and the shell of a tortoise to adorn himself as ornaments. (1) காணத்தான் இனியான் it is a pleasure to have a vision of him கடல் நாகைக்காரோணத்தான் என நம் வினை ஓயுமே our Karmams will come to an end if we say Civaṉ in Nākaikkārōṇam on the shore of the sea. [[நாகைக்காரோணம் has been split into நாகைக்கா and ரோணத்தான்; This is called in prosody as வகையுளி scansion in complete disregard of speech-rhythm.]] [[Variant reading: (1) பேணத்தான், தேணத்தான்]] 1