logo

|

Home >

devotees >

thiruvaliyamudhanar-varalaru

திருவாலியமுதனார் வரலாறு

ஒன்பதாவது திருமுறையான திருவிசைப்பாவைப் பாடிய ஒன்பது பக்தர்களில் திருவாலியமுதனாரும் ஒருவர். அவரது பாடல்கள் திருவிசைப்பாவில் ஏழாவது தொகுப்பாக அமைகின்றன. திருவாலியமுதர்  அந்தண மரபில் மயிலை என்னும் மயிலாடுதுறையில் பிறந்தார். அதன் கிழக்கே சீர்காழிக்கு அருகில் ஆலி நாடு என்ற ஒரு சிறிய பகுதி இருந்தது. அந்தப் பகுதியின் தலைநகரம் திருவாலி நகரம். அந்த ஊரில் உள்ள விஷ்ணுவின் திருநாமம் அமுதனார். திருவாலியமுதனாரின்  பெற்றோர் இந்த ஊர்த் திருமாலிடத்து தீவிர பக்தர்களாக இருந்ததால், அவருக்கு திருவாலியமுதனார் என்று பெயரிட்டனர்.

அவரது குடும்பம் விஷ்ணுவை வழிபடும் குடும்பமாக இருந்தாலும், அவர் சிவபெருமான் மீது மிகுந்த அன்பை வளர்த்தார். அவர் தில்லை இறைவனின் வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இந்த சீரடியார், காலத்தின் பயன் கலகலரைத் தொழுவது என உணர்ந்து, தில்லையின் ஆடலரசனை வணங்கி ஆனந்தத்தில் கழித்தார்.

அவர் தனது பக்தியை கூத்தப்பெருமான் மீது பல பாடல்களில் பாடியுள்ளார். அவற்றில் அவர் தன்னை மயிலையர் மன்னவன், மயிலை மறை வல ஆலி என்று குறிப்பிடுகிறார். ( ``அறை செந்நெல் வான்கரும்பின் அணியானைகள் சூழ் மயிலை `` என்று கூறுவதால் மருதவளம் சூழ்ந்த மயிலை என அறியப்படுகிறது. இந்த மயிலை மயிலாடுதுறையைக் குறிப்பதாகக் கொள்வதே பொருத்தம்).

தஞ்சை கோயிலில் சில கல்வெட்டுகள் இறைவனின் சேவைக்காகத் தங்களை அர்ப்பணித்த சில பெண்களின் பெயர்கள் எடுத்த பாதம், மழைச் சிலம்பு எனக் கூறுகிறது.  இவை திருவாலி அமுதரது மூன்றாவது பதிகத்தில் உள்ள ஐந்தாவது பாடலில் உள்ள சொற்றொடர்களாகும். இது அவரது காலம் ராஜராஜனுக்கு முன் என்று பெற உதவுகிறது.  (அதாவது 985 ACE க்கு முன்).

இவர் இயற்றிய நான்கு பதிகங்கள் திருவிசைப்பாவின் அங்கமாக தில்லை நடராசப் பெருமானைப் போற்றுகின்றன.

See Also:
1. திருவிசைப்பா

Related Content

Make me Serve You

சிவஞானத் தேனிசைப் பாமாலை திருமுறை இசை

What Virtue Do I Have to Lodge You!

திருமுறைத் திருத்தலங்கள்

திருமாளிகைத் தேவர் வரலாறு