logo

|

Home >

devotees >

references-to-thiruneelakanta-yazhpanar-mentioned-in-thirumurais

திருமுறைகளில் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் பற்றிய குறிப்புகள்

 

திருஞானசம்பந்தர் தேவாரம்

 

நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்

தாணுவெனை ஆளுடையான் தன்னடியார்க் கன்புடைமை

பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்

கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.                        1.62.9 

 

நக்கமேகுவர் நாடுமோர் ஊருமே நாதன்மேனியின் மாசுணம் ஊருமே

தக்கபூமனைச் சுற்றக் கருளொடே தாரமுய்த்தது பாணற் கருளொடே

மிக்கதென்னவன் தேவிக் கணியையே மெல்லநல்கிய தொண்டர்க் கணியையே

அக்கினாரமு துண்கல னோடுமே ஆலவாயர னாருமை யோடுமே.          3.115.6 

 

சுந்தரர் தேவாரம்

 

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

        வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்

        திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

        இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்

        ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.                               7.39.11 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

தனையொப் பரும்எருக் கத்தம் புலியூர்த் தகும்புகழோன்

நினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணனைநீள்

சினையொப் பலர்பொழிற் சண்பையர் கோன்செந் தமிழொடிசை

புனையப் பரன்அருள் பெற்றவன் என்பர்இப் பூதலத்தே.                    11.83-நம்பி

 

 பெரியபுராணம்

திரிபுர மெரித்த வாறுந் தேர்மிசை நின்ற வாறுங்

See also: History of thirunIlakanta yAzpANa nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais
 

 

Related Content

ஆறுமுகநாவலர் - சைவ சமயம்

The History of Tirunilakantha Yazhpana Nayanar