logo

|

Home >

devotees >

references-to-paravaiyar-mentioned-in-thirumurais

திருமுறைகளில் பரவையார் பற்றிய குறிப்புகள்


சுந்தரர் தேவாரம்

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய

தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி

மாழையொண்கண் பரவையைத்தந் தாண்டானை மதியில்லா

ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.  7.51.10

 

குரவம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய்

பரவை பசிவருத் தம்மது நீயும் அறிதியன்றே

குரவம ரும்பொழில் சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

அரவ மசைத்தவ னேயவை அட்டித் தரப்பணியே.  7.20.6 

 

அரக்கன் முடிகரங் கள்அடர்த் திட்டவெம் மாதிபிரான்

பரக்கும் அரவல்கு லாள்பர வையவள் வாடுகின்றாள்

குரக்கினங் கள்குதி கொள்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

இரக்கம தாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே.  7.20.8 (this complete padhikam)

 

பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்

முன்செய்த மூவெயிலும் எரித்தீர்முது குன்றமர்ந்தீர்

மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே

என்செய்த வாறடிகேள் அடியே*னிட் டளங்கெடவே.       7.25.1

 

உம்பரும் வானவரும் உடனேநிற்க வேயெனக்குச்

செம்பொனைத் தந்தருளித் திகழும்முது குன்றமர்ந்தீர்

வம்பம ருங்குழலாள் பரவையிவள் வாடுகின்றாள்

எம்பெரு மானருளீர் அடியேனிட் டளங்கெடவே.  7.25.2

 

பத்தா பத்தர்களுக் கருள்செய்யும் பரம்பரனே

முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே

மைத்தா ருந்தடங்கண் பரவையிவள் வாடாமே

அத்தா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.  7.25.3

 

மங்கையோர் கூறமர்ந்தீர் மறைநான்கும் விரித்துகந்தீர்

திங்கள் சடைக்கணிந்தீர் திகழும்முது குன்றமர்ந்தீர்

கொங்கைநல் லாள்பரவை குணங்கொண்டிருந் தாள்முகப்பே

அங்கண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே.  7.25.4

 

மையா ரும்மிடற்றாய் மருவார்புரம் மூன்றெரித்த

செய்யார் மேனியனே திகழும்முது குன்றமர்ந்தாய்

பையா ரும்மரவே ரல்குலாளிவள் வாடுகின்றாள்

ஐயா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.  7.25.5

 

நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும்

முடியால் வந்திறைஞ்ச முதுகுன்ற மமர்ந்தவனே

படியா ரும்மியலாள் பரவையிவள் தன்முகப்பே

அடிகேள் தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.  7.25.6

 

கொந்தண வும்பொழில்சூழ் குளிர்மாமதில் மாளிகைமேல்

வந்தண வும்மதிசேர் சடைமாமுது குன்றுடையாய்

பந்தண வும்விரலாள் பரவையிவள் தன்முகப்பே

அந்தண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே.  7.25.7

 

பரசா ருங்கரவா பதினெண்கண முஞ்சூழ

முரசார் வந்ததிர முதுகுன்ற மமர்ந்தவனே

விரைசே ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே

அரசே தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.  7.25.8

 

ஏத்தா திருந்தறியேன் இமையோர்தனி நாயகனே

மூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்ற மமர்ந்தவனே

பூத்தா ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே

கூத்தா தந்தருளாய் கொடியேனிட் டளங்கெடவே.  7.25.9

 

பிறையா ருஞ்சடையெம் பெருமான் அருளாயென்று

முறையால் வந்தமரர் வணங்கும்முது குன்றர்தம்மை

மறையார் தங்குரிசில் வயல்நாவலா ரூரன்சொன்ன

இறையார் பாடல்வல்லார்க் கெளிதாஞ்சிவ லோகமதே.    7.25.10

 

பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்

        பற்றாய பெருமானே மற்றாரை உடையேன்

உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்

        ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவுங்

கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்

        கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரென்

றண்மயத்தால் அணிநாவ லாரூரன் சொன்ன

        அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே. 7.46.11 

 

 

 மாணிக்கவாசகர் திருவாசகம்

 

 

 திருப்பல்லாண்டு

 

 

 பதினோறாம் திருமுறை

 

பெரியபுராணம் (தடுத்தாட்கொண்ட புராணம், ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், கழறிற்றறிவார் புராணம், வெள்ளானைச் சருக்கம்)

 

vanrondar thamkkalitha nerkandu mazhilsirappar,   endrungal manaiellaik kutpaduner kundrellam,  ponrangu maligaiyir pukappeithu kolka ena,   venrimura saraiviththar mikkapuzhakalp paravaiyar periya puranam

 

See also:   History of paravaiyAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Paravaiyar