logo

|

Home >

devotees >

references-to-ninraseer-nedumara-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் நின்ற சீர் நெடுமாற நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சம்பந்தர் தேவாரம்

எக்கராம்அமண் கையருக்கெளி யேனலேன்திரு ஆலவாய்ச்

சொக்கனென்னு ளிருக்கவேதுளங் கும்முடித்தென்னன் முன்னிவை

தக்கசீர்ப்புக லிக்குமன்தமிழ் நாதன்ஞானசம் பந்தன்வாய்

ஒக்கவேயுரை செய்தபத்தும் உரைப்பவர்க்கிடர் இல்லையே.                3.39.11 

 

செய்ய னேதிரு ஆலவாய் மேவிய

ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்

பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்

பைய வேசென்று பாண்டியற் காகவே.                           3.51.01 

 

சித்த னேதிரு ஆலவாய் மேவிய

அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை

எத்த ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்

பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே.                         3.51.02 

 

தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்

சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை

எக்க ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்

பக்க மேசென்று பாண்டியற் காகவே.                                    3.51.03 

 

சிட்ட னேதிரு ஆலவாய் மேவிய

அட்ட மூர்த்திய னேயஞ்ச லென்றருள்

துட்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்

பட்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.                         3.51.04 

 

நண்ண லார்புரம் மூன்றெரி ஆலவாய்

அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை

எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்

பண்ணி யல்தமிழ்ப் பாண்டியற் காகவே.                         3.51.05 

 

தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும்

அஞ்ச லென்றருள் ஆலவா யண்ணலே

வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்

பஞ்ச வன்தென்னன் பாண்டியற் காகவே.                         3.51.06 

 

செங்கண் வெள்விடை யாய்திரு ஆலவாய்

அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக்

கங்கு லார்அமண் கையரிடுங் கனல்

பங்க மில்தென்னன் பாண்டியற் காகவே.                         3.51.07 

 

தூர்த்தன் வீரந் தொலைத்தருள் ஆலவாய்

ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை

ஏத்தி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்

பார்த்தி வன்தென்னன் பாண்டியற் காகவே.                              3.51.08 

 

தாவி னான்அயன் தானறி யாவகை

மேவி னாய்திரு ஆலவா யாயருள்

தூவி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்

பாவி னான்தென்னன் பாண்டியற் காகவே.                               3.51.09 

 

எண்டி சைக்கெழில் ஆலவாய் மேவிய

அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக்

குண்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்

பண்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.                                3.51.10 

 

அப்பன் ஆலவா யாதி யருளினால்

வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக்

கொப்ப ஞானசம் பந்தன் உரைபத்துஞ்

செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.                                    3.51.11 

 

வெற்றவே யடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியுங்

கொற்றவன் றனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவி நின்றேத்தும்

ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை யொழிந்திட்

டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற ஆலவா யாவதும் இதுவே.              3.120.2 

 

சுந்தரர் தேவாரம்

 

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த

        கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்

நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

        நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்

        தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்

அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.8 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

கார்த்தண் முகில்கைக் கடற்காழி யர்பெரு மாற்கெதிராய்

ஆர்த்த அமணர் அழிந்தது கண்டுமற் றாங்கவரைக்

கூர்த்த கழுவின் நுதிவைத்த பஞ்சவன் என்றுரைக்கும்

வார்த்தை யதுபண்டு நெல்வேலி யில்வென்ற மாறனுக்கே.         11.60-நம்பி 

 

 

பெரியபுராணம்

 

அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலே

See Also: 1. Life history of ninRachIr nedumARa nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais
 

 

Related Content

The History of Ninracheer Nedumara Nayanar