சுந்தரர் தேவாரம்
வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
*நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
*பிறவி அந்தகராயிருந்து திருவாரூர்க் கமலாலயத்
தீர்த்தத்தில் மூழ்கியெழுந்திருக்கும்போது சுவாமி
யினுடைய திருவருளால் நாட்டம் விளங்கப்பெற்றவ
ரென்பது தோன்ற நாட்டமிகு தண்டிக்கும்
என்றருளிச்செய்தது. 7.39.1
பதினோறாம் திருமுறை
கண்ணார் மணிஒன்றும் இன்றிக் கயிறு பிடித்தரற்குத்
தண்ணார் புனல்தடம் தொட்டலும் தன்னை நகும்அமணர்
கண்ணாங் கிழப்ப அமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவன் ஆரூர் விறல்தண்டியே. 11.37-நம்பி
பண்டு போலப் பல நாளும் பயிலும்
பணி செய்து அவர் ஒழுகத்
தண்டி அடிகளால் அமணர் கலக்கம்
விளைந்து சார்வில் அமண்
குண்டர் அழிய ஏழ் உலகும்
குலவும் பெருமை நிலவியதால்
அண்டர் பெருமான் தொண்டர் கழல்
அமரர் பணியும் மணி ஆரூர். 12.033.18
See Also: 1. Life history of daNdiyadigaL nAyanAr
திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais