logo

|

Home >

devotees >

references-to-changiliyar-mentioned-in-thirumurais

திருமுறைகளில் சங்கிலியார் பற்றிய குறிப்புகள்


சுந்தரர் தேவாரம்

பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
        பற்றாய பெருமானே மற்றாரை உடையேன்
உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்
        ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவுங்
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்
        கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரென்
றண்மயத்தால் அணிநாவ லாரூரன் சொன்ன
        அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே. 7.46.11
 

வங்கமலி கடல்நஞ்சை வானவர்கள் தாமுய்ய
நுங்கிஅமு தவர்க்கருளி நொய்யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோ டெனைப்புணர்த்த தத்துவனைச் சழக்கனேன்
எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. 7.51.11


கட்ட னேன்பிறந் தேன்உனக் காளாய்
        காதற் சங்கிலி காரண மாக
எட்டி னாற்றிக ழுந்திரு மூர்த்தி
        என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்
பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்
        பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை
ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்
        ஒற்றி யூரெனும் ஊருறை வானே.  7.54.2

 

விண்பணிந் தேத்தும் வேதியா மாதர் 
        வெருவிட வேழம்அன் றுரித்தாய் 
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை 
        வாயிலாய் தேவர்தம் அரசே 
தண்பொழில் ஒற்றி மாநக ருடையாய் 
        சங்கிலிக் காஎன்கண் கொண்ட 
பண்பநின் அடியேன் படுதுயர் களையாய் 
        பாசுப தாபரஞ் சுடரே.                                 7.69.3 

 

பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க்கீ ழிருவென்று
சொன்னஎனைக் காணாமே சூளறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோவென்ன
ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே.  7.89.9

 

மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாந்
தோன்றஅருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோவென்ன
ஊன்றுவதோர் கோலருளி உளோம்போகீர் என்றானே.  7.89.10

 

 

பெரியபுராணம் (ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்)

 

பண்டு கயிலைத் திருமலையிற் செய்யும் பணி

 

See also:  History of changiliyAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content