logo

|

Home >

devotees >

references-to-chakkiyanayanar-mentioned-in-thirumurais

திருமுறைகளில் சாக்கிய நாயனார் பற்றிய குறிப்புகள்

 

திருநாவுக்கரசர் தேவாரம்

1. கல்லினால் எறிந்து கஞ்சி 

               தாமுணுஞ் சாக்கி யனார்

நெல்லினார் சோறு ணாமே 

               நீள்விசும் பாள வைத்தார்

எல்லியாங் கெரிகை ஏந்தி 

               எழில்திகழ் நட்ட மாடிக்

கொல்லியாம் பண்ணு கந்தார் 

               குறுக்கைவீ ரட்ட னாரே.                        4.49.6

 

2. மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம்

        விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும்

பொய்த்தவன்காண் புத்தன் மறவா தோடி 

        எறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்

உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை

        உலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும்

வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும் 

        விண்ணிழிதண் வீழி மிழலை யானே.                           6.52.8

 

சுந்தரர் தேவாரம்

 

1. நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன் 

        நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்

கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி 

        கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்

குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் 

        கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்

பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும் 

        பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே.                           7.55.4 

 

2. வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே

        மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்

சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

        செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்

கார்கொண்ட கொடைக்*கழறிற் றறிவார்க்கும் அடியேன்

        கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                           7.39.6 

திருவாசகம்

திருப்பல்லாண்டு

பதினோறாம் திருமுறை

 

கற்கொண் டெறிந்த சாக்கியன் அன்பு 

தற்கொண் டின்னருள் தான் மிக அளித்தும்                                      11. கோபப் பிரசாதம்

 

கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்

நின்நினைந் தெறிந்த அதனால்

அன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே.                                     11.திருவிடைமருதூர் மும்மணிக்கோவை.25

 

1. நல்வழி நின்றார் பகைநன்று நொய்யர் உறவிலென்னும்

சொல்வழி கண்டனம் யாம்தொகு சீர்த்தில்லை அம்பலத்து

வில்வழி தானவர் ஊர்எரித் தோன்வியன் சாக்கியனார்

கல்வழி நேர்நின் றளித்தனன் காண்க சிவகதியே.                         11.33-நம்பி (கோயில் திருப்...)

 

புல்லறிவின் மற்றைத் தேவரும் பூம்புலியூருள் நின்ற
அல்லெறி மாமதிக் கண்ணியனைப் போல் அருளுவரே
கல்லெறிந்தானும் தன் வாய்நீர் கதிர்முடி மேல் உகுத்த
நல்லறிவாளனும் மீளா வழிசென்று நண்ணினரே              11.33.68-நம்பி (கோயில் திருப்...)
 

 

2. தகடன ஆடையன் சாக்கியன் மாக்கற் றடவரையன்

மகள்தனந் தாக்கக் குழைந்ததிண் தோளர்வண் கம்பர்செம்பொன்

திகழ்தரு மேனியிற் செங்கல் எறிந்து சிவபுரத்துப் 

புகழ்தரப் புக்கவன் ஊர்சங்க மங்கை புவனியிலே.                                11.41-நம்பி.

 

 

 பெரியபுராணம்

 

 

 Other stotras

 

 shivAnanda lahari - shankarar

 

natibhirnutibhistvamIshapUjA vidhibhirdhyAna samAdhibhir na tuShTaH |

dhanuShA musalena chAshmabhir vA vada te prItikaraM tathA karomi || 89 ||

"O Lord! Thou art not pleased with offerings of obeisance, singings of praise, procedures of worship, meditations and concentrations. If through (hitting with) a bow, a club or stones (Thou art pleased), tell me so; I shall do what pleases Thee.”

See also: The History of chAkkiya nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The Puranam of Saakkiya Nayanar

The History of Shakya Nayanar

சாக்கிய நாயனார் புராணம்