ஒன்பதாவது திருமுறையான திருவிசைப்பாவைப் பாடிய ஒன்பது அடியார்களில் புருடோத்தம நம்பியும் ஒருவர். அவரது பாடல்கள் திருவிசைப்பாவில் எட்டாவது தொகுப்பாக அமைகின்றன. புருடோத்தமன் என்பது விஷ்ணுவின் பெயர்களில் ஒன்றாகும். எனவே அவர் விஷ்ணுவை வழிபடும் குடும்பத்தில் வந்த அந்தணர் என்பது புரிகிறது. அவர் தன்னை மாசிலா மறைபல ஒது நாவன் வண் புருடோத்தமன் (குறையற்ற வேதங்களை உச்சரிப்பவர்) என்று குறிப்பிட்டுள்ளார். சிவபெருமான் மீது மிகுந்த பக்தியை தன்னுள் வளர்த்துக் கொண்டார்.
நன்கு கற்றுத் தேர்ந்தவராகவும், திறமை வாய்ந்தவராகவும் இருந்த அவர், தில்லையில் சிற்றம்பலக் கூத்தரை வணங்கி வாழ்ந்தார். அவரது வாழ்க்கையைப் பற்றிய பல விவரங்கள் கிடைக்கவில்லை.
திருவிசைப்பாவின் அங்கமாகத் தில்லையின் மேல் இவர் இவர் பாடிய இரண்டு பதிகங்கள் உள்ளன.
புருடோத்தம நம்பி 10-11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது.
See Also:
1. திருவிசைப்பா