logo

|

Home >

devotees >

nambiyandar-nambi-varalaru

திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி வரலாறு

திருநாரையூர் நம்பியாண்டார் நம்பிக்கு சம்பந்தர், அப்பர், சுந்தரர்  ஆகியோரின் அற்புதமான மற்றும் நிகரற்ற தேவாரப் பாடல்களைக் கிடைக்கச் செய்ததற்கும், சுந்தரரின் திருத்தொண்டத்தொகையில்  குறிப்பிடப்பட்டுள்ள 63 அற்புதமான நாயன்மார் பெருமக்களின் வரலாற்றைச் சுருக்கமாக வகைப்படுத்திப் பின்னர் விரிநூலாகத் திருத்தொண்டர்புராணம் அமைவதற்கு அடிப்படை செய்து கொடுத்ததற்கும் சைவ உலகம் கடமைப்பட்டிருக்கிறது.

பதினொன்றாவது திருமுறையின் ஆசிரியர்களில் நம்பியாண்டார் நம்பிகளும் ஒருவராவார். பதினொன்றாம் திருமுறையில் அதிகம் பாடல்களைச் செய்த பெருமையும் இவருக்கு உண்டு. திருநாரையூரில் முக்கண்ணன் திருக்கோயிளில் அர்ச்சகராகப் பணிபுரியும் ஆதி சைவ பாரம்பரியத்தில் பிறந்தவர். உபநயனத்திற்குப் பிறகு, வேதங்களுடன் கலைகளும் கற்கத் தொடங்கினார்.

ஒரு நாள் அவரது தந்தை வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், அந்த ஊரில் உள்ள கோவிலில் பொல்லாப் பிள்ளையாரின் நித்திய பூஜைக்கு நம்பி சென்றார். சிறு குழந்தை, சிவக்களிற்றின் முன்பு தான் கற்றபடியே வழிபாடு செய்தது. நைவேத்தியத்தை கணபதியின் முன் வைத்தார். அவருடைய தந்தை பாவனையால் அந்த நைவேத்தியத்தை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு அதை திரும்ப எடுத்துக்கொள்வது அவருக்குத் தெரியாது.

கணபதி நைவேத்தியம் உண்பதற்காகச் சிறு குழந்தை காத்திருந்தது. இறைவன் செய்யாததால், தான் செய்த வழிபாடு தவறு என்று எண்ணி அழத் தொடங்கினார். கடைசியில் இறைவன் உணவுப் பிரசாதத்தை ஏற்காததால் தலையை நொறுக்க முடிவு செய்தார். இந்த இளம் குழந்தையின் கள்ளங்கபடமற்ற நேர்மையான அன்பு இறைவனின் திருவருளைக் கொண்டு வந்தது. கணபதி குழந்தை தலையில் மோதுவதைத் தடுத்து, குழந்தை கொண்டு வந்த அனைத்து உணவையும் சாப்பிட்டார். அது அவரது குறைபாடற்ற அன்பால் தூய்மைப்படுத்தப்பட்டது. பள்ளிக்கு ஏற்கனவே தாமதமாகிவிட்டதால், அன்றைய பள்ளியில் நடந்த பாடங்களை கற்பிக்குமாறு இறைவனிடம் வேண்டினார், இல்லையெனில் அவரது ஆசிரியர் அவரைகே கடிந்து கொள்வார். அறிய முடியாத சிவபெருமானை வழிபடும் ஞானம் பெற அனைவரும் வணக்கம் செலுத்தும் உயர்ந்த ஞான யானை, இந்த பாக்கியம் பெற்ற குழந்தைக்குப் பாடம் கற்பித்தது!!

இது மறுநாளும் நடந்தது, தொடர்ந்தது. மல்லிகைப் பூவின் நறுமணம் போல இந்தச் செய்தி பரவியது. சோழச்  சக்கரவர்த்தி ராஜராஜனுக்கு இச்செய்தி எட்டியது. அவர் மந்திரிகள், அரசவைக்காரர்கள், மக்கள் ஆகியோருடன் ஏராளமான வாழைப்பழங்கள், தேன், அவல், அப்பம் மற்றும் எள் உருண்டைகளை இறைவனுக்குக் காணிக்கையாக எடுத்துக்கொண்டு பெரிய ஊர்வலமாக திருநாரையூர் வந்தார். விழாக்கோலம் புண்ட அந்த ஊரில், இளம் சீரடியாரான நம்பியாண்டார் நம்பியின் பாதங்களுக்கு வணக்கம் செய்து, சிவக்களிற்றிற்கு வாழைப்பழங்கள், மாம்பழங்கள் மற்றும் பலாப்பழங்களின் குவியல்களையும்  மற்ற நிவேதனங்களுடன் சமர்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். குறையற்ற குழந்தையும் இறைவனை தூய்மையோடும் அன்போடும் வணங்க, அந்த நிவேதனக் குவியல்களையெல்லாம் தும்பிக்கையால் ஒரே கவளமாக உண்டார் கணபதி!

வியப்படைந்த மன்னன் குழந்தையை வாழ்த்தி, மத்தம் முடிமேல் உடைய இறைவனின் மீது கொண்ட அற்புதமான அன்பினால், முப்பெரும் சைவ சமயக் குரவர்கள் (சம்பந்தர், அப்பர், சுந்தரர்) பாடிய தேவாரத் திருப்பதிகங்களைப் பெறவேண்டும் என்று வேண்டினான். கணபதி மீது நம்பிக்கை கொண்ட குழந்தை, அரசனிடம் தகவலைப் பெறுவதாக உறுதியளித்தது. கண்கள் நிறைந்த பக்திக்  கண்ணீருடன், கணபதியைக் குழந்தை வணங்கியது. கருணையுள்ள கணபதியார் இராசராசன் உளம் களிக்க சைவ உலகில் நாமெல்லாம் உய்ய தேவாரம் பற்றிய தகவலை வெளிப்படுத்தினார், தேவாரத் திருப்பதிகங்களின் பனை ஓலைகள் தில்லையின் நடராசப் பெருமானுக்குப் பின்னால் ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த இடத்தைக் குறிக்கும் அடையாளச் சின்னம் உள்ளது. திருஞானசம்பந்தரின் பாடல்கள் 16000, திருநாவுக்கரசர் பாடல்கள் 49000, சுந்தரரின் பாடல்கள் 39000 என்று நம்பி மூலம் மூத்தபிள்ளையார் அருளினார்.

நம்பியும் மன்னனும் தில்லைக்குச் சென்று குறிப்பிட்ட இடத்தைத் திறந்து பார்த்தபோது, அந்த மதிப்பற்ற பாடல்களில் பெரும்பாலானவை கரையான்களால் தின்றுவிடப்பட்டதைக் கண்டு திகைத்தனர்!! பெரும் இழப்பு!! "தேவார ஏடுகளில் இக்காலத்துக்கு வேண்டுவனவற்றை மாத்திரம் வைத்து விட்டு எஞ்சியவற்றைச் செல்லரிக்கச்செய்தோம் கவலற்க" என்று இறைவனின் குரல் அவர்களுக்கு ஆறுதல் அளித்தது. அவர்களால் மீட்க முடிந்ததெல்லாம் முழுப் பாடல்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் எளிதில் அழியும் பனை ஓலைகளில் எழுதப்பட்ட நூல்கள் பாதுகாக்கும் வகை இல்லாததால் இவ்வாறு நமக்குக் கிடைக்காமல் போயின. இனி இவ்வாறு நடக்காமல் தடுக்க கரையான்களால் அழிக்கப்படாத பாடல்களை செப்புத் தகத்திலேற்றிப் பாதுகாக்க மன்னர் ஏற்பாடு செய்தார். இந்த இருபெரும் பக்தர்களுக்கு சைவ உலகம் முழுவதுமாக தெய்வீகப் பாடல்களைக் காப்பாற்றியதற்குக் கடமைப்பட்டிருக்கும்.

மன்னரின் வேண்டுகோளின் பேரில், திருவாசகம், திருவிசைப்பா, திருமந்திரம் போன்ற மற்ற பெரிய பாடல்களுடன் பத்து திருமுறையாக நம்பியாண்டார் நம்பி பாடல்களைத் தொகுத்தார். பின்னர் இராசராசன் வேண்டுகோளின் பேரில் திருமுகப்பாசுரம் முதலானவை பதினொன்றாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டது. அநபாயன் காலத்தில் திருத்தொண்டர்புராணம் பன்னிரண்டாம் திருமுறையாக நிறைவுற்றது.நீலகண்ட யாழ்ப்பாணர் பாரம்பரியத்தில் வந்த ஒரு பெண்ணின் உதவியுடன் தேவாரப் பதிகங்களின் பண்ணடைவு கிடைத்தது. பிள்ளையாரின் ஆசியுடன், சுந்தரரால் குறிப்பிடப்பட்ட 63 பெரிய பக்தர்களின் வரலாற்றை உணர்ந்து, அவர்களின் வாழ்க்கையைச் சுருக்கமாகத் தனது திருத்தொண்டர் திருவந்தாதியில் எழுதினார். சம்பந்தர் மற்றும் அப்பரின் வாழ்க்கையைப் பற்றி அவர் எழுதிய பல்வேறு பிரபந்தங்களில் பதிவு செய்தார்.

நம்பிகள் காலம் 10-11ம் நூற்றாண்டு ஆகும்.

சீராரும் திருமுறைகள் கண்ட திறப் பார்த்திபனாம் 
ஏராரும் இறைவனையும் எழில் ஆரும் நம்பியையும் 
ஆராத அன்பினுடன் அடிபணிந்து அங்கு அருள் விரவச் 
சோராத காதல் மிகும் திருத்தொண்டர் பதம் துதிப்பாம். 
 

See Also: 
1.  பதினொன்றாம் திருமுறை 
2. Thirumurai Kanda Chozan 
3. திருமுறை கண்ட புராணம்

Related Content

Get rid of sins of three Karanas

திருநாரையூர் தேவாரம்

Sarabeswarar in Thirumurais - திருமுறையில் சரபேஸ்வரர்

திருவாலவாயுடையார்

तिरुवालवाय उडैयार (सन्घ कवि शिवजि)