logo

|

Home >

devotees >

kapila-dheva-nayanar-varalaru

Om symbol

கபில தேவ நாயனார் (கபிலர்) வரலாறு

Om symbol

பதினொன்றாம் திருமுறையைப் பாடிய பன்னிருவரில் கபில தேவ நாயனார் ஒருவர். வரலாற்றில் கபிலர் என்ற பெயரில் பல கவிஞர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சங்கப்புலவராகிய கபிலர் வேள்பாரியின் இனிய நண்பர். அந்தணர், `பொய்யா நாவிற் கபிலன்` எனப் போற்றப்பட்டவர். ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்திக் குறிஞ்சிப்பாட்டுப் பாடியவர். செல்வக்கடுங்கோ வாழியாதன் மீது பதிற்றுப் பத்துள் ஒரு பத்துப் பாடிப் பரிசில் பெற்றவர். கலித்தொகையில் குறிஞ்சித்திணை பாடிக் `குறிஞ்சிக் கபிலன்` என்ற பெயரைப் பெற்றவர். பதினோராம் திருமுறையில் கபிலரால் பாடப்பட்ட மூன்று பிரபந்தங்கள் உள்ளன.
 


See Also:
1. பதினொன்றாம் திருமுறை

Related Content

Kapilar History

பொய்யடிமை இல்லாத புலவர் புராணம்

பதினொன்றாம் திருமுறை

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள்

திருவாலவாயுடையார்