பதினொன்றாம் திருமுறை பாடிய பன்னிருவரில் அதிராவடிகள் ஒருவர். அதிர்வு - நிலை குலைதல், கலங்குதல். கலங்காத சிந்தையராய் வாழ்ந்த இப்பெரியோருக்கு அதிராவடிகள் என்ற திருநாமமே நினைந்து இன்புறத்தக்கது. அடியவர் இடர் கடி கணபதி புகழ் பரவ பதினோராவது திருமுறையில் மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை இந்த சிவபக்தரால் பாடப்பட்டது.
See Also:
1. பதினொன்றாம் திருமுறை