logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

yetholaovilirunthum-pukonarnthu-vazhipatavar

எத்தொலைவிலிருந்தும் பூக்கொணர்ந்து வழிபட்டவர்

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

   
தலம்    :    திருப்புள்ளிருக்குவேளூர் 
பண்    :    சீகாமரம் 
இரண்டாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
வாச நலஞ் செய்திமையோர் நாடோறும் மலர்தூவ 
ஈசன் எம்பெருமானார் இனிதாக உறையுமிடம் 
யோசனை போய்ப் பூக்கொணர்ந்தங்கு ஒரு நாளுமொழியாமே 
பூசனை செய்தினிதிருந்தான் புள்ளிருக்குவேளூரே. 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

   
thalam    :    thiruppuLLirukkuvELUr 
paN    :    cIkAmaram 
Second thirumuRai 
 
thirucciRRambalam 
 
vAca n^alam ceythu imaiyOr n^AL thORum malar thUva 
Ican emperumAnAr inithAka uRaiyumiDam 
yOcanai pOyp pUkkoNarn^thaN^gu oru n^ALum oziyAmE 
pUcanai ceythu inithirun^thAn puLLirukkuvELUrE. 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

  
Making fragrance, the dwellers of himAlaya, everyday  
showering flowers, the Master, our Lord happily residing place 
is thiruppuLLirukkuvELUr where (sambAdhi and jaTayu) 
traveled yojanai, bringing flowers and worshipped joyfully 
everyday without fail! 
 
பொருளுரை

  
இமையவர்கள் நறுமணம் செய்து, நாள்தோறும் மலர்தூவ, 
ஈசனும், எம்பெருமானுமானவர் இனிதாக உறையும் இடமாவது, 
நாள்தவறாமல் யோசனை தூரம் சென்று பூக்கொணர்ந்து 
(சம்பாதியும் சடாயுவும்) வழிபாடு செய்து மகிழ்ந்திருந்த 
திருப்புள்ளிருக்குவேளூர் ஆகும். 
 
Notes

  
1. யோசனை - 13 மைல் தூரம். 

Related Content

Music Beyond Instrument

Flawless Money

Books on vratas / festivals

Oh parrot, tell my Lord's name

Master, take note of my disorientation !