logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

yentha-thirthathil-kulithaal-muthi-kitum

எந்தத் தீர்த்தத்தில் குளித்தால் முத்தி கிட்டும்?


திருநாவுக்கரசர் தேவாரம்


தலம்    :    பொது
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை

பாவநாசத் திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?
கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?
ஓங்கு மா கடல் ஓத நீர் ஆடில் என்?
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.        5.99.2

திருச்சிற்றம்பலம்

thirunAvukkaracar thEvAram


thalam    :    pothu
thirukkuRunthokai
Fifth thirumuRai

pAvanAcath thirukkuRunthokai

thirucciRRambalam

gaN^gai ADil en? kAviri ADil en?
koN^gu thaN kumariththuRai ADil en?
ON^gu mA kaDal Odha n^Ir ADil en?
eN^gum Ican enAthavarkku illaiyE.        5.99.2

thirucciRRambalam

Meaning of Thevaram


What great is bathing in ganga? 
What great is bathing in kAviri? 
What great is bathing in fragrant cool kumari? 
What great is bathing in rising waters of the grand ocean? 
There is nothing for one who does not think, "God is everywhere"

பொருளுரை


கங்கை நீரில் ஆடினால் என்ன?
காவிரி நீரில் ஆடினால் என்ன?
மணமும் குளுமையும் உடைய குமரியில் ஆடினால் என்ன?
ஆங்கு பெருங்கடலின் நீரில் ஆடினால் என்ன?
"எல்லாவிடத்தும் ஈசன் உள்ளான்" என்றெண்ணாதவர்க்கு அது கிட்டாது.

Notes


1. "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே" என்பது அப்பர் பெருமான்
வாசகம். "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால்
மாளும் இவ்வுடம்பு கொண்டு மீளேன்" என்று உறுதியுடன் 
திருக்கயிலை யாத்திரை செய்தவர் நம் அடிகளார். 
  இப்புண்ணியச் செயல்கள் நல்வினையால் நம்மை ஒழுங்குபடுத்தும்.
எனினும், இறைவனை எங்கும் காணும் ஞானம் வந்த பின்னரே
அழியாப் பேரின்பம் கிட்டும்.
2. கொங்கு - வாசனை; தண் - குளுமை.

Related Content

How to get rid of all three types of karma ?

My duty is just to keep serving

What is the most virtuous deed you did ?

Why Fear ?

Want Time-pass ?