logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

yengu-yaathaakap-piranthaalum-nammai-sivaperumaan-kaappaar

எங்கு யாதாகப் பிறந்தாலும் நம்மைச் சிவபெருமான் காப்பார்!

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

   
தலம்    :    திருப்பிரமபுரம் 
பண்    :    சீகாமரம் 
இரண்டாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்கு 
இங்கே என்றருள் புரியும் எம்பெருமான் எருதேறிக் 
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர் பிரமபுரத்துறையுஞ் 
சங்கே ஒத்தொளிர் மேனிச் சங்கரன் தன் தன்மைகளே. 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

   
thalam    :    thiruppiramapuram 
paN    :    cI kAmaram 
Second thirumuRai 
 
thirucciRRambalam 
 
eN^gEnum yAdhAgip piRan^thiDinum thannaDiyArkku 
iN^gE enRaruL puriyum emperumAn eruthERik 
koN^gEyum malarccOlaik kuLir piramapuraththuRaiyum 
caN^gE oththoLir mEnic caN^karan than thanmaikaLE. 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

  
My Lord, Who blesses to the devotees, "We are here!" 
even when they are born wherever and as whatever! 
Riding on the bull, residing at the cool thiruppiramapuram 
of honeyful floral gardens, having the Form brilliant 
like the conch, our Meritorious, His qualities are thus! 
 
பொருளுரை

  
எங்காகினும், யாதாகப் பிறந்தாலும், தன்னுடைய அடியவருக்கு 
"இங்குளோம்" என்று அருள் புரியும் எம்பெருமான், 
விடை ஏறித் தேன் மிக்க மலர்ச்சோலை சூழ்ந்த குளிர்ந்த 
திருப்பிரமபுரத்து உறைகின்ற, சங்கு போன்று ஒளிரும் 
திருமேனியுடைய நன்மையே செய்பவனுடைய தன்மைகள் இவை. 
 
Notes

  
1. ஒ: ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும்  
      கேட்பான் புகின் அளவில்லை - திருப்பாசுரம் 
2. கொங்கு - தேன்; சங்கரன் - நன்மை செய்பவன்.

Related Content

Five Deeds of Lord

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்

நல்லாரோடு இணங்கி இருக்கின்ற நன்மை