திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருக்கழுமலம்
பண் : கொல்லி
மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அடைவிலோம் என்று நீ அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே. 3.24.5
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thirukkazumalam
paN : kolli
Third thirumuRai
thirucciRRambalam
aDaivilOm enRu n^I ayarvozi n^enycamE
viDaiyamar koDiyinAn viNNavar thozuthezum
kaDaiyuyar mADamAr kazumala vaLan^agarp
peDain^aDai avaLoDum perun^thakai irun^thathE. 3.24.5
thirucciRRambalam
Meaning of Thevaram
Oh my mind! Don't cripple thinking, "We have no refuge!"
There is the Magnanimous, Who has the bull flag, residing along
with the Lady of feminine walk, at the prosperous town
of thirukkazumalam, having pinnacles to the end (of the street),
worshipped by celestials!
பொருளுரை
நெஞ்சமே! நம்மை அடைக்கலம் ஏற்பவர் யாருமில்லை எனத்
தளர்ந்துவிடாதே! எருதினைக் கொடியாகக் கொண்ட பெருந்தகை,
பெண்மை நிறைந்த நடையுடைய உமையாளோடு,
விண்ணவரால் தொழப்படுவதும், (வீதிகளின்) கடைசி வரை
மாடங்கள் உடையதுமாகிய திருக்கழுமலமாகிய வளமுடைய
நகரில் வீற்றிருக்கிறார்!
Notes
1. விடை - எருது; பெடை - பெண்மை.