திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருவாவடுதுறை
பண் : காந்தாரபஞ்சமம்
மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாது என் நாக்
கைமல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thiruvAvaDuthuRai
paN : gAndhAra panycamam
Third thirumuRai
thirucciRRambalam
thummalOdu arun^thuyar thOnRiDinum
ammalar aDiyalAl araRRAthu en n^Ak
kaimalgu varicilaik kaNai onRinAl
mummathiL eriyeza munin^thavanE
ithuvO emaiyALumARu IvathonRu emakkkillaiyEl
athuvO unathu innaruL AvaDuthuRai aranE.
thirucciRRambalam
Meaning of Thevaram
Even if the terrible suffering with sneezing appears,
my tongue will not utter anything other then those Floral Feet!
Oh the One Who showed anger burning the three walls
with the one fiery arrow from the handheld bow!
If this is the way to govern us and nothing to give us,
that be Your nice blessings, oh the hara of thiruvAvaDuthuRai!
பொருளுரை
தும்மலுடன் பெருந்துயர் நோய்கள் வந்த பொழுதும்,
உன்னுடைய மலர்த்திருவடிகளைத் தவிர என் நாக்கு அரற்றாது.
கைக்கொண்ட வில்லின் தீக்கணை ஒன்றைக் கொண்டு
மூன்று மதில்களை எரிக்கச் சீறிய பெருமானே!
இவ்வகையே எம்மை ஆளும் வகையாக,
எமக்குக் கொடுப்பது ஒன்றும் இல்லையானால்,
அதனையே உனது திருவருளாகக் கொள்வோம்
திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் அரனே!
Notes
1. இத்திருப்பதிகம் ஆளுடைய பிள்ளையாரின் உயர்ந்த
பக்குவ நிலையை உணர்த்துவதாகும்.
பிள்ளையாரின் தந்தையார் சிவபெருமானை முன்னிறுத்தி
அருமறை வேள்வி செய்ய விரும்பினர். அதற்குப்
பெரும்பொருள் வேண்டுமெனப் பிள்ளையாரிடம் தெரிவித்தனர்.
சிற்றம்பல மேய செல்வன் கழலேத்தும் செல்வமே செல்வமாக
வாழும் பிள்ளையார், ஆவடுதுறைப் பெருமானிடத்திலேயே
வேண்டுகோளை வைத்தனர். ஒரு பூதம் அங்கு தோன்றி
அயிரம் பொன் கிழியைக் கொடுத்து மறைந்தது. அதைத்
தந்தையாரிடம் வேள்விக்காக அளித்தனர் நான்மறைச் சம்பந்தர்.
(இந்நிகழ்வினை திருநாவுக்கரசர் "கழுமல ஊரர்க்கு அம்பொன்
ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே" எனப்போற்றுவர்.)
இறைவனுடைய திருவடிகளையே சார்ந்து வாழ்பவர்கள்
சிவபெருமானுடைய திருவருளாலேயே எல்லாம் அடையப்பெற்று
இன்புறுகின்றனர். (ஒப்பிடுக: வீரசைவத்தில் பிரசாதி ஸ்தளம்)
இறைவன் ஏது கொடுக்கினும், கொடுக்காதிருக்கினும்
இரண்டையுமே அவர் தம் திருவருளாகக் கொண்டு அவர்
திருக்குறிப்பு பிசகாது நிற்றல் முழுமையான ஒப்புவிப்பாம்
பெருநிலை (ஒப்பிடுக: வீரசைவத்தில் சரண ஸ்தளம்).
எல்லாவற்றையும் இவ்வண்ணம் இறைவர் திருவருள் சார்ந்து
நோக்கும் பெருநிலையைத் திருஞானசம்பந்த நாயனார் புராணத்தில்
சேக்கிழார் பெருமான் தெளிவாகக் காட்டியுள்ளார்.
(எ.கா. தம்பிரான் அருளிதுவே எனப்பேணி 141
ஆதியார் அருளாதலின் அஞ்செழுத்து
ஓதி ஏறினார் உய்ய உலகெலாம் 216)
2. இத்திருப்பதிகம் பொருளாதார நிலை சீர்பெற்று
நல்ல செல்வம் பெற ஓதப்படும் திருப்பதிகம்.
முழுப்பதிகம்: /prayers-for-specific-ailments )
3. வரி - தீ; சிலை - வில்; கணை - அம்பு; மதிள் - மதில்;
முனிதல் - சீறுதல்.