திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருப்பிரமபுரம்
பண் : சீகாமரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய்
அரியானாம் பரமேட்டி அரவஞ்சேர் அகலத்தான்
தெரியாதான் இருந்துறையுந் திகழ் பிரமபுரஞ்சேர
உரியார் தாம் ஏழுலகும் உடனாள உரியாரே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thiruppiramapuram
paN : cI kAmaram
Second thirumuRai
thirucciRRambalam
kariyAnum n^An mukanum kANAmaik kanaluruvAy
ariyAnAm paramETTi aravanycEr akalaththAn
theriyAthAn irun^thuRaiyum thikaz piramapuranycEra
uriyAr thAm Ezulakum uDanALa uriyArE.
thirucciRRambalam
Meaning of Thevaram
Unseen by the black one and four-faced one,
the Rare One Who stood as the form of fire!
The Supreme! One with the chest wound with snake!
Only those, who are able to get to the glorious
thiruppirampuram where the Unrealizable stays,
are the apt ones to rule all seven worlds together!
பொருளுரை
கரிய நிறத்தவனும், நான்முகனும் காணாவண்ணம்
கனல் உருவாய் அரியவனாய் நின்ற பரம்பொருள்;
பாம்பணி மார்புடையவன்! தெரியாத வண்ணம்
(மறை பொருளாய்) விளங்குகின்ற பெருமான்
இருக்கின்ற திகழ்வுடைய திருப்பிரமபுரத்தை
யார் சேர வல்லார்களோ அவர்களே
ஏழுலகங்களையும் ஒருங்கு ஆள வல்லவர்கள்.
Notes
1. பரமேட்டி - பரம்பொருள்.