திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : திருவதிகை வீரட்டம்
திருத்தாண்டகம்
ஆறாம் திருமுறை
திருவடித் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
ஒரு காலத்து ஒன்றாகி நின்ற அடி
ஊழிதோறூழி உயர்ந்த அடி
பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும் அடி
புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி
இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி
இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி
திருவதிகைத் தென்கெடில நாடன் அடி
திருவீரட்டானத்து எம் செல்வன் அடி. 6.6.5
திருச்சிற்றம்பலம்
thirunAvukkaracar thEvAram
thalam : thiruvadhigai vIraTTam
thiruththANDagam
sixth thirumuRai
thiruvaDith thiruththANDakam
thirucciRRambalam
oru kAlththu onRAgi n^inRa aDi
UzithORUzi uyarn^tha aDi
poru kazalum pal cilambum Arkkum aDi
pukazvAr pukaz thakaiya valla aDi
irun^ilaththAr inbuRRu aN^gu Eththum aDi
inbuRRAr iTTa pU ERum aDi
thiruvadhikaith thenkeDila n^ADan aDi
thiruvIraTTAnaththu em celvan aDi. 6.6.5
thirucciRRambalam
Meaning of Thevaram
The Foot That was single once upon a time;
The Foot rose up in every deluge;
The Foot resounding with valorous anklet and many grained anklet;
The Foot deserving the fame of the hailings;
The Foot hailed happily by the people of the world;
The Foot Where the flowers offered by the blissful reaches;
The Foot of the One Who has the thiruvadhikai southern keDilam kingdom;
The Foot of our Opulent at thiruvIraTTAnam!
பொருளுரை
முன்னொரு காலத்தில் ஒரே பாதமாக இருந்த திருவடி;
ஒவ்வொரு ஊழிக்காலத்தும் உயர்ந்து நிற்கும் திருவடி;
வீரக்கழலும், பல சிலம்பும் ஒலிக்கின்ற திருவடி;
புகழ்பவரின் புகழுரைகள் (எவ்வளவுக்கும்) தகைவுடைய திருவடி;
புவி வாழ்வோர் இன்புற்று ஏத்தும் வண்ணம் (புவியில்) இருக்கின்ற திருவடி;
(அருள்) இன்பம் உற்றவர்கள் இடுகின்ற பூ சேருகின்ற திருவடி;
திருவதிகைத் தென் கெடில நாடுடையவனின் திருவடி;
திருவீரட்டானத்து இருக்கும் எம் செல்வன் திருவடி!
Notes
1. ஒரு காலத்து ஒன்றாகி நின்ற அடி
- எல்லாவற்றிற்கும் இறைவனே ஆதாரமாக விளங்குவதைக்
காட்டும் ஏக பாத மூர்த்தம். (விவரத்திற்குப் பார்க்க /forms-of-lord-shivaekapadar )
2. ஊழிதோறூழி உயர்ந்த அடி
- பிற எல்லாவும் ஊழியில் ஒடுங்க இறைவன் மட்டும்
அழியாது நின்றமை.
(ஒ: ஊழிதோறூழி முற்றும் உயர் பொன் நொடித்தான் மலை - சுந்தரர்)
3. பொருகழலும் பல்சிலம்பும்
- ஆண், பெண் காலணிகள் - உமையொருபாகர் வடிவைக் குறிப்பன.
4. புகழ்வார் புகழ் தகைய
- எத்தனை புகழ்ந்தாலும் புகழ்வு தான் குறைவே ஒழிய இறைவன்
திருவடியின் சிறப்புக்கு மிகையாகாது.
ஒ: உவமிக்கின் மெய்யே - திருவாசகம்
முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்பது என் முகம்மனே - சம்பந்தர்
பூமி மேல் புகழ் தக்க பொருளே - அப்பர்
5. இருநிலம் - பூமி.