திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருச்சண்பைநகர்
பண் : தக்கேசி
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வந்தியோடு பூசையல்லாப் போழ்தின் மறை பேசிச்
சந்தி போதிற் சமாதி செய்யுஞ் சண்பை நகர் மேய
அந்தி வண்ணன் தன்னை அழகார் ஞானசம்பந்தன் சொல்
சிந்தை செய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambanthar aruLiya thevaram
thalam : thiruccaNpain^agar
paN : thakkEci
First thirumuRai
thirucciRRambalam
van^thiyoDu pUcaiyallAp pOzthin maRai pEcic
can^thi pOthiR camAthi ceyyuny caNpai n^agar mEya
an^thi vaNNan thannai azakAr nyAnacamban^than col
cin^thai ceythu pADavallAr civagathi cErvArE.
thirucciRRambalam
Explanation of song:
On the evening color Lord at thiruccaNpainagar
where in the times when worship with salutations is not
done, vedas are spoken, samAdhi performed in the twilights,
the beautiful words of thirunyAnacambandhar
those who could mindfully sing they would reach shivagathi.
Notes:
1. van^thi - salutation.