நம்பியாரூரர் அருளிய திருப்பாட்டு
தலம் : திருநாகைக்காரோணம்
பண் : கொல்லிக் கௌவாணம்
ஏழாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பத்தூர் புக்கு இரந்துண்டு பல பதிகம் பாடிப்
பாவையரைக் கிறி பேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார் தம் எலும்பணிந்து சேவேறித் திரிவிர்
செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கொரு நாள் இரங்கீர்
முத்தாரம் இலங்கி மிளிர் மணி வயிரக் கோவை
அவை பூணத் தந்தருளீர் மெய்க்கினிதா நாறும்
கத்தூரி கமழ் சாந்து பணித்தருள வேண்டும்
கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே.
திருச்சிற்றம்பலம்
sundarar aruLiya thevaram
thalam : thirunAgaikkArONam
paN : kollikkouvANam
Seventh thirumuRai
thirucciRRambalam
paththUr pukku iran^thuNDu pala pathikam pADip
pAvaiyaraik kiRi pEcip paDiRADith thirivIr
ceththAr tham elumbaNin^thu cEvERith thirivIr
celvaththai maRaiththu vaiththIr enakkoru n^AL iraN^gIr
muththAram ilaN^gi miLir maNi vayirak kOvai
avai pUNath than^tharuLIr meykkinithA n^ARum
kaththUri kamaz cAn^thum paNiththaruLa vENDum
kaDal n^Agaik karONam mEvi irun^thIrE.
thirucciRRambalam
Explanation of song:
Going into tens of towns, begging and eating, singing many songs,
talking tricky words to the girls You keep wandering beguiling!
Wearing the bones of the dead, You wander riding the bull!
You have concealed the wealth! Empathize with me!
Bless giving pearl necklace, brightly glittering ruby-diamond
chain for wearing! For the body order the nicely fragrant kasthuri
and redolent sandal! Oh the One residing at oceanic thirunAgaik
kAyArOhaNam!
Notes:
1. As if maligning the Lord, cundharar brings out the great
qualities of the God.
2. kiRi - lies; paDiRu - cheating; cE - bull.