திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருத்தெங்கூர்
பண் பியந்தைக் காந்தாரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அடையும் வல்வினை அகல அருள்பவர் அனலுடை மழுவாட்
படையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர் புன்
சடையில் வெண்பிறை சூடித் தார்மணி அணிதரு தறுகண்
விடையர் வீங்கெழில் தெங்கூர் வெள்ளி அம் குன்றம் அமர்ந்தாரே
திருச்சிற்றம்பலம்
thirunyAna camban^dhar thirukkaDaikkAppu
thalam thiruththeN^kUr
paN piyan^thaik kAn^thAram
iraNDAm thirumuRai
thiruchchiRRambalam
aDaiyum valvinai akala aruLpavar analuDai mazuvAT
paDaiyar pAy pulith thOlar paim punaR konRaiyar paDar pun
caDaiyil venpiRai cUDith thArmaNi aNitharu thaRukaN
viDaiyar vIN^kezil theN^kUr veLLi am kunRam amarn^thArE
thiruchchiRRambalam
Meaning:
Blesses warding off the hard deeds (vinai) that are coming ;
Has the blazing axe arm; Has the skin of the charging tiger;
With the dark konRai (blooming) in water; Having the white
crescent on the widespread chaste matted hair, owns the
ferocious bull that is adorned with garland of gems;
He sits in the nice hill of silver at the thiruththeN^kUr
of rich beauty.
Notes:
1. punal - water; pun - holy; thaRukaN - ferocious;
vIN^ku - highly; ezil - beauty.