logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

vutal-thalarntha-pozhathum-vunai-yethuven

உடல் தளர்ந்த பொழுதும் உனை ஏத்துவேன்

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

   
தலம்    :    திருவாவடுதுறை 
பண்    :    காந்தாரபஞ்சமம் 
மூன்றாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
கையது வீழினும் கழிவுறினும்  
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் 
கொய்யணி நறுமலர் குலாய சென்னி 
மையணி மிடறுடை மறையவனே 
    இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல் 
    அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே. 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

   
thalam    :    thiruvAvaDuthuRai 
paN    :    gAndhAra panycamam 
Third thirumuRai 
 
thirucciRRambalam 
 
kaiyathu vIzinum kazivuRinum 
ceykazal aDiyalAl cin^thai ceyyEn 
koyyaNi n^aRumalar kulAya cenni 
maiyaNi miDaRuDai maRaiyavanE. 
    ithuvO emaiyALumARu IvathonRemakkillaiyEl 
    athuvO unathinnaruL AvaDuthuRaiyaranE. 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

   
Even if the normal flow is disturbed and become filthy 
(due to illness), I would not think of anything other  
than the Perfect ankleted Feet! 
Oh the vedin Who has the picked nice flowers 
on the head and dye in the throat! 
    If this is the way to govern us and nothing to give us, 
    that be Your nice blessings, oh the hara of thiruvAvaDuthuRai! 
 
பொருளுரை

   
(பிணியால்) முறைமை கெட்டு, கழிவிலே கிடக்கும் நிலை 
வந்தாலும், உனது செம்மையான கழலணிந்த திருவடியல்லாது 
சிந்தை செய்யமாட்டேன், 
(தேர்ந்து) கொய்த நல்ல மலர்கள் சூடிய திருமுடியும், 
கருமையுடைய கண்டத்தையும் உடைய மறையவனே! 
    இவ்வகையே எம்மை ஆளும் வகையாக,  
    எமக்குக் கொடுப்பது ஒன்றும் இல்லையானால், 
    அதனையே உனது திருவருளாகக் கொள்வோம்  
    திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் அரனே! 
 
Notes

  
1. கை - ஒழுக்கம்; சென்னி - திருமுடி. 

Related Content

Drive Away My Fear

Get firm devotion - the Glorious wealth

Drive away my fear

எல்லாம் ஈசன் அருள்

பெருந்துன்பத்திலும் உன்னைப் பாடுதல் ஒழியேன்