திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருந்து தேவன் குடி
பண் : கொல்லி
மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
விண்ணுலாவும் நெறி வீடு காட்டும் நெறி
மண்ணுலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டு தேவன் குடி
அண்ணல் ஆனேறுடை அடிகள் வேடங்களே. 3.25.5
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thirundhu dhEvan kuDi
paN : kolli
Third thirumuRai
thirucciRRambalam
viNNulAvum n^eRi vIDu kATTum n^eRi
maNNulAvum n^eRi mayakkam thIrkkum n^eRi
theNNilA veNmathi thINDu dhEvan kuDi
aNNal AnERuDai aDikaL vEDaN^gaLE. 3.25.5
thirucciRRambalam
Meaning of Thevaram
Way to wander in the heavens;
Way that shows the liberation;
Way that the earth follows;
Way that demystifies;
That are the Forms of the Reverend,
Who has the eldest bull,
Who is at the thirundhudhEvankuDi
touched by the shiny white moon!
பொருளுரை
விண்ணிலே உலவச் செய்யும் நெறியும்,
முத்திப்பேற்றை அருளும் நெறியும்,
பூமி இயங்கும் நெறியும்,
குழப்பத்தைத் தெளிவிக்கும் நெறியும் ஆவது
ஒளிமிக்க வெண்மதி தீண்டுகின்ற திருந்துதேவன்குடியில்
இருக்கின்ற எல்லாவற்றிற்கும் மூத்ததான
எருதினை உடைய அடிகளாகிய சிவபெருமானின்
திருவடிவங்களாகும்.
Notes
1. உருவமற்ற பரசிவமாகிய தன்னிலையில் உள்ள இறைவன்,
உயிர்கள் வழிபட்டு உய்யும் பொருட்டு சோதிக்குறியாக,
இலிங்கமாக, அருவுருவாக சதாசிவமூர்த்தமாய் அமைகின்றார்.
இன்னும் அவ்வரிய பெருமான் அன்பர்களுக்கு எளியவனாகத்
தன்னைக் காட்டுவித்த திருவடிவங்களே மாகேச்சுர மூர்த்தங்கள்.
(விளக்கம் காண maheshvara murtam )
பெருமானின் பெருங்கருணை வடிவங்களான இவை நம்மை
உய்விக்கும் பேரின்பம் தரும் என்பதை ஞானமுணர்ந்தார்
இத்திருப்பதிகத்தில் அறிவுறுத்துகிறார்.
2. அண்ணல் ஆனேறு - சிவபெருமானின் எருது அறம் ஆகும்.
இறைவனின் செயல்கள் என்றும் அறத்தை நிலைநிறுத்துவதாக
அமைவன. எனவே அறமே இறைவனுக்கு ஊர்தியாக அமைந்தது.
ஒ. திறந்தான் காட்டி அருளாய் என்று தேவர் அவர் வேண்ட
அறந்தான் காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே - சம்பந்தர்.
3. தெண்மை - ஒளி.