திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருப்பிரமபுரம்
பண் : சீகாமரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான்
முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன்
பெடையிலார் வண்டாடும் பொழிற் பிரமபுரத்துறையுஞ்
சடையிலார் வெண்பிறையான் தாள் பணிவார் தக்காரே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thiruppiramapuram
paN : cI kAmaram
Second thirumuRai
thirucciRRambalam
uDaiyilAr cIvaraththAr than perumai uNarvariyAn
muDaiyilAr veN thalaikkai mUrththiyAm thiruvuruvan
peDaiyilAr vaNDADum poziR piramapuraththuRaiyum
caDaiyilAr veNpiRaiyAn thAL paNivAr thakkArE.
thirucciRRambalam
Meaning of Thevaram
One of unfeelable glory by the naked and the tatter clothed!
One with the Form with stinking white skull in hand!
Qualified are those who salute the feet of the One
having white crescent in the twined hair,
residing at thiruppirampuram where the beetles dance
in pair at the gardens!
பொருளுரை
உடையில்லாது திரிபவர்களும், சீவரம் போர்த்தவர்களும்
தன்னுடைய பெருமையை உணர இயலாது நின்றவன்!
நாற்றமுடைய வெண் தலையோட்டைக் கையில் ஏந்திய
திருவுருவுடையவன்! பெடையோடு வண்டுகள் ஆடும்
பொழில்களுடைய திருப்பிரமபுரத்தில் உறையும்
சடையில் வெண்பிறை உடைய பெருமானின் திருவடிகளைப்
பணிபவர்களே தக்கவர்கள்!
Notes
1. உடையிலார் - சமணர்; சீவரத்தார் - புத்தர்;
முடை - நாற்றம்; பெடை - பெண்.