திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : திருவதிகை
பண் : கொல்லி
நான்காம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வலித்தேன் மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால் ஒருவர் துணை யாருமில்லை
சங்க வெண் குழைக் காதுடை எம்பெருமான்
கலித்தே என் வயிற்றின் அகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன
அலுத்தேன் அடியேன் அதிகைகெடில
வீரட்டானத்துறை அம்மானே. 4.1.8
திருச்சிற்றம்பலம்
thirunAvukkaracar thEvAram
thalam : thiruvadhigai
paN : kolli
Fourth thirumuRai
thirucciRRambalam
valiththEn manai vAzkkai makizn^thaDiyEn
vanycam manam onRum ilAmaiyinAl
caliththAl oruvar thuNai yArumillai
caN^ga veN kuzaik kAthuDai emperumAn
kaliththE en vayiRRin akampaDiyE
kalakki malakkiTTuk kavarn^thu thinna
aluththEn aDiyEn athikaik keDila
vIraTTAnaththu uRai ammAnE 4.1.8
thirucciRRambalam
Meaning of Thevaram
I was very innocent and hence was enjoying the
material life fully. (Now) when I get exhausted,
there is nobody to safeguard, oh my Lord
Who has white shell ear-ring!
Roaring, within my stomach, discomforting, troubling
and eroding, I am tired, oh Mother at the
vIraTTam on the bank of keDilam at thiruvadhigai.
பொருளுரை
சூது வாது தெரியாது, உலகியல் வாழ்க்கையே பொருளென்று
அதனை அனுபவித்து இருந்துவிட்டேன்!
இப்பொழுது துன்பப்படும்பொழுது யாரும் (இது
தீர்க்கும்) துணையாக இல்லை, வெண்சங்கினைக் குழையாக
அணிந்த எம்பெருமானே!
(சூலை) கத்திக்கொண்டு என் வயிற்றினுள்ளே கலக்கித்
துன்புறுத்தி அரித்துத் தின்னக், களைத்துப் போனேன்
திருவதிகைக் கெடில வீரட்டானத்தில் உறைகின்ற
அன்னை போன்றவனே!
Notes
1. வலித்தேன் மனை வாழ்க்கை
"மருள்நீக்கியாக இருந்த பொழுது இவ்வுலக இன்ப துன்பங்களே
துய்த்துக் கழித்தேன். பின் சமணத்திலும் இறைவன் அருளை
மறுத்து தன் முனைப்பினாலேயே என்னைத் திருத்தத் துணிந்தேன்.
இவ்வாறு உலகியலிலேயே உழன்ற நான், இப்பொழுது
துன்பமுறுகின்றபொழுது இவ்வகைகள் என்னைக் காக்காமை
உணர்கின்றேன். இறைவா, நீயே துணை!"
2. வலித்தல் - பெரிதென்று கருதுதல்; கலித்தல் - ஒலி செய்தல்.