logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

voonatthiran-nikkum-gnaanatthiral

ஊனத்திரள் நீக்கும் ஞானத்திரள்

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

   
தலம்    :    திருவண்ணாமலை 
பண்    :    தக்கேசி 
முதல் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
ஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல் 
ஊனத்திரளை நீக்கும் அதுவும் உண்மைப்பொருள் போலும் 
ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின் கண் 
ஆனைத்திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே. 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

  
thalam    :    thiruvaNNAmalai 
paN    :    thakkEci 
First thirumuRai 
 
thirucciRRambalam 
 
nyAnaththiraLAy n^inRa perumAn n^alla aDiyAr mEl 
UnaththiraLai n^Ikkum athuvum uNmaip poruL pOlum 
EnaththiraLODu inamAn karaDi iziyum iravin kaN 
AnaiththiraL van^thu aNaiyum cAral aNNAmalaiyArE. 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

  
The Lord Who stood as the wholesome wisdom on the good devotees. 
Removing the flaws wholly(on them), seems the True Intent. 
That is the Lord thiruvaNNAmalaiyAr of the foothill where 
the elephant herd arrives in the night in which the clan of boars, 
classic deers and bears climb down. 
 
பொருளுரை

  
பன்றிக்கூட்டங்களோடு, உயரின மான்கள், கரடிகள் இறங்கி வரும் 
இரவினில் யானைக்கூட்டங்கள் வந்து சேருகின்ற சாரலை உடைய 
திருவண்ணாமலைப் பெருமான் நல்ல அடியவர்கள் மேல்  
ஞானம் திரண்ட வடிவாக நின்ற பெருமான், 
அவர் தம் மேலுள்ள குறைகளை எல்லாம் களைகின்ற அதுவும் 
இறைவன் தரும் மெய்ப்பொருள் போலும்!  
 
Notes

  
1. சற்காரியவாதம் என்று சொல்லப்படும் சைவ சித்தாந்தத்தின் 
அடிப்படை இப்பாடலில் உள்ளது. இறைவன் நம்முடைய  
குறைபாடான ஆணவத்தை நீக்கித் தான் தரும் பேரின்பத்தைத் 
துய்ப்பதற்கு உயிரைச் செம்மைப் படுத்தும் பேருதவியை 
இங்கு உண்மைப்பொருள் என்கிறார் புகலி வேந்தர். 
2. ஊனம் - குறை; ஏனம் - பன்றி; இழிதல் - இறங்குதல். 

Related Content

Sure loss of evils

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொட

திருவண்ணாமலையின் இயற்கை அழகு

மரணத்தின் திறம் போக்கிய திருவடிகள்

அண்ணாமலையார் செயல்கள்