logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

vinaiyai-vellum-aayutham

வினையை வெல்லும் ஆயுதம்

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

 
தலம்    : பொது  
பண்    : காந்தாரபஞ்சமம் 
மூன்றாம் திருமுறை 
 
பஞ்சாக்கரத் திருப்பதிகம் 
 
திருச்சிற்றம்பலம் 
 
புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச் 
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின 
வித்தக நீறணிவார் வினைப்பகைக்கு 
அத்திரமாவன அஞ்செழுத்துமே.        3.22.10 
 
திருச்சிற்றம்பலம்

 
 
thirunyAnacamban^thar thEvAram

 
thalam    :    pothu 
paN    :    gAndhAra panycamam 
Third thirumuRai 
 
panycAkkarath thiruppathikam 
 
thirucciRRambalam 
 
buththar camaN kazukkaiyar poykoLAc 
ciththaththavarkaL theLin^thu thERina 
viththaka n^IRaNivAr vinaippakaikku 
aththiramAvana anycezuththumE.        3.22.10 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

 
Discerned and ascertained by those of conscience  
of not accepting the fallacy of buddhists and jains  
of set aside discipline! 
For the enmity of karma on those who wear the  
miraculous Holy Ash, the weapon is the Holy Five Syllables! 
 
பொருளுரை

 
புத்தர், சமணராகிய கடை ஒழுக்கத்தினர்களின் பொய் மொழிகளைக் 
கொள்ளாத சித்தமுடையவர்கள் தெளிந்து உறுதியும் அடைந்தன; 
வித்தகமான திருநீற்றினை அணிபவர்களின் வினையாகிய 
பகையை அழிக்கும் ஆயுதமாவன திருவைந்தெழுத்தே! 
 
Notes

 
1. கழுக்கையர் - கடை ஆசாரத்தார் (கை - ஒழுக்கம்);  
அத்திரம் - (அஸ்திரம்) - படை. 

Related Content

Five Deeds of Lord

Sure loss of evils

The Best Wealth

Help in Distress

Medicine for Unconsciousness