நம்பிஆரூரர் அருளிய திருப்பாட்டு
தலம் : திருக்கச்சிமேற்றளி
பண் : நட்டராகம்
ஏழாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
நொந்தா ஒண் சுடரே நுனையே நினைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற
சிந்தாய் எந்தை பிரான் திருமேற்றளி உறையும்
எந்தாய் உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே.
திருச்சிற்றம்பலம்
nambiArUrar aruLiya thiruppATTu
thalam : thirukkachimEtRaLi
paN : naTTarAgam
Seventh thirumuRai
thirucciRRambalam
n^on^thA oN cuDarE n^unaiyE n^inain^thirun^thEn
van^thAy pOyaRiyAy manamE pukun^thu n^inRa
cin^thAy en^thai pirAn thirumERRaLi uRaiyum
en^thAy unnaiyallAl iniyEththa mATTEnE.
thirucciRRambalam
Translation of song:
Oh the ceaseless glowing Flame! I had been thinking only of You!
You came! Never knew to leave! Oh the Conscience that entered the mind!
Oh the Lord of my father! Oh my Mother Who resides in the
western abode (kaccith thirumERRaLi) , other than You
I will not hail anybody else hereafter!
Notes:
1. n^on^thA - non-extinguishing; oNmai - glitter.