logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

udalin-perumai

உடலின் பெருமை

 
 

திருநாவுக்கரசர் தேவாரம்

 
தலம்    :    பொது 
திருக்குறுந்தொகை 
ஐந்தாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
நடலை வாழ்வுகொண்டு என் செய்திர் நாணிலீர் 
சுடலை சேர்வது சொற்பிரமாணமே 
கடலின் நஞ்சமுது உண்டவர் கைவிட்டால் 
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே.        5.90.4 
 
திருச்சிற்றம்பலம் 
 
thirunAvukkaracar thEvAram

 
thalam    :    pothu 
thirukkuRunthokai 
Fifth thirumuRai 
 
thirucciRRambalam 
 
n^aDalai vAzvu koNDu en ceythir n^ANilIr 
cuDalai cEvathu coRpiramANamE 
kaDalin n^anycamuthu uNDavar kaiviTTAl 
uDalinAr kiDan^thu Ur muni paNDamE.        5.90.4 
 
thirucciRRambalam 
 
Meaning

 
Oh the shameless, what do you do with the shivering life? 
Getting to the cemetery is a fact of the matter. 
If the One, Who ate the poison of the ocean as the ambrosia, 
forsakes, the body is something looked at with aversion by the town. 
 
பொருளுரை


நடுங்கி வாழும் வாழ்வினைக் கொண்டு நாணமற்றவர்களே என் செய்கின்றீர்கள்? 
சுடுகாடு சேர்வது உறுதி! 
கடலின் நஞ்சினை அமுதமாக உண்டவர் கைவிட்டால் 
இவ்வுடலானது ஊரார் வெறுக்கத்தக்க பண்டமாகக் (பிணமாகக்) கிடக்கும். 
 
Notes

 
1. உடலைப் பேணுதலிலேயே காலத்தை வீணாக்காதீர்.  
இவ்வுடலானது ஒரு நாள் உயிர் பிரிந்த பொழுது  
ஊரார் பிணம் என்று சொல்லி வெறுக்கத்தக்க பொருளாகக் 
கிடக்கும். (அதன் முன் சிவபெருமானைப் போற்றுங்கள்.) 
2. நடலை - நடுக்கம்; சொற்பிரமாணம் - உறுதியான மொழி; 
முனி - சினங்கொள்ளும்/வெறுக்கும். 

Related Content

How to get rid of all three types of karma ?

My duty is just to keep serving

What is the most virtuous deed you did ?

Why Fear ?

Want Time-pass ?