சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கையுந் தலைமிசை புனை அஞ்சலியன; கண்ணும் பொழிமழை ஒழியாதே
பெய்யுந் தகையன; கரணங்களும் உடன் உருகும் பரிவின; பேறெய்தும்
மெய்யுந் தரைமிசை விழுமுன்பு எழுதரும்; மின்தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவின்றால்.
திருச்சிற்றம்பலம்
cEkkizAr aruLiya thiruththoNDar purANam
thirun^Avukkaracu cuvAmikaL purANam
panniraNDAm thirumuRai
thirucciRRambalam
kayum thalaimicai punai anycaliyana; kaNNum pozimazai oziyAthE
peyyum thakaiyana; karaNaN^kaLum uDan urugum parivina; pEReythum
meyyum tharaimicai vizumunbu ezutharum; minthAz caDaiyoDu n^inRADum
aiyan thirun^aDam edhir kumbiDum avar Arvam perukuthal aLavinRAl.
thirucciRRambalam
Translation of song:
The Hands on the head folded to salute;
The Eyes shower the rain incessantly;
The (internal) instruments of the quality of immediate melting;
The blessed body even before falling on the earth gets up (in zeal);
The upsurge of his ardor, while saluting straight the holy dance
of the Chief Who dances with the lightning like low lying entwined hair,
was boundless.
Notes:
1. This was the state of appar perumAn as he saluted the
Lord at thillaic ciRRambalam.