திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் பொது
பண் இந்தளம்
நான்காம் திருமுறை
விடந்தீர்த்த திருப்பதிகம்
திருச்சிற்றம்பலம்
ஒன்றுகொலாம் அவர் சிந்தை உயர் வரை
ஒன்றுகொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்றுகொலாம் இடு வெண் தலை கையது
ஒன்றுகொலாம் அவர் ஊர்வது தானே.
திருச்சிற்றம்பலம்
thirunAvukkararcar thEvAram
thalam pothu
paN in^thaLam
nAngAm thirumuRai
viDan^thIrththa thiruppathikam
thirucciRRambalam
onRukolAm avar cin^thai uyar varai
onRukolAm uyarum mathi cUDuvar
onRukolAm iDu veN thalai kaiyathu
onRukolAm avar Urvathu thAnE.
thirucciRRambalam
Meaning:
One is the mount that His mind hovers over;
One is the raising crescent that He wears;
One is the white skull for putting (alms) in His hand;
One is (the vehicle) what He rides on.
Notes:
1. This padhikam was sung brining back to life the son
of appUdhi aDikaL. (Details could be found at Appudhi Adigal )
So this padhikam is also known as viDam thIrththa thiruppadhikam.