திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருக்காளத்தி
பண் சாதாரி
மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வானவர்கள் தானவர்கள் வாதைபட
வந்ததொரு மாகடல் விடம்
தானமுது செய்து அருள்புரிந்த சிவன்
மேவுமலை தன்னை வினவில்
ஏனம் இள மானினொடு கிள்ளை தினை
கொள்ள எழிலார் கவணினால்
கானவர் தம் மாமகளிர் கனகமணி
விலகு காளத்தி மலையே.
திருச்சிற்றம்பலம்
thirunyAna camban^dhar thirukkaDaikkAppu
thalam thirukkALaththi
paN cAthAri
mUnRAm thirumuRai
thiruchchiRRambalam
vAnavarkaL thAnavarkaL vAthai paDa
van^thathoru mAkaDal viDam
thAnamudhu ceydhu aruLpurin^tha civan
mEvumalai thannai vinavil
Enam iLa mAninoDu kiLLai thinai
koLLa ezilAr kavaNinAl
kAnavar tham mAmakaLir kanakamaNi
vilagu kALaththimalaiyE.
thiruchchiRRambalam
Meaning:
If asked which is the mountain of the shiva,
Who blessed consuming the poison of the ocean
that came as the killer to those of the worlds above
and worlds below (devas & asuras),
with the pig and deer, parrot taking away thinai
grains, (to prevent which) the great girls of the
foresters throw the beautiful slings which are
nothing but golden gems - such is the thirukkALaththi
mountain (kAlahsthi).
Notes:
1. Enam - pig; kiLLai - parrot; kavaN - sling - thrown to
drive away the birds; kanakam - gold.