logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

thivinai-thaakinaal-yen-cheyya

தீவினை தாக்கினால் என் செய்ய

 
 
திருஞானசம்பந்தர் தேவாரம் 
தலம் : திருவாவடுதுறை 
பண் : காந்தாரபஞ்சமம் 
மூன்றாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
வெப்பொடு விரவியோர் வினைவரினும் 
அப்பா உன் அடியலால் அரற்றாதென் நா 
ஒப்புடை ஒருவனை உருவழிய 
அப்படி அழலெழ விழித்தவனே 
    இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல் 
    அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே. 
 
திருச்சிற்றம்பலம் 
 
Thirugnanachambandhar Thevaram 
Thalam    :    Thiruvavaduthurai 
paN    :    Gaandhaarapanchamam 
Third Thirumurai 
 
Thiruchitrambalam 
 
veppoDu viraviyOr vinai varinum 
appA un aDiyalAl araRRAthen n^A 
oppuDai oruvanai uruvaziya 
appaDi azaleza viziththavanE. 
    ithuvO emaiyALumARu IvathonRemakkillaiyEl 
    athuvO unathinnaruL AvaDuthuRaiyaranE. 
 
Thiruchitrambalam 
 
Meaning: 
Even if the karma comes in fieriness 
oh my Father, other than Your Feet my tongue will not utter! 
Oh the One Who stared raising the fire  
at the one parallel (in looks) destroying his form! 
    If this is the way to govern us and nothing to give us, 
    that be Your nice blessings, oh the hara of thiruvAvaDuthuRai! 
 
பொருளுரை: 
வெம்மை மிகுந்ததாகத் தாக்கக் கொடுவினை வந்தாலும், 
அப்பா, உனது திருவடியல்லாது என் நாக்கு அரற்றாது. 
ஒப்பான உருவம் உடைய ஒருவனை  
உருவழியத் தீயெழ விழித்தவனே! 
    இவ்வகையே எம்மை ஆளும் வகையாக, 
    எமக்குக் கொடுப்பது ஒன்றும் இல்லையானால், 
    அதனையே உனது திருவருளாகக் கொள்வோம் 
    திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் அரனே! 
 
Notes: 
1. ஒப்புடை ஒருவன் - சிவபெருமான் போன்று அழகான  
மைந்தனை வேண்டி மன்மதனைத் திருமால் மகனாகப் பெற்றார். 
அம்மதனனை எரித்த நிகழ்வு இங்கு சுட்டப்படுகின்றது. 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை