திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் திருவன்னியூர்
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
இயலு மாலொடு நான்முகன் செய்தவம்
முயலிற் காண்பரிதாய் நின்ற மூர்த்திதான்
அயலெலாம் அன்ன மேயும் அந்தாமரை
வயலெலாங் கயல் பாய் வன்னியூரரே.
திருச்சிற்றம்பலம்
thirunAvukkararcar thEvAram
thalam thiruvanniyUr
thirukkuRunthokai
ainthAm thirumuRai
thirucciRRambalam
iyalu mAloDu n^Anmugan ceythavam
muyaliR kANbarithAy n^inRa mUrthi thAn
ayalelAm annam mEyum an^thAmarai
vayalelAm kayal pAy vanniyUrarE.
thirucciRRambalam
Translation of song:
The Form that was difficult to be seen
for the austerity that viShNu and brahma tried,
all around swans drifting, on all the beautiful
lotus fields kayal fishes flow that thiruvanniyUr Lord.
Notes: