திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் : திருவையாறு
பண் : தக்கராகம்
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வரையொன்றது எடுத்த அரக்கன்
சிரமங்க நெரித்தவர் சேர்வாம்
விரையின் மலர் மேதகு பொன்னித்
திரை தன்னொடு சேரும் ஐயாறே
திருச்சிற்றம்பலம்
thirunyAnacambandhar thirukkaDaikkAppu
thalam thiruvaiyARu
paN thakkarAgam
muthal thirumuRai
thirucciRRambalam
varaiyonRathu eDuththa arakkan
ciramaN^ga n^eriththavar cErvAm
viraiyin malar mEthaku ponnith
thirai thannoDu cErum aiyARE.
thirucciRRambalam
Meaning of song:
The residence of the One, Who crushed the head
and body of the demon who lifted up the mountain,
is thiruvaiyARu where the fragrant flowers mix with
the waves of great kAviri.
Notes:
1. varai - mount; virai - fragrance; ponni - kAviri river.