திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருவண்ணாமலை
பண் : நட்டபாடை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வெம்புந்திய கதிரோன் ஒளி விலகும் விரி சாரல்
அம்புந்தி மூ எயிலெய்தவன் அண்ணாமலை அதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர் காழியுள் ஞான
சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thiruvaNNAmalai
paN : naTTapADai
First thirumuRai
thirucciRRambalam
vembun^thiya kathirOn oLi vilagum viri cAral
ambun^thi mU eyileythavan aNNAmalai athanaik
kombun^dhuva kuyil Aluva kuLir kAziyuL nyAna
camban^thana thamiz vallavar aDi pENuthal thavamE.
thirucciRRambalam
Meaning of Thevaram
Those who are adept in the thamiz of thirunyAnacambandhar
of cool cIrkAzi where cornet plays and kuyil sings,
- on the foothill where the rays of hot sun diverge,
the thiruvaNNAmalai of the One Who shot the three forts firing an arrow
- worshipping their feet is the austerity!
பொருளுரை
வெப்பம் மிகுத்து வரும் கதிரவனின் ஒளிக்கதிர்களைக் கூறாக்கும்
விரிந்த சாரலாம், அம்பினைக் எய்து முப்புரம் வீழ்த்திய பெருமானின்
திருவண்ணாமலையைக், கொம்புகள் இசைக்கக் குயில்கள் பாடும்
குளிர்ச்சியான சீர்காழியின் திருஞானசம்பந்தன் சொன்ன தமிழ்களை(ப் பாட)
வல்லவர்களுடைய திருவடிகளை வழிபடுதலே தவமாகும்.
Notes
1. திருஞானசம்பந்தப் பெருமானின் தேவாரத்திற்குத் திருக்கடைக்காப்பு
என்றே சிறப்புப் பெயர். இத்திருக்கடைக்காப்புச் செய்யுள்கள்
இறைவனைத் தோத்தரிப்பதால் வரும் பயன்களைப் பறைசாற்றும்.
திருஞானசம்பந்தர் இறைவன் திருவருள் வழி நின்று
"எனதுரை தனதுரையாக"ப் பாடிய தமிழ் வேதமாகிய இவற்றை
வல்லவர் திருவடி சார்ந்து ஒழுகுவார் பெருந்தவவாணர்.
(ஒப்: நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை
பாடும் ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே)
2. வெம்பு - வெப்பம்; எயில் - கோட்டை; ஆலுதல் - ஒலித்தல்.