திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருவூறல்
பண் வியாழக் குறிஞ்சி
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
எண் திசையோர் மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு
சண்டி தொழ அளித்தான் அவன்றாழும் இடம் வினவில்
கொண்டல்கள் தங்கு பொழிற் குளிர்பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை
உண்டபிரான் அமருந் திருவூறலை உள்குதுமே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacambandhar thirukkaDaikkAppu
thalam thiruvURal
paN viyAzakkuRinyci
muthal thirumuRai
thirucciRRambalam
eN thicaiyOr makiza ezilmAlaiyum pOnagamum paNDu
caNDi thoza aLiththAn avanRAzum iDam vinavil
koNDalkaL thaN^gu poziR kuLirpoykaikaL cUzn^thu n^anycai
uNDapirAn amarun^ thiruvURalai uLguthumE.
thirucciRRambalam
Translation of song:
For those in (all) the eight directions rejoice, beautiful
garland and food earlier He gave to chaNDIshar as he
worshipped. If the place He came down is asked,
it is thiruvURal that we emotionally think, that is the place
surrounded by the cool ponds, cloud resting gardens
and where the Lord, Who ate poison, sit.
Notes:
1. pOnakam - food; koNDal - cloud; uLgal - passionately think.