திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : திருநள்ளாறு
திருத்தாண்டகம்
ஆறாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
குலம் கொடுத்துக் கோள் நீக்க வல்லான் தன்னைக்
குலவரையன் மடப்பாவை இடப்பாலானை
மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட
மறையவனைப் பிறைதவழ் செஞ்சடையினானைச்
சலங்கெடுத்துத் தயாமூல தன்மம் என்னுந்
தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கெல்லாம்
நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே.
திருச்சிற்றம்பலம்
thirun^Avukkaracar thEvAram
thalam thirunaLLARu
thiruththANDakam
ARAm thirumuRai
thirucciRRambalam
kulam keDuththuk kOL n^Ikka vallAn thannaik
kulavaraiyan maDappAvai iDappAlAnai
malaN^keDuththu mAthIrththam ATTik koNDa
maRaiyavanaip piRaithavaz cenycaDaiyinAnaic
calaN^keDuththuth dhayAmUla thanmam ennun^
thaththuvaththin vazi n^inRu thAzn^thOrkkellAm
n^alaN^koDukkum n^ambiyai n^aLLARRAnai
n^AnaDiyEn n^inaikkappeRRu uyn^thavARE.
thirucciRRambalam
Meaning of thirunavukkarasar thevaram:
The Provider of (good) tradition,
the One Capable of removing of ill-effects,
the One Who has the daughter of the grand mountain in the left,
the vEdin Who removed the filth and bathed in the holy water and enslaved,
the Red-Matted-Haired Lord with the crawling crescent,
our Beloved Who is Meritorious to those who get rid of vehemence
and bow down standing in the path of "mercy-based-discipline",
the Lord of thirunaLLARu, Him, I the slave, got to think of and uplifted !
Notes: