திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : பொது
பண் : பியந்தைக் காந்தாரம்
நான்காம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கணிவளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி
கழல் கால் சிலம்ப அழகார்
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ண
இயலார் ஒருவர் இருவர்
மணிகிளர் மஞ்ஞை ஆல மழையாடு சோலை
மலையான் மகட்கும் இறைவர்
அணிகிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம்
அவர் வண்ண வண்ணம் அழலே.
திருச்சிற்றம்பலம்
thirun^Avukkaracar thEvAram
thalam common
paN piyan^thaik kAn^thAram
n^AnkAm thirumuRai
thiruchchiRRambalam
kaNivaLar vEN^gaiyODu kaDi thiN^gaL kaNNi
kazal kAl cilamba azakAr
aNi kiLar Ara veLlai thavaz cuNNa vaNNa
iyalAr oruvar iruvar
maNikiLar manynyai Ala mazaiyADu cOlai
malaiyAn makaTkum iRaivar
aNikiLar anna vaNNam avaL vaNNa vaNNam
avar vaNNa vaNNam azalE.
thiruchchiRRambalam
Meaning:
vEN^gai, bright moon crescent, anklet tinkling in the foot,
beautiful garland, whitish ash - the One decorated with
these colorful things is Two in nature (shiva & shakti).
He is the God also for the girl of the mountains (pArvati)
rich of rain forests where the embellished peacock dances.
Decorated beauty of the swan is Her colorful form;
His colorful form is that of blaze.
Notes:
1. malaiyAn makaTkum iRaivar. Lord shiva is the God
of pArvati. Of course He is the God of us all. The
also in "makaTkum" indicates that.
2. chandham in this songs appealing - especially the
last two lines.
3. kaNi - a type of vEN^gai tree; kaNNi - knot (made of
moon); manynyai - peacock; Ala - dance; azal - fire.