logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

thalai-cherantha-manithar-yaar

தலை சிறந்த மனிதர் யார்?

 
 

திருநாவுக்கரசர் தேவாரம்

 
தலம்    : திருப்பூவனூர் 
திருக்குறுந்தொகை 
ஐந்தாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
அனுசயப்பட்டு அது இது என்னாதே 
கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கிப் 
புனிதனைப் பூவனூரனைப் போற்றுவார் 
மனிதரில் தலையான மனிதரே.        5.65.6 
 
திருச்சிற்றம்பலம் 
 
thirunAvukkaracar thEvAram

 
thalam    :    kOyil 
thirukkuRunthokai 
Fifth thirumuRai 
 
thirucciRRambalam 
 
anucayappaTTu athu ithu ennAthE 
kani manaththoDu kaNkaLum n^Ir malkip 
punithanaip pUvanUranaip pORRuvAr 
manitharil thalaiyAna manitharE.        5.65.6 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

 
Not getting into aversion and saying, "this" "that", 
with the ripe mind, eyes brimming with tears, 
those who hail the Chaste, the Lord of thiruppUvanUr 
they are the superior humans. 
 
பொருளுரை


ஒவ்வாமை கொண்டு "அது" "இது" என்று கூறிக்கழியாது, 
கனிந்த மனத்தோடு, கண்கள் நீர் மல்கப் 
புனிதனான திருப்பூவனூர் இறைவனைப் போற்றுவார்கள் 
மனிதர்களிலெல்லாம் சிறந்த மனிதர்கள். 
 
Notes

 
1. பெரும்பான்மை நேரத்தையும் குற்றம் காண்பதிலும், 
வெற்றாராய்ச்சிகளிலும் வீண் செய்யாது, 
சிவபெருமானின் திருவடிகளுக்கு அன்பு செலுத்தி 
உய்பவர்களே மனிதப் பிறவியின் பயன்கொண்டு உயர்ந்தோர். 
2. லோகத டொங்கவ நீவேகே தித்துவிரி 
   நிம்ம நிம்ம தனுவ சந்தைசிகொள்ளி - பசவண்ணர். 
   (உலகத்தார் குற்றங்களை நீங்கள் ஏன் திருத்துகிறீர். 
    உங்கள் செய்லைச் சரிசெய்துகொள்ளுங்கள்.) 
3. அனுசயம் - பச்சாத்தாபம்/இழிவு நோக்கம். 

Related Content