திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : பொது
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
ஆளாகார்; ஆளானாரை அடைந்துய்யார்;
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்;
தோளாத சுரையோ தொழும்பர் செவி?
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே. 5.90.3
திருச்சிற்றம்பலம்
thirunAvukkaracar thEvAram
thalam : pothu
thirukkuRunthokai
Fifth thirumuRai
thirucciRRambalam
ALAkAr ALAnArai aDain^dhuyyAr
mILA ATceythu meymmaiyuL n^iRkilAr
thOLAtha curaiyO thozumbar cevi
vALA mAyn^thu maNNAkik kazivarE.. 5.90.3
thirucciRRambalam
Meaning of Thevaram
They do not get into the fold;
Nor do they reach out to those
who got into the fold and get uplifted;
They do not stand in truth doing the
irreversible slavery (to God);
Are the ears of these in service unpierced gourd?
Uselessly they die to become the soil.
பொருளுரை
தாமாக ஆட்செய்யவும் மாட்டார்கள்;
ஆட்செய்த பெரியோர்களை அடைந்து
அதன் மூலம் உய்வடையவும் மாட்டார்கள்;
மீளாத அடிமை செய்து மெய்ந்னெறியில் நிற்க மாட்டார்கள்;
சேவையில் இருந்தும் இவர்களுடைய செவிகள்
(நல்ல அறிவுறைகளைக் கேட்காமையால்)
துளையிடப்படாத சுரைக்காய் போன்றவையோ?
பயனின்றி இறந்து மண்ணாகிக் கழிகின்றனரே!
Notes
1. இறைவனுடைய கருணையையும், உயிரின்
உய்வு எது என்பதையும் உணர்ந்து சிவபெருமானுக்கு
அடிமை செய்ய வேண்டும். அங்கணம் செய்ய
இயலாதவர்கள், ஆட்செய்து செம்மை நெறியில் நிற்கின்ற
பெரியோர்களைச் சார்ந்து ஒழுகியாவது உய்யும் நெறி
காணவேண்டும். அவ்வாறு தானும் தெரியாமல்,
தெரிந்தோர் கூறுவதையும் கேட்காமல், இயங்குபவர்களுடைய
செவிகள் துளையற்றுச் சுரைக்காய் போன்றதே ஆகும்.
அத்தகையோர் ஒரு பயனும் இன்றிச் செத்து மண்ணோடு
மண்ணாகின்றனர்.
2. ஒ. பனையுள் இருந்த பருந்தது போல
நினையாதவர்க்கு இல்லை நின் இன்பம் தானே - திருமந்திரம்.
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் பெறாத செவி - குறள்.