logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

tamil-rhyme

Tamil Rhyme


திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம்    திருப்பிரமபுரம்
பண்    சாதாரி
மூன்றாம் திருமுறை

வழிமொழித் திருவிராகம்

திருச்சிற்றம்பலம்

நச்சரவு கச்செனவ சைச்சுமதி
    யுச்சியின்மி லைச்சொருகையான்
மெய்ச்சிர மனைச்சுலகி னிச்சமிடு
    பிச்சையமர் பிச்சனிடமாம்
மச்சமத நச்சிமத மச்சிறுமி
    யைச்செய்தவ வச்சவிரதக்
கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்க
    ணச்சிமிடை கொச்சைநகரே.

(நச்சரவு கச்சென அசைச்சு மதி
    உச்சியின் மிலைச்சு ஒருகையான்
மெய்ச்சிரம் அனைச்சு உலகின் நிச்சமிடு
    பிச்சையமர் பிச்சனிடமாம்
மச்ச மத நச்சி மதமச்சிறுமி
    யைச் செய்த அவச் சவிரதக்
கொச்சை முரவு அச்சர் பணியச் சுரர்கள்
    நச்சி மிடை கொச்சை நகரே.)

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar thirukkaDaikkAppu
thalam    thiruppiramapuram
paN    cAthAri
mUnRAm thirumuRai

vazimozith thiruvirAkam

thirucciRRambalam

n^accaravu kaccenava caiccumathi
    yucciyinmi laiccorukaiyAn
meyccira manaicculaki niccamiDu
    piccaiyamar piccaniDamAm
maccamatha n^accimatha macciRumI
    yaicceythava vaccavirathak
koccaimura vaccarpaNi yaccurarka
    NaccimiDai koccain^agarE.

thirucciRRambalam


Meaning of song:


Tying the venomous snake as the belt,
wearing the crescent to crown,
one hand with the real skull the Crazy 
Who goes on alms in the whole world,
His place is thirukkoccaivayam, where
the great sage (father-like) worshipped
to get rid of the stink he got due to
the improper deed to good austerity
he committed out of desire on the
fisherwoman, and where the divines
zealously crowd (to worship).

Notes:
1. Another ruby from the mount of great
songs the prodigy sambandhar composed.
Tells in rhyme the stories associated with 
cIrkAzi.
2. milaiccal - wear; mathamacciRumi - fishing girl;
koccai - foul smell; muravu - to break; 
n^acci - eagerly; miDai - dense crowding.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை